Breaking News LIVE: செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் ஜாமீன் வழங்க கோரிக்கை; நாளை தீர்ப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
Gautami Tadimalla :
பாஜகவில் இருந்து விலகிய நடிகை கவுதமி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஏற்கனவே பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால் ஜாமீன் வழங்கவேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி விபத்தில் மரணமடைந்தார். இதனால் முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் திமுகவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகள் அனைத்திற்கும் துணை நின்று ஆதரித்த அ.தி.மு.க.தான் இப்போது பா.ஜ.க சொல்லிக் கொடுத்ததுபோலவே கூட்டணி இல்லை என்று பசப்பிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்திய அளவிலும் பா.ஜ.க செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தையாக இருந்ததுதான் அ.தி.மு.க. மக்களின் எதிரிகளான இந்த இரண்டு கட்சிகளையும் அம்பலப்படுத்த வேண்டிய கடமை உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் போராடும் விவசாயிகள் தீவிரவாதிகளா அல்லது மத்திய அரசு தீவிரவாதியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் தர அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
போராட்டம் அறிவித்துள்ள அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலினிடம் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அளித்தனர்.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ஜெய்ப்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்தார் சோனியா காந்தி. சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தபோது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உடன் இருந்தனர். 1999 முதல் தற்போதுவரை மக்களவை எம்.பியாக இருக்கிறார் சோனியா காந்தி
ஹம்பு எல்லையில் டெல்லியில் முற்றுகையிட வருகை புரியும் விவசாயிகள் மீது காவல்துறையினர் மீண்டும் கண்ணீர் புகை குண்டை வீசி கலைக்க முற்றுப்பட்டு வருகின்றனர். தற்போது பேச்சுவார்த்தைக்கு வர விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ஆந்திராவில் செம்மரக்கடத்தலை தடுத்த போலீசை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி ராமன் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
பில்கிஸ் பானு வழக்கில் தந்த தீர்ப்பில் கூறிய கருத்தை மறு ஆய்வு செய்யக்கோரி குஜராத் அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தொடர்ந்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்து குஜராத் மாநில அரசுக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பிரதமர் மோடி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அனைத்தி விவசாயங்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மாநிலங்களவை தேர்தல்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீண்டும் மத்தியப்பிரதேசத்தில் இருந்து போட்டி. தற்போது மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார் எல்.முருகன். மத்திய அமைச்சர் எம்.முருகனின் எம்.பி பதவிக்காலம் வரும் ஏப்ரலில் முடியடைய உள்ளதால் மீண்டும் போட்டியிடுகிறார்.
காதலர் தின கொண்டாட்டம் காரணமாக சென்னையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. ரோஜா ஒன்று ரூ.20 முதல் ரூ.30 வரையும், ஒரு கட்டு ரோஜா ரூ.250 முதல் ரூ.350 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.ம்
நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.,க்கள் 56 பேரின் பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை முடிவடையும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னள் தலைவர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள கடற்கரை மற்றும் பூங்காக்கள் அமைந்துள்ள பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காதலர்கள் மற்றும் பொதுமக்களை தொந்தரவு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று தொடங்கி 12 நாட்கள் நடைபெறும் விழாவில் சிகர நிகழ்ச்சியாக பிப்ரவரி 23 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
திருநெல்வேலியில் நடைபெற்று வரும் 7வது பொருநை புத்தக திருவிழா இன்றும் நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு - மக்கள், புத்தக வாசிப்பாளர்களின் வேண்டுகோளை ஏற்று நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் சாலையில் மேலும் தடுப்புகள் அமைத்து அவர்களை தடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி கடும் கண்டனங்களை பெற்றுள்ளது.
Background
கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 13ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 633வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -