Breaking News LIVE: செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
தாய்த்தமிழைக் காக்கும் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மொழிப்போர்
தியாகி திரு.வேணுகோபால் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த
வருத்தமுற்றேன்.
இன - மான - மொழியுணர்வோடு திராவிட இயக்கப் பட்டறையில்
வார்ப்பிக்கப்பட்ட கொள்கை தீரரான வேணுகோபால் அவர்கள் இரண்டு முறை
சட்டமன்ற உறுப்பினராகவும் - ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள்
பணியாற்றியவர். 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்
தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பெற்ற பெருமைக்குரியவர்.
வேணுகோபால் அவர்கள் 40 ஆண்டுகள் மாவட்ட அவைத்தலைவராக
இருந்தவர். 2019-ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற கழக முப்பெரும்
விழாவில் தந்தை பெரியார் விருதை அவருக்கு வழங்கி மகிழ்ந்த தருணத்தைத்
தற்போது எண்ணிப் பார்த்து நெகிழ்கிறேன்.
அன்னைத் தமிழ் காக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் முன்னின்ற
ஆற்றல்மிகு செயல்வீரரான, அனைவரது நன்மதிப்பைப் பெற்ற மக்கள் தொண்டரான
திரு. வேணுகோபால் அவர்களின் மறைவு கழகத்துக்கும் திருவண்ணாமலை
மக்களுக்கும் பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது
ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்த்தமிழைக் காக்கும் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மொழிப்போர்
தியாகி திரு.வேணுகோபால் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த
வருத்தமுற்றேன்.
இன - மான - மொழியுணர்வோடு திராவிட இயக்கப் பட்டறையில்
வார்ப்பிக்கப்பட்ட கொள்கை தீரரான வேணுகோபால் அவர்கள் இரண்டு முறை
சட்டமன்ற உறுப்பினராகவும் - ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள்
பணியாற்றியவர். 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்
தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பெற்ற பெருமைக்குரியவர்.
வேணுகோபால் அவர்கள் 40 ஆண்டுகள் மாவட்ட அவைத்தலைவராக
இருந்தவர். 2019-ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற கழக முப்பெரும்
விழாவில் தந்தை பெரியார் விருதை அவருக்கு வழங்கி மகிழ்ந்த தருணத்தைத்
தற்போது எண்ணிப் பார்த்து நெகிழ்கிறேன்.
அன்னைத் தமிழ் காக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் முன்னின்ற
ஆற்றல்மிகு செயல்வீரரான, அனைவரது நன்மதிப்பைப் பெற்ற மக்கள் தொண்டரான
திரு. வேணுகோபால் அவர்களின் மறைவு கழகத்துக்கும் திருவண்ணாமலை
மக்களுக்கும் பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது
ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்கள் யார் என்பதை வெளியுலகம் தெரிந்து கொள்ளாமல் இருக்க வகை செய்யும் தேர்தல் பத்திரங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி அதை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது, அது குறித்த விவரங்களை கமுக்கமாக வைத்திருக்க வசதியாக வருமான வரி சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தங்களும் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் பணம் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடையில் வெளிப்படைத் தன்மை அவசியமாகும். அதை உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஓரளவாவது உறுதி செய்யும் என்று நம்புகிறேன். இதன் தொடர்ச்சியாக தேர்தல்களில் பண பலம் பயன்படுத்தப்படுவதையும், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தையும் தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்துகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை போக்குவரத்துப் பிரிவில் சிறப்பு உதவி
ஆய்வாளராகப் பணிபுரிந்துவரும் திரு.ஜஸ்டின் (வயது 53) த/பெ. ஜோசப்பின்
என்பவர் இன்று (15.2.2024) பிற்பகல் பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில்
நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை, இரணியல் காவல் சரகம்,
அக்கினியானா குளம் அருகில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக
நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த
வேதனையடைந்தேன்.
பணியின் நிமித்தமாக சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட சாலை
விபத்தில் போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஜஸ்டின் அவர்கள்
உயிரிழந்துள்ளது காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய
முடியாத ஒரு பேரிழப்பாகும்.
போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஜஸ்டின் அவர்களை இழந்து
வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது
ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது
குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும்
உத்தரவிட்டுள்ளேன்.
- முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
அமலாக்கத்துறை விசாரணையை ஒத்திவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை நாளை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பத்திரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகச் சரியானது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தேர்தல் பத்திரம் அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்சநீதிமன்றம் சரியாகவே கூறியுள்ளது . இதன் மூலம் வெளிப்படையான தேர்தல் செயல்முறை மற்றும் அமைப்பின் நேர்மையை உறுதி செய்யும். இந்தத் தீர்ப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனநாயக்த்தையும் சம நிலையையும் மீட்டெடுத்துள்ளது . அமைப்பின் மீது சாமானியர்களின் நம்பிக்கையையும் உறுதி செய்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் வரும் 19ஆம் தேதியில் இருந்து திமுக தலைமையிடத்திற்கு கோரிக்கை மனு சமர்ப்பிக்க அறிவுருத்தியுள்ளது.
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் மதிமுகவுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் திருச்சியிலும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறைந்தபட்ச ஆதார விலை, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திமுக ஆட்சியில் ஏற்பட்ட விலை உயர்வு பற்றிய கேள்விக்கு முதலமைச்சர் பதிலளிக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டபேரவை முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “ திமுக ஆட்சியில் அமைத்த குழுக்களின் நிலை என்ன? திமுக ஆட்சியில் சென்னையில் எத்தனை தூரம் மெட்ரோ ரயில் அமைக்கப்பட்டுள்ளது? “ என கேள்வி எழுப்பினார்.
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் பிப்ரவரி 23 ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார். பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்புகள் மார்ச் மூன்றாம் வாரத்தில் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே சாணிகுளம் என்ற இடத்தில் ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. காலியாக சென்ற ரயிலின் சக்கரம் தண்டவாளத்தில் இருந்து கிழே இறங்கியது. சுமார் 3 மணி நேரம் சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.
Background
Petrol Diesel Price Today, February 15: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 15ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 635வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -