Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
"சிறுவர்கள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் தானாகவே Switch Off ஆகும் வகையில் ஒரு செயலியை கண்டுபிடிப்பது தொடர்பாக வழக்கு தொடரலாமே?" -உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கிண்டல்
நீட் தேர்வை முதலில் ஆதரித்தேன். ஆனால், தற்போது வணிக நோக்கில் அந்த தேர்வு இருக்கிறது. நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கோவையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் MSME-க்கள் இன்னும் பெரும்பங்காற்றத் தேவையான ஊக்குவிப்பையும் உதவிகளையும் தொடர்ந்து வழங்குவோம் -மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்
இந்தியாவில் வெறுப்புப் பேச்சு, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்துள்ளது - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் குற்றச்சாட்டு
திருமணமான பெண்களுக்கு பணியமர்த்தக்கூடாது என்ற எந்த கொள்கை முடிவும் இல்லை. பாதுகாப்பு காரணத்திற்காகவே தங்க, வெள்ளி ஆபரணங்களை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருமணமான பெண்களுக்கு பணியமர்த்தக்கூடாது என்ற எந்த கொள்கை முடிவும் இல்லை. பாதுகாப்பு காரணத்திற்காகவே தங்க, வெள்ளி ஆபரணங்களை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்கள் பிரச்சனைக்காக அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு திமுகதான் பொறுப்பேற்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் என ஜனாதிபதி உரையில் திரவுபதி முர்மு பேசினார். அப்போது எதிக்கட்சிகள் முழக்கமிட்டன. இதனால் நாடாளுமன்றத்தில் சலசலப்பு நிலவியது
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் தொழில்முறை பயனடைந்துள்ளது. 55 கோடி மக்களுக்கு ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
புதிய மருத்துவக்கல்லூரிகள் குறித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு மக்களவையில் உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சியை சேர்ந்த எம்பிக்கள் நீட் நீட் என முழக்கமிட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
தமிழ்நாடு, உத்தரபிரதேசத்தில் பாதுகாப்புத்துறை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுகின்றன என்றும், 55 கோடி மக்களுக்கு ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
புதிய மக்களவை உறுப்பினர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்துகளை தெரிவித்தார். அதனை தொடர்ந்து, மீண்டும் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லாவுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத்தலைவர் உரையாற்ற உள்ளார். இதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வாகனத் தொடரணி ராஷ்டிரபதி பவனில் இருந்து பார்லிமென்ட் கட்டிடத்திற்கு செல்கிறது.
செங்கோலை நாடாளுமன்றத்தில் இருந்து எடுக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி எம்.பி.சௌத்ரி நேற்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து, செங்கோல் தொடர்பான சமாஜ்வாதியின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துவிட்டதாக பாஜக தலைவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும்; திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு விமானம் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் விமான நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க தவறிய தமிழ்நாடு அரசை கண்டித்தும், வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரியும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருச்சாணி அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிப்பு
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் 4 நாட்களுக்குப் பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகமாக இருந்தது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது போட்டி கயானாவில் இரவு 8 மணி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை பழிவாங்க இந்திய அணிக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் முதல் முறையாக களம் இறங்குகின்றன.
மாநிலங்களவையின் 264வது அமர்வு இன்று தொடங்க உள்ளது. இதையடுத்து மாநிலங்களவை கூட்டத்தொடர் இன்று முதல் ஜூலை 3ம் தேதி வரை நடைபெறுகிறது.
நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று உரையாற்ற உள்ளார். பிரதமராக நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்ற பின், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று உரையாற்ற உள்ளனர்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
96 வயதான அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருவதாகவும், அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அத்வானி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
டி20 உலகக் கோப்பை 2024ன் முதல் அரையிறுதி போட்டியில் தற்போது ஆப்கானிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 56 ரன்கள் சுருண்டது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
Background
- நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி உட்பட்ட புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் கடைவீதி காமராஜர் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கால்நடைகள் அதிகமாக சுற்றிதிரிகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிக சிரமத்துடனே கடந்து செல்கின்றனர். சீர்காழி பிரதான சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவரை அவ்வழியாக வந்த மாடு முட்டி சாலையில் தள்ளியது. நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஏதும் வரவில்லை இதனால் சிறு காயங்களுடன் அந்தப் பெண் உயர் தப்பினார். இந்த அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ள நிலையில் பொதுமக்கள் சாலையில் சுற்றி திரியும் கால்நடையின் உரிமையாளர் களுக்கு காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்து சட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 15 வயது சிறுமிக்கு 2 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., நாஞ்சில் முருகேசன் மற்றும் உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தாயார் உட்பட 5 பேர் மீது கடந்த 2020 ம் ஆண்டு ஜூலை மாதம் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ வழக்கு பதியப்பட்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் 5 பேரும் நேற்று விடுதலை. முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -