Breaking News LIVE: சிறுத்தைக்கு பயந்து காருக்குள் பதுங்கிய 5 பேர் மீட்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
திருப்பத்தூரில் கார் ஷெட்டில் புகுந்த சிறுத்தைக்கு பயந்து காருக்குள் தவித்த 5 பேரை போலீசார் மீட்டுள்ளனர்.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பனின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலைப் பார்த்து சொந்த ஊர் மக்கள் கதறி அழும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூரில் மூகாம்மிட்டுள்ள சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தர்மபுரியில் இருந்து மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
பின்னர் சிறுத்தை எவ்வாறு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது என பல்வேறு ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
உக்ரைன் உடனான போரை நிறுத்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும், நேட்டோ அமைப்பில் சேரமாட்டோம் என்று உக்ரைன் உத்தரவாதம் தர வேண்டும் என்றும் ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
சிறுத்தையை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் வனத்துறையினர் எடுத்து வருகின்றனர் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்: சிறுத்தையை பிடிக்க தயார் நிலையில் வலைகளையும் கூண்டுகளையும் வைத்துள்ளோம், இதன் காரணமாக பொதுமக்கள் எவரும் அச்சப்பட தேவையில்லை . எனவே பொதுமக்கள் அனைவரும் சிறுத்தை பிடிக்கும் வரை ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் மாவட்ட வனத்துறை அலுவலர் மகேந்திரன் கேட்டுக்கொண்டார்.
மேலும் சிறுத்தை பிடிக்க ஓசூரில் இருந்து மூன்று குழுக்களும் சேலத்தில் இருந்து மூன்று குழுக்களும் திருப்பத்தியில் இருந்து ஐந்து குழுக்களும் அடங்கிய 50 பேர் கொண்ட குழுவினர் சிறுத்தை பிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இன்னும் சிறிது நேரத்தில் சிறுத்தையை பிடித்து விடுவோம் என மாவட்ட வனத்துறை அலுவலர் மகேந்திரன் செய்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர்: பள்ளிக்குள் சிறுத்தை புகுந்து வெளியே சென்ற நிலையில், பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தோம் என மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்: சிறுத்தை நுழைந்த கார் செட்டிற்குள், அங்கிருந்த 2 காருக்குள் 5 பேர் மாட்டிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவிற்கு கிடைத்துள்ள இந்த வெற்றி நிரந்தரம் இல்லை.2026 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும். கூட்டணிக்குள் ஈகோவிற்கு இடமில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிட வேண்டும் என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது. அடுத்து பிரதமர் மோடி எப்போது தமிழகம் வருகிறார் என நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்
தீமை செய்து தோற்றால் அவமானம்!
ஆனால்.. நல்லது செய்து தோற்றோம்!
மரியாதையுடன் எழுவோம்!
மக்களின் குரலை எதிரொலிப்போம்!
என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அபார வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி படுதோல்வி அடைந்தார். இதையெடுத்தே ஜெகன் மோகன் கட்சியைச் சேர்ந்த ரோஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
* திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பெண் அருந்ததி சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்ததாகவும் இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்
* காதல் ஜோடிகளுக்கு நேற்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்தில் திருமணம் நடந்துள்ளது
* இதனை அறிந்த பெண் வீட்டைச் சேர்ந்த தந்தை மற்றும் பத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் பெண்ணை அழைத்துச் செல்லுல வந்த போது அடித்து ரகளை ஈடுபட்டுள்ளனர்
* இந்த நிலையில் பெண்ணை அழைத்துச் செல்ல வந்த பெண் வீட்டார் பெண் வர மறுத்ததால் கட்சி நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்
* இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டாருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது
* பெண் வீட்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் கண்ணாடி இருக்கைகள் கதவு உள்ளிட்ட பகுதியில் அடித்து நொறுக்கிய ரகளை ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நந்தனம் அரசுக்கல்லூரி இரு பாலர் படிக்கும் கல்லூரியாக மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் இடை நிற்றல் அதிகரிப்பதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும் இதன் மூலம் தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஜி7 மாநாட்டில் பங்கேற்க சென்றபோது இந்திய பிரதமர் மோடி, போப் பிரான்சிலை சந்தித்து பேசினார். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
திருப்பத்தூர்: கார் செட்டிற்குள் நுழைந்த சிறுத்தையை சுற்றி வளைத்த வனத்துறையினர். இந்நிலையில் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூர்: சிறுத்தை உள்ள பகுதியை, வனத்துறையினர் சுற்றி வளைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
திருப்பத்தூரில் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் நிலையில், சேலத்தில் ( காடையாம்பட்டி, மேட்டூர் ) பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் மக்கள் வன பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருப்பத்தூர்: சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், அப்பகுதி மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக , துப்பாக்கியை தயாராக வைத்துள்ளனர்
திருப்பத்தூர்: சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர். மேலும், சுற்றியுள்ள பகுதியில் யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுத்தை நடமாட்டத்தால், அருகே உள்ள 2 பள்ளிகள் உள்ள மாணவர்கள் பாதுகாப்பாக வெளியே விடாமல் பள்ளியிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.
கார் செட்டிற்குள் இருப்பதாக கூறப்படும் சிறுத்ததையை பிடிக்க வனத்துறையினர் குழு அமைத்துள்ளனர்.
திருப்பத்தூர்: சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுத்தை நடமாடும் ஆட்சியர் அலுவகத்தை சுற்றி வனத்துறையினர், தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சிறுத்தை புகுந்த புகுந்த சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கார் செட்டில் புகுந்த சிறுத்தை காட்சிகள்
சிறுத்தை புகுந்த தனியார் பள்ளியிலிருந்து மாணவிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
Breaking News LIVE: திருப்பத்தூர் பள்ளியிலிருந்து கார் செட்டிற்குள் சிறுத்தை தஞ்சம் அடைந்துள்ளது.
திருப்பத்தூர் தனியார் பள்ளியிலிருந்து குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை புகுந்ததால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. மேலும் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முதியவர் மீது தாக்கிச் சென்றதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இதையடுத்து, மாணவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
போக்சோ வழக்கில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாளான இன்று 181 புள்ளிகள் ஏற்றத்துடன் 76,992 புள்ளிகளில் சென்செக்ஸ் வர்த்தகமானது. நிஃப்டி 66 புள்ளிகள் ஏற்றத்துடன் 23, 565 புள்ளிகளில் வர்த்தகமானது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
தருமபுரி சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் கணவாய் பகுதியில் அரசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் மூன்று பேர் படுகாயம்-அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த அரசு பள்ளி மாணவர்கள் 13 பேர் உயிர் தப்பினர்.
மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைனில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுக்கட்டாக ரூ.15 கோடியை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்ட விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து போலீசார் மோப்பநாய் உதவியுடன் பள்ளியில் சோதனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் பள்ளியின் முன்பு குழந்தைகளை அழைத்துச்செல்ல காத்திருக்கின்ற்னர். மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனை சந்தித்தது பெரும் மகிழ்ச்சி என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும், தமிழிசையும் நேரில் சந்தித்து பேசினர்.
காவிரியில் ஜூன் மாதத்துக்கான 9 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 97வது கூட்டத்தில் தமிழ்நாடு வலியுறுத்தியுள்ளது.
காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 97வது கூட்டம் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உறுப்பினரும் நீர்வள ஆதாரத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளருமான எம்.சுப்பிரமணியம் பங்கேற்றுள்ளார்.
ஆந்திர மாநில அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆந்திராவின் துணை முதலமைச்சராக பவன் கல்யாண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித்துறை, வனம் உள்ளிட்ட துறைகள் பவன் கல்யாணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கும்பகோணம்: தேவராயன்பேட்டை கிராமத்தில் வீட்டு கட்டும்போது கண்டெடுக்கப்பட்ட 13 ஐம்பொன் சிலைகள் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பு
திமுக அரசுக்கு தைரியம், திராணி இருந்தால் இந்து கோயில்கள் போல மற்ற மதத்தை சேர்ந்த தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கும் கட்டுபாடுகள் கொண்டு வர வேண்டும் - மன்னார்குடி செண்டலங்கார ஜீயர்
Breaking News LIVE: கொல்கத்தா ஆக்ரோபோலிஸ் வணிக வளாகத்தில் தீ விபத்து.. புகை பெருமளவில் ஏற்பட்டிருப்பதால், வணிக வளாகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேற்றம்
Vikravandi By - Election: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பாமக போட்டியிடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
வருகின்ற சூலை 10 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மருத்துவர் அபிநயா (முதுகலை ஓமியோபதி மருத்துவம் B.H.M.S., MD) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு| தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும் விடுதலை - சென்னை உயர் நீதிமன்றம்
சுதா கொங்கரா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள ‘சர்ஃபிரா’ திரைப்படம் ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு! சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக்கான இப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்
குவைத் தீ விபத்து : 7 தமிழர்களின் உடல்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. சாலை வழியே ஆம்புலன்சில் அவரவர் ஊர்களுக்கு உடல்கள் எடுத்துச் செல்லப்பட இருக்கின்றன
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் மஸ்தான் அஞ்சலி. உயிரிழந்தவர்களுக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் எம்ஜிஆர் நகரில் உள்ள கண்ணகி காலனியை சேர்ந்தவர் சித்திரைவேல். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி பெருமாள் அம்மாள். இவர்களுக்கு சப்பானி முத்தையா என்ற 25 வயதுடைய மகன் சிவகாசி மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் சப்பானி முத்தையா தனது தேவைக்காக பலரிடம் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான வட்டியை தொடர்ந்து கட்டி வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் சப்பானி முத்தையாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வட்டியை செலுத்த முடியாமல் இருந்து வந்துள்ளார்.
அப்போது அவரது தாயார் பெருமாள் அம்மாளை வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு கடனுக்கு வட்டியை செலுத்த கூறியுள்ளார். இதற்கு பெருமாள் அம்மாள் மறுத்து உறவினர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த தூய்மை பணியாளர் சப்பானி முத்தையா அவர்களது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பெருமாள் அம்மாள் திருத்தங்கல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தூய்மை பணியாளர் சப்பானி முத்தையா தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் வாழ விரும்பினாலும் கடன் பிரச்சனையால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் அழுதபடி பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பதிலாக பரவி வருகிறது.
கடன் தொல்லையால் சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இவரது தற்கொலையும் சேர்த்து மொத்தமாக எட்டு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை பொற்காலத்தை நோக்கிச் செல்கிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் உன்னதமான இடத்தை நோக்கிச் செல்ல வேண்டும். அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் மாதாமாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா என்பவர் போட்டியிடுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு
நடந்து முடிந்த பொதுத்தேர்வில் தமிழில் 100க்கு 100 மதிப்பெண்கள் வாங்கிய மாணவ, மாணவியர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உயர்கல்வி பெறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு - ஏற்கனவே மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 10 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயாவை அறிவித்தார் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தருமபுரி தொகுதியில் களம் கண்டு தோல்வியடைந்தார்.
ஜூலை 10 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயாவை அறிவித்தார் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தருமபுரி தொகுதியில் களம் கண்டு தோல்வியடைந்தார்.
BREAKING Kuwait Fire Accident: குவைத் தீ விபத்து : சிறப்பு விமானத்தில் கொச்சி வந்தடைந்த 45 இந்தியர்களின் உடல்கள்.. ஏற்பாடுகள் தீவிரம்
Kuwait Fire Accident: குவைத்தில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த, 45 இந்தியர்களின் உடல் சிறப்பு விமானம் மூலம் கொச்சினுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட பணமாலை மற்றும் சில்லரை காசுகளுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ள வேட்பாளர்
தர்மபுரி மாவட்டம் நாகமறை பகுதியைச் சேர்ந்த அக்னி ஆழ்வார் என்பவர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய வருகை புரிந்துள்ளார். 51 வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். டெபாசிட் செய்ய பத்தாயிரம் ரூபாய் சில்லரை காசுகளுடன் வந்த நபர் 50 ஆயிரம் பணமாலையை கழுத்தில் அணிந்துள்ளார். ஊழல் இல்லா ஆட்சி கொடுக்க பணமாலையுடன் வந்துள்ளதாக வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படியை 9% உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
குவைத்தில் இருந்து 45 இந்தியர்களின் உடல்களுடன் கொச்சி வந்துகொண்டிருக்கிறது இந்திய விமானம். தமிழர்களின் உடல்களைப் பெறுவதற்கான அமைச்சர் மஸ்தான் கொச்சி சென்றிருக்கிறார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்தார் அமைச்சர் மஸ்தான்
Gold Rate : Gram Rate : June 14 சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 53,200 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,650 விற்பனை ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56,960 ஆகவும் கிராம் ஒன்று ரூ.7,120 ஆகவும் விற்பனையாகிறது.
Chennai Corporation - Amma Unavagam : அம்மா உணவகங்களை மேம்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை என தகவல்
அம்மா உணவகங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்த, ரூ. 5 கோடி செலவில் பணிகளைத் தொடங்கியுள்ளது சென்னை மாநகராட்சி
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 இந்தியர்களின் உடல்கள் இந்திய ராணுவ விமானத்தின் மூலம் காலை 10.30 மணிக்கு கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படுகின்றன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், கேரளாவைச் சேர்ந்த 23 பேர், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன.
கொச்சின் விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த 31 பேரின் உடல்கள் கொச்சியில் இருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுகின்றன.
எஞ்சியுள்ள உடல்களை டெல்லி விமான நிலையத்துக்கு கொண்டு சென்று, அங்கிருந்து அவர்களின் ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொச்சி விமான நிலையத்தில் உடல்களை கொண்டு ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உடல்கள் பெறப்பட்டதும் தனித்தனியாக வெவ்வேறு ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
சென்னையை அடுத்த குன்றத்தூரில் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து 5 பேர் தப்பி ஓட்டம். பணியாளரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பி ஓடியவர்கள் குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை
உயிரிழந்தவர்களின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது இந்திய விமானம்!
குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் 45 இந்தியர்களின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது இந்திய விமானம்!
Biligundlu Cauvery Water : பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1,000 கனஅடியாக குறைவு
காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1500 கன அடியில் இருந்து 1000 அடியாக குறைந்துள்ளது
Tamilnadu DA Hike: காலையிலேயே மகிழ்ச்சி செய்தி.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 1.1.2024 ஆம் தேதி முதல் 9% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி முதல் மே வரையிலான அகவிலைப்படி நிலுவைத்தொகை மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும்.
June 14 உலக ரத்த தான தினம் இன்று! ரத்த தானத்தின் மகிமையை அறியுங்கள்.
புதுக்கோட்டை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சந்தைப்பேட்டை ஆட்டு சந்தை களைகட்டி வருகிறது. ₹25000 முதல் ₹28,000 வரை ஆடுகள் விற்பனைக்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி சந்தையில் ஜோராக நடக்கும் கால்நடை விற்பனை. தற்போது வரை ₹5 கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனையாகியுள்ளன.
டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது இலங்கை அணி
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்:
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த 10ஆம் தேதி வெளியான நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இன்று தொடங்கி வருகின்ற 21ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். காலை 11 மணி முதல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். விக்கிரவாண்டி வட்டாச்சியார் அலுலவகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வருகின்ற 24ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனையும், 26ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெறுவதற்கான கடைசி நாளாகும்.
அடுத்த மாதம் 10ஆம் தேதி தேர்தலும், 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.
வார விடுமுறை, பக்ரீத் பண்டிகை ஆகியவை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று முதல் இயக்கப்படும் பேருந்துகளுக்கு நேரடியாகவோ அல்லது ஆன்லைன் செயலி வழியாகவோ டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Background
குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை தனி விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரும் பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அதேசமயம் உதவி தேவைப்படுவோர் அயலகத் தமிழர் நலத்துறையைத் தொடர்பு கொண்டு தேவைப்படும் தகவல்களைப் பெற்றிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
- டி20 உலகக்கோப்பை போட்டியில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதேபோல் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வங்கதேசம் 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஓமன் அணியை இங்கிலாந்து எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 47 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து பேட் செய்த 3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
- விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அத்தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மக்களவை தேர்தலுடன் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -