Breaking News LIVE: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை அமெரிக்கா பயணம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உலக வங்கியில் ரூபாய் 3 ஆயிரம் கோடி கடன் பெறுவது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார்.
மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட அளவு வாக்குவீதத்தை பெறாததால் தேசிய கட்சி அந்தஸ்தை இழக்கும் அபாயத்தை பகுஜன் சமாஜ்வாதி கட்சி எதிர்கொண்டுள்ளது.
திருவண்ணாமலையில் நெல் கொள்முதலில் 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்ட்ரா புனே அருகே அருவியில் 5 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுக் கல்லூரிகளில் ஜூலை 3 முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் கோவையில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பிலும், திமுக சார்பிலும் நிவாரண நிதி வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்
”சென்னை மாநகராட்சி எவ்வித செயல்பாடின்றி முடங்கியுள்ளது. குடிநீரில் கழிவுநீர் கலந்து சென்னை சைதாப்பேட்டையில் சிறுவன் உயிரிழந்துள்ளான். மதுக்குடிப்பவர்கள் தாமாக திருந்தினால்தான் பிரச்சினை தீரும்என ஒரு மூத்த அமைச்சரே சொல்வது கண்டனத்திற்குரியது. தரமான அமதுபானம் விற்கப்படுவதில்லை என அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் உயிருக்கு விலை இல்லை. பணம் மட்டுமே பிரதானமாக உள்ளது. அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் கடையை திறக்கும் அரசால் ஏன் காவல் நிலையம் திறக்க முடியாது” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் மணிப்பூரில் இம்பால் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் உடைந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலை எண் 10ன் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதுச்சேரியில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
Background
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெற்றது. இதில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், எங்கள் அணி டி20 உலகக் கோப்பையை ஸ்டைலில் வீட்டிற்கு கொண்டு வருகிறது! இந்திய கிரிக்கெட் அணிக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த போட்டி வரலாற்று சிறப்புமிக்கது” எனத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் #MenInBlue அவர்களின் இரண்டாவது #T20 உலகக் கோப்பையை முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதற்காக கொண்டாடுவதில் மகிழ்ச்சி!நமது இந்திய அணி சவாலான சூழ்நிலைகளில் இணையற்ற திறமையை வெளிப்படுத்தி, முறியடிக்க முடியாத சாதனையுடன் முடித்தது. வாழ்த்துகள், இந்திய அணி” எனத் தெரிவித்துள்ளார்.
- இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றதை கிரிக்கெட் ரசிகர்கள் இரவு முழுவதும் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய அணி, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -