விழுப்புரம்: யுஜிசி சட்டதிருத்தம் கண்டத்துக்குரியது ஒரு இனத்தை அழிக்க மத்திய அரசு செயல்படுத்துவதாகவும் இங்கு பாஜகவிடம் சண்டையிடும் திமுக எம்பிக்கள் பாஜக அமைச்சர் நட்டாவை அழைத்து விருந்து வைத்து கபட நாடகத்தினை மேற்கொள்வதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம், விவசாயிகளிடம் பொங்கல் பண்டிகைக்காக பன்னீர் கரும்பு கொள்முதல் செய்வதில் ஜாதியை கேட்டு கொள்முதல் அரசு செய்வதாகவும், திமுக அரசில் தென் மாவட்டங்களில் மத கலவரம் சாதி கலவரம் எழுந்து வருவதாகவும், ஏக்கருக்கு குறைந்த அளவே கரும்பு கொள்முதல் செய்வதை கண்டிப்பதோடு திட்டமிட்டே திமுக அரசு வன்முறையை துண்டுவதாக குற்றஞ்சாட்டினார்.
துணை முதல்வர் பதவி வகிக்கிற உதயநிதி ஸ்டாலினுக்கு தனது துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை, விளையாட்டு போட்டிக்கு வந்த மாணவர்களுக்கு காலையில் வந்த உணவு வழங்கப்பட்டுள்ளதாகவும், திமுக ஆட்சி பொறுப்பில் இருக்கும் போதெல்லாம் தமிழகத்தின் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் அல்லது விட்டுக்கொடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார். யுஜிசி வெளியிட்ட செயல்திட்டத்தில் மாநில உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும், ஆளுநருக்கு மட்டுமே நியமின உரிமை கொடுக்கப்பட்டுள்ளதாகவும்,
மத்திய அரசு மோசமான திட்டத்தினை அறிவித்து ஒரே நாடு ஒரே தேர்தல் போன்று இது உள்ளதாக தெரிவித்தார். புதிய விதியில் தொழில் துறையில் அனுபவம் உள்ளவர்கள், துணை வேந்தராக உள்ளவர்கள வரலாம் என கூறுகிறார்கள். இதன்மூலம் மறைமுகமாக இடஒதுக்கீட்டிற்கு எதிரான தாக்குதல் கல்வி துறையில் மத்திய அரசு எடுக்க காரணம் மறைமுக இந்தி திணிப்பு என குற்றஞ்சாட்டினார். திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் தமிழகத்தின் மாநில உரிமை பறிக்கபடுவதாகவும், கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் கச்சத்தீவு விட்டு கொடுக்கப்பட்டது அதனை தாரைவார்த்ததை மீட்க அவர் வழக்கு தொடரவில்லை,
ஒன்றரை தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டதற்கு திமுக அரசுதான் காரணம் என்றும் சிறுவணிகத்தில் அன்னிய முதலீட்டை கொண்டுவந்ததும் திமுக அரசுதான் என தெரிவித்தார். திமுக 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து கொண்டு இங்கு புலி போல் கர்ஜிக்கிறார், நாடாளுமன்றத்திற்கு போன பின்பு குழம்பு புலி போல் ஆகிவிடுவதாகவும், பாஜக மத்திய அமைச்சர்களை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் அடிக்கடி சந்திப்பதாக கூறினார்.
தமிழக அரசு நெல்கொள்முதல் செய்ததை மத்திய அரசு செய்யும் என மாநில உரிமையை பறிப்பதாகவும், யுஜிசி சட்டதிருத்தம் கண்டத்துக்குரியது ஒரு இனத்தை அழிக்க மத்திய அரசு செயல்படுத்துவதாகவும்,
இங்கு பாஜகவிடம் சண்டையிடும் திமுக எம்பிக்கள் பாஜக அமைச்சர் நட்டாவை அழைத்து விருந்து வைத்து கபட நாடகத்தினை மேற்கொள்வதாக தெரிவித்தார். விழுப்புரம் ரயில்வே குடியிருப்பு 6 வது வார்டில் 24 பேர் மட்டுமே உள்ள இடத்தில் 421 உள்ளதாக குறிப்பிட்டுள்ளதை நீக்க வேண்டுமென்றும் காகுப்பம் வார்டில் இறந்த வாக்காளர்கள் பெயர்களை நீக்காமல் உள்ளதை முழுமையாக நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
யார் அந்த சார் என்பதை கண்டுபிடித்து மக்களுக்கு திமுக அரசு தெரிவியுங்கள் திமுக அரசு கருப்பு துப்பாட்டாவை அணிந்திருந்ததை பறித்துள்ளதாகவும் எந்த கட்சியை சார்ந்தவர்களாக யார் குற்றம் செய்திருந்தாலும் கைது செய்யுங்கள் என்றும் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.