Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 25 Jun 2024 09:45 PM
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கல்வராயன் மலைப்பகுதியில் 2,200 லிட்டர் கள்ளச்சாராயம்

கல்வராயன் மலைப் பகுதியில் 2 ஆயிரத்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் திடீர் மழை! போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

சென்னையில் திடீரென மழை பெய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நன்னிலம் நில உடைமைத் திட்டம் அறிமுகம் - தமிழக அரசு அறிவிப்பு

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் நன்னிலம் நில உடைமைத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

சேப்பாக்கத்தில் டெஸ்ட்! இந்தியா - தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதும் போட்டியை காண அனுமதி இலவசம்

இந்தியா - தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் சென்னையில் மோதும் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் 100 கோடி மதிப்பில் 120 சமுதாய கூடங்கள் - சட்டசபையில் வெளியானது அறிவிப்பு

நடப்பு நிதியாண்டில் 100 கோடி ரூபாய் மதிப்பில் 120 சமுதாயக்கூடங்கள் கட்டப்பட உள்ளது என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் விபத்து! பேருந்து கவிழ்ந்ததில் 20 பேர் காயம்

புதுக்கோட்டை, அன்னவாசல் அருகே பேருந்து கவிழ்ந்து 20 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை - வானிலை ஆய்வு மையம் கணிப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் ராகுல் காந்தி - காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆரவாரம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று எம்.பி.யாக பதவியேற்றார்.

புனே கார் விபத்து வழக்கு; காரை ஓட்டிச்சென்ற சிறுவனுக்கு ஜாமின்

புனே கார் விபத்தில் 2 பேர் உயிரிழந்த வழக்கில் காரை ஓட்டிச் சென்ற சிறுவனுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Breaking News LIVE: இராமநாதபுரம் எம்.பி. பதவி ஏற்பு!

இராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி நாடளுமன்றத்தில்  தமிழ் மொழில்யில் பேசி பதவி ஏற்றார்.

Breaking News LIVE: இராமநாதபுரம் எம்.பி. பதவி ஏற்பு!

இராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி நாடளுமன்றத்தில்  தமிழ் மொழில்யில் பேசி பதவி ஏற்றார்.

Breaking News LIVE: தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பதவி ஏற்பு!

தூத்துக்குடி தொகுதியின் தி.மு.க. எம்.பி. கனிமொழி கருணாநிதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை குறிப்பிட்டு பதவி ஏற்றார்,.

Breaking News LIVE: திருச்சி எம்.பி. துரை வைகோ பதவி ஏற்பு!

வாழ்க மதசார்பின்மை, பரவட்டும் மனிதநேயம் என்று தெரிவித்து திருச்சி எம்.பி. துரை வைகோ பதவி ஏற்றார். 

Breaking News LIVE: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பதவி ஏற்பு!

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தமிழில் பதவி ஏற்றார்.

Breaking News LIVE: சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதவி ஏற்பு!

சிவகங்கை எம்.பி. கார்த்தி ’சிதம்பரம் கடவுள் மீது ஆணையாக’ என்று தெரிவித்து பதவி ஏற்றார். 

Breaking News LIVE: ”தமிழ் கடவுள் முருகன் மீது ஆணையாக..” மயிலாடுதுறை எம்.பி. சுதா பதவியேற்பு!

நாடாளுமன்றத்தில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா,” தமிழ் கடவுள் முருகன் மீது ஆணையான.”என்று தெரிவித்து பதவி ஏற்றார். 

தமிழ் கடவுள் முருகப்பெருமான் என்று சொல்லி பதவியேற்ற காங்கிரஸ் எம்.பி.

தமிழ் கடவுள் முருகப்பெருமான் என்று குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. சுதா பதவியேற்றார்.

Breaking News LIVE: ”வாழ்க ஜனநாயகம்; வாழ்க அரசியலைப்புச் சட்டம்,” சிதம்பரம் தொகுதி எம்.பி. திருமாவளவன் பதவி ஏற்பு!

சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வி.சி.க. தொல். திருமாளவன் “ ஜெய் Democracy, Jai Constitution” என்று தெரிவித்து தமிழில் பதவி ஏற்றார்.

Breaking News LIVE: தமிழ்நாடு எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்பு!

 மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் ஆகியோரும் பதவி ஏற்று கொண்டனர்.

வாழ்க தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் பதவியேற்ற தமிழக எம்.பி.க்கள்

தமிழக எம்.பி.க்கள் வாழ்க தமிழ்நாடு, வாழ்க தமிழ் என்ற முழக்கங்களுடன் பதவியேற்றனர்.

Breaking News LIVE: நீலகிரி தொகுதி எம்.பி. பதவி ஏற்பு!

நாடாளுமன்றத்தில் 18-வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்று வருகின்றனர். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் வெற்ற பெற்ற தி.மு.க. கூட்டணி உறுப்பினர்கள் பதவி ஏற்று வருகின்றனர். தி.மு.க. எம்.பி.க்கள் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு பதவி ஏற்றனர். 


நீலகிரி தொகுதி எம்.பி.யான  தி.மு.க.வின் ஆ.ராசா அரசியலைப்புச் சட்டத்தை மட்டும் குறிப்பிட்டு பதவியேற்றார். 

Breaking News LIVE: நாடாளுமன்றத்தில் கிருஷ்ணகிரி எம்.பி. பதவி ஏற்பு!

கிருஷ்ணகிரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் தெலுங்கு மொழியில் பதவி ஏற்றுக்கொண்டார்.

Breaking News LIVE: 18-வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - தமிழ்நாடு எம்.பி.க்கள் பதவி ஏற்பு!

18-வது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி தொகுதியில் வெற்ற பெற்ற 40 எம்.பி.க்கள் பதவி ஏற்று வருகின்றனர்.

Breaking News LIVE: விழுப்புரம் எம்.பி. பதவி ஏற்பு!

விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் ‘ வாழ்க தமிழ்’ என்று தெரிவித்து 18-வது மக்களவையில் பதவி ஏற்றார். 

Breaking News LIVE: தமிழ்நாடு எம்.பி,.க்கள் மக்களவையில் பதவி ஏற்பு!

தென் சென்னை தொகுதியில் வென்ற தமிழச்சி தங்கப்பாண்டியன் தமிழில் பதவி ஏற்று கொண்டார்.

Breaking News LIVE: 18-வது மக்களவை உறுப்பினர்கள் பதவி ஏற்பு!

18- வது நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தமிழ்நாடு எம்.பி.க்கள் தமிழில் பதவி ஏற்று வருகின்றனர்.

Breaking News LIVE: தமிழ்நாடு நாடளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவி ஏற்பு!

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் பதவியேற்பு திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் தமிழில் பதவியேற்றுக்கொண்டார்.

உடலில் என்ன அணிந்துள்ளனர் என்று பார்த்து தீர்ப்பு வழங்க மாட்டேன்!” -சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி..

“சாதி, மதம் நம்பிக்கை அடிப்படையில் உடலில் என்ன அணிந்துள்ளனர் என்று பார்த்து தீர்ப்பு வழங்க மாட்டேன்!” -சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அதிரடி கருத்து..

Tamilnadu Rain : 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Tamilnadu Rain : 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

நியமன ஆணையை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

Vengal Rao : சினிமா தொழிலாளர்கள் தனக்கு உதவ வேண்டுமென்று வெங்கல் ராவ் கூறி வீடியோ

ஒரு கை, ஒரு கால் செயலிழந்து வீட்டில் சிகிச்சை பெற்றுவரும் நகைச்சுவை நடிகர் வெங்கல்ராவ், சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகவும், சினிமா தொழிலாளர்கள் தனக்கு உதவ வேண்டுமென்றும் கூறி வீடியோ

Tamilnadu Rain : இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Breaking News LIVE: ஆளுநருடன் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் சந்திப்பு..!

கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகள் குறித்து ஆளுநரை சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசி வருகிறார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் ரவியிடம் அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

"சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே நாடாளுமன்றத்தின் மரபு" - ராகுல் காந்தி வலியுறுத்தல்

"மக்களவை துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே நாடாளுமன்றத்தின் மரபு" - ராகுல் காந்தி வலியுறுத்தல்

Gold Rate : இன்றைய ஆபரணத் தங்கம் விலை, 160 ரூபாய் குறைந்து ரூ.53440-க்கு விற்பனையாகிறது

Gold Rate : இன்றைய ஆபரணத் தங்கம் விலை, 160 ரூபாய் குறைந்து ரூ.53440-க்கு விற்பனையாகிறது

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி!

AFG Vs BAN, T20 Worldcup: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

V P Singh Birthday : முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாள் : உருவச்சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாளை முன்னிட்டு மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு தடை!

மூன்றாவது நாளாக கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் அமளி! அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவு. இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு தடை!

சாராயம் குடித்து இறந்தவனுக்கு இழப்பீடு தந்து, தவறுசெய்ய ஊக்கபடுத்துவது நல்ல அணுகுமுறை இல்லை - சீமான்

“இளம் விதவைகள் திமுக ஆட்சியில்தான் அதிகமாக இருக்கிறார்கள். சாராயம் குடித்து இறந்தவனுக்கு இழப்பீடு தந்து, தவறுசெய்ய ஊக்கபடுத்துவது நல்ல அணுகுமுறையும் இல்லை, நல்ல நிர்வாகமும் இல்லை” - சீமான்

‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்! 

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் : சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் - சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!

"முட்டுக்கட்டை போடும் வகையில் மக்கள் வாக்களித்துள்ளனர்” -ப.சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர்

“அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்ற பாஜகவின் ஆசைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் மக்கள் வாக்களித்துள்ளனர்” -ப.சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர்

Kallakurichi Hooch Tragedy : கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் மேலும் 6 பேர் கைது

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் மேலும் 6 பேர் கைது. பென்சிலால், சடையன், ரவி, செந்தில், ஏழுமலை, கவுதமன் ஆகிய 6 பேரிடமும் சிபிசிஐடி  தீவிர விசாரணை

Breaking News LIVE: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 நாகை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தது இலங்கை கடற்படை - கைது செய்யப்பட்ட 10 பேரும் காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

Background



  • தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள் தான் என தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி பேசியதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து ஆளுநர் மாளிகை பரபரப்பான விளக்கம் அளித்துள்ளது. இதுபோன்ற செய்திகளை ஆளுநர் மாளிகை முற்றிலுமாக மறுப்பதோடு, தவறான நோக்கத்துடன் பரப்பப்படும் போலி செய்திகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறது என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.இந்த போலியான தகவலைப் பரப்பியவர்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு ஆளுநர் மாளிகை காவல்துறையில் முறையான புகார் ஒன்றை அளித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 




  •  


    டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 92 ரன்கள் விளாச 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. பின்னர் பேட் செய்த ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும் இறுதியாக 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது அணியாக இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. 




  •  




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.