Breaking News LIVE: மக்களவைத் தேர்தலில் பாஜக 370 தொகுதிகளை கைப்பற்றும் - பிரதமர் மோடி நம்பிக்கை

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 05 Feb 2024 08:34 PM
தமிழ்நாடு அரசு ‘கணித்தமிழ்24’ மாநாட்டை முன்னெடுக்கிறது - அமைச்சர் பிடிஆர்

Breaking News LIVE: எதிர்க்கட்சிகள் எதிர்க்கட்சிகளாகவே இருக்க முடிவு செய்து விட்டனர் - பிரதமர்

எதிர்க்கட்சிகள் எதிர்க்கட்சிகளாகவே இருக்க முடிவு செய்துவிட்டதாக தெரிகின்றது. அவர்களால் ஆட்சிக்கு வரவே முடியாது  என பிரதமர் மோடி மக்களவையில் பேசியுள்ளார். 

Breaking News LIVE: ஓபிசி தலைவர்களை காங்கிரஸ் அவமதித்துவிட்டது - பிரதமர் மோடி

ஓபிசி தலைவர்களை காங்கிரஸ் அவமதித்துவிட்டது. உதாரணம் கர்பூரி தக்கூர் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

Breaking News LIVE: பெண்களுக்கு முழு முக்கியத்துவம் - பிரதமர் மோடி

பாஜக ஆட்சியில்தான் பெண்களுக்கு முழு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் பெண்கள் லட்சாதிபதியாக உருவாகியுள்ளனர். 

Breaking News LIVE: மக்களவைத் தேர்தலில் பாஜக 370 தொகுதிகளை கைப்பற்றும் - பிரதமர் மோடி நம்பிக்கை

மக்களவைத் தேர்தலில் பாஜக 370 தொகுதிகளை கைப்பற்றும் என பிரதமர் மோடி நம்பிக்கையாக மக்களவையில் பேசி வருகின்றார். 

சண்டிகர் மேயர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை - பெரும் பரபரப்பு

சண்டிகர் மேயர் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Breaking News LIVE: சண்டிகர் மேயர் தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் - உச்சநீதிமன்றம் கண்டனம்

சண்டிகர் மேயர் தேர்தலின் போது நடைபெற்றது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என உச்சநீதிமன்றம் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளது. மேலும் பாஜக மேயர் கூட்டம் நடத்தவும் தடை வித்துள்ளது. 

தமிழ்நாட்டில் நாளை 1021 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை

தமிழ்நாட்டில் நாளை 1021 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம் - உச்சநீதிமன்றம்

அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான வழக்குகள் மீது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

பரப்புரைக்கு குழந்தைகளை பயன்படுத்தக் கூடாது - தேர்தல் ஆணயம்

அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் குழந்தைகளை அரசியல் பரப்புரைகளிலும், பேரணிகளிலும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், எந்தவொரு விதத்திலும் தேர்தல் பரப்புரைக்காக குழந்தைகளை பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளளது.

Breaking News LIVE: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பலத்த பாதுகாப்புடன் சட்டப்பேரவைக்கு அழைத்து வரப்பட்டார். 

Breaking News LIVE: தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது - மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ. 5,850க்கு விற்பனையாகிறது. 

Breaking News LIVE: தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வெளியாகும் தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல்?

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழக பாஜக வேட்பாளர் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ் பேசியதாக கூறப்படுகிறது.

ஜார்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு

ஜார்கண்ட் சட்டமன்றத்தில் சம்பை சோரன் தலைமையிலான ஆட்சியின் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் கைதான நிலையில், அவருக்கு பதிலாக சம்பை சோரன் அண்மையில் முதலமைச்சராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

திமுக தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம்

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சுற்றுப்பயணம் தொடக்கம். தூத்துக்குடியில் கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட குழு மக்களிடம் கருத்துகளை கேட்கிறது. வரும் 23ம் தேதி வரையிலான மாநிலம் முழுவதிலுமான இந்த பயணத்தில், பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து கருத்து கேட்க திமுக தேர்தல் அறிக்கை குழு திட்டமிட்டுள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம்...

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்கான, அதிமுக குழு இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறது. அதன்படி, சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் நகரங்கள் உள்ளடங்கிய சென்னை மண்டலத்திற்கு செல்லும் இந்த குழுவினர், பொதுமக்களை சந்தித்து அவர்களது கருத்துகளை கேட்க உள்ளனர்.

Background

Petrol Diesel Price Today, February 5: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.


பெட்ரோல், டீசல்:


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 5ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 625வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.