Breaking News LIVE:காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒருநாள் ஊதியம் ரூபாய் 400
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்தில் ஒருநாள் ஊதியம் ரூபாய் 400 ஆக அதிகரிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.
அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி என்றும், அவர் ஒரு அரைவேக்காடு என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜக மிகப்பெரிய ஊழலில் சிக்கியது. அதை திசை திரும்ப பாஜக முயற்சிக்கிறது. கோடி கோடியான பணத்தை அரசை மிரட்டி பெற்று இருக்கிறது. சிஏஜி அறிக்கை பல கோடி ஊழல் நடந்து இருக்கிறது என்று தெரிவித்தது. மீனவர்களுக்கு கன்னியாகுமாரியில் பாதுகாப்பு இல்லை என்று பிரதமர சொல்கிறார். மீனவர்களின் படகுகளை கூட மீட்டு கொடுக்க துப்பில்லாத பிரதமர். மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்ல என்று சொல்கிறார்” என காட்டமாக பேசியுள்ளார்.
அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே இன்று கூட்டணி பங்கீடு தொடர்பாக மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 600 நாட்களுக்கு மேலாக நடத்தி வந்த போராட்டத்தை கைவிடுவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளனர்.
புதுச்சேரி பள்ளிகளில் வரும் மார்ச் 24ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நாளை ராகுல்காந்தி பாரத ஒற்றுமை யாத்திரை நிறைவு பெற உள்ள நிலையில், அதில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்க உள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் வரும் மார்ச் 19 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக 237 வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் சசிகலா புஷ்பா போட்டியிடக்கூடாது என்று பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகள் இந்த கல்வியாண்டு முழுமையாக மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் விதிமுறைகளின்படி பள்ளிகள் 2024 ஏப்.1 முதல் 2025 மார்ச் 31ந் தேதி வரை நடைபெறும் என்றும், மார்ச் 24 முதல் 31ந் தேதி வரை மற்றும் மே.1ந் தேதி முதல் 31ந் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு ஜுன் 3ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து வரும் 25ந் தேதி (மார்ச்) முதல் அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்கப்படுகின்றது.
Background
அடுத்த மாதம் மக்களவை தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், இன்று மதியம் 3 மணியளவில் இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான அறிவிப்பு வெளியிட உள்ளது. அனைத்து கட்சிகளும் அதற்கான ஆயத்த பணிகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த 10 ஆண்டு காலமாக மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என தீர்மானமாக உள்ளது. இது ஒருபக்கல் இருக்க இம்முறையும் பாஜக ஆட்சியை கைப்பிடிக்க வேண்டும் என பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறது. அதில் மிக முக்கியமாக வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டருக்கு ரூ.100 குறைக்கப்பட்டது. அதேபோல் நேற்று முன் தினம் பெட்ரோல் டீசல் விலைக்கு ரூ.2 குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த இரண்டு அறிவிப்புகளுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 8 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகத டெல்லி முதல்வர் ஜெக்ரிவாலுக்கு எதிராக டெல்லி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தொடுத்த வழக்கில் கெஜ்ரிவால் ஆஜராகிறார்.
மத்தியில் இப்படி இருக்க தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்து இறுதி அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. ஆனால் அதிமுக தரப்பில் கூட்டணி கட்சிகள் குறித்து இன்னும் ஒப்பந்தம் ஏற்படவில்லை. பாமக தரப்பிலும் தேமுதிக தரப்பிலும் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாமக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது இன்று முடிவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக இரட்டை இலை சின்னம், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் எழுத்துப்பூர்வமான உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று பிறப்பிக்கவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என பாஜக அனைத்து பணிகளும் மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் இணைக்கப்பட்டது. அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பாஜகவிற்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார். இதில் ஒரு பகுதியாக பிரதமர் மோடி வரும் 18 ஆம் தேதி மற்றும் 22 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் நடைபெறும் முக்கியச் செய்திகள் குறித்து இங்கு காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -