Breaking Tamil LIVE: ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு - நெற்றியில் காயம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பேருந்து யாத்திரையின் மீது அவர் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.
அ.தி.மு.க.வை சீண்டிப்பார்க்க வேண்டாம் என்றும், எந்த பூச்சாண்டிக்கும் பயப்படமாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை குன்றத்தூர் அருகே 1425 கிலோ தங்கம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வேலூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் வாக்கு சேகரித்து வருகிறார்.
விரைவில் இபிஎஸ் தலைமையிலான அதிமுக இருக்காது எனவும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் டிடிவி தினகரன் பக்கம்தான் உள்ளனர். ஜூன் 4க்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசம் ஒப்படைக்கப்படும் என குறிப்பிட்டார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கன்னியாகுமரி வந்தடைந்தார். தக்கலையில் இன்று மாலை ரோடு ஷோவில் பங்கேற்கும் அமித்ஷா, கன்னியாகுமரி வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அன்றைய நாள் உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு செல்லும் பிரதமர் மோடிக்கான இன்றைய கேள்விகள் என ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் விமர்சனம் செய்துள்ளார். 2016ல் மிகப்பெரிய விளம்பரம் செய்து பிரதமர் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் 9 ஆண்டுகளாகியும் ஏன் கட்டப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 25 குறைந்து ஒரு கிராம் ரூ. 6780க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 6786க்கும் ஒரு சவரன் ரூ. 54, 240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து ஒரு கிராம் ரூ. 89க்கு விற்பனை ஆகிறது.
மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ம் தெதி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வுக்கு விடுமுறை என பதிவாளர் அறிவித்துள்ளார்.
ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கன்னியாகுமரி வருவதை முன்னிட்டு இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. நாகர்கோவில் மாநகர் பகுதி, தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு இனிப்பான வெற்றியை தருவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் வங்கதேச தம்பதியரிடம் ரூ. 66 ஆயிரம் பணத்தை வழிப்பறி செய்த திருநங்கைகள் 2 பேருக்கு போலீஸ் வலைவீசி வருகின்றனர். அடையாறு கஸ்தூரிபாய் நகரில் தனியார் மருத்துவமனையில் குழந்தை பேருக்காக வந்த வங்கதேச தம்பதியிடம் கைவரிசை காட்டியுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் 2 ஓடுபாதைகளிலும் ஒரே நேரத்தில் விமானங்களை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. சென்னை விமான நிலையத்தில் 3. 66 கி.மீ. தூரத்திலும், 2.89 கி.மீ தூரத்தில் இரண்டு ஓடுபாதைகளில் உள்ளன.
சிவகங்கை தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளரான தேவநாதனின் பிரச்சார ஜீப் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய அனுமதியின்றி ஒலிப்பெருக்கியுடன் பிரச்சாரம் செய்த தேவநாதனின் கேரள பதிவெண் கொண்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவினாசி பழங்கரையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இன்று மாலை பேசுகிறார். இதற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் முதலமைச்சர் வருகையையொட்டி இன்று திருப்பூரில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைக்காக போலீசார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
Background
தமிழ்நாடு:
பத்தாண்டு கால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டதாக, தேர்தல் பரப்புரைய்ன்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மறுபுறம், தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு தொகுதி தமாகா வேட்பாளர் விஜயகுமார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போச்சம்பள்ளி அடுத்த செல்லம்பட்டி கிராமத்தில் பாஜக பிரசாரத்தின்போது பாமக நிர்வாகி மண்டை உடைக்கப்பட்டது. மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் இதுவரை 4.36 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இப்படி தேர்தல் பரபரப்புக்கு மத்தியில், அரியலூர் அருகே செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 24 சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்திள்ளது. தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா:
தேசிய அரசியலில் கவனம் செலுதினால், மோடிக்கு தோசை பிடிக்குமா இல்லை, வடை பிடிக்குமாங்கிறது தமிழர்களுக்கு பிரச்னை இல்லை என ராகுல் காந்தி சாடியுள்ளார். தாங்கள் ஆட்சி அமைத்தால் நீட் தேர்வை அந்தந்த மாநில அரசுகளின் முடிவுகளுக்கே விட்டுவிடுவோம் என பேசி ராகுல் காந்தி கவனம் ஈர்த்துள்ளார். இதனிடையே, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவந்த இரண்டு முக்கிய குற்றவாளிகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். இந்து மதத்தில் இருந்து பௌத்தம், சமணம், சீக்கிய மதத்திற்கு மாற தங்களின் முன் அனுமதி தேவை என குஜராத் அரசு தெரிவித்துள்ளது. ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளாக்கோமா நோயால் இந்தியாவில் 1.2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம்:
சர்வதேச விவகாரங்கள் பக்கம் கவனத்தை திருப்பினால், இஸ்ரேல் மீது ஈரான் ஆதரவு அமைப்பு ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. பயங்கரவாதிகளை கண்டறிய இஸ்ரேல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. வருகின்ற செப்டம்பர் மாதத்தில் 4 நாடுகளுக்கு போப் பிரான்சிஸ் பயணம் செய்ய உள்ளதாக வாடிகன் அறிவித்துள்ளது. காசாவில் இஸ்ரேலின் ராணுவ செயல்பாடுகள் மீதான அதிருப்தி இருந்தபோதிலும், தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மாலத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக இந்தியாவில் ரோடு ஷோ நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. பிலிப்பைன்சில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.
விளையாட்டு:
விளையாட்டு உலகில் ஐபிஎல் தொடரின் இன்றைய லிக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. : லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தனது காயத்தை மறைப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் இந்திய குழுவின் தலைவர் பதவியை பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ராஜினாமா செய்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -