Breaking News LIVE:நாகையில் கள்ளச்சாராயம் விற்ற 21 பேர் கைது - போலீஸ் அதிரடி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
நாகையில் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நடிகர் விஜய் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு 3 அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
கள்ளச்சாராய மரணம் விவகாரத்தில் 8 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வருகின்றனர்.
எர்ணாகுளம் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வயநாடு உள்பட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
"விஷச் சாராய உயிரிழப்பை வைத்து எடப்பாடி பழனிசாமியும் பாஜகவும் அரசியல் செய்கின்றனர் கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் நடந்த உடனேயே நீதி விசாரணை மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க ஒத்துழைக்காமல் எதிர்கட்சித் தலைவர் நாடகமாடுகிறார்" -ஆர்.எஸ்.பாரதி, திமுக அமைப்புச் செயலாளர்
"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வருகிறது" - அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் 10ம் கட்ட அகழாய்வில் 27 பாசிகள், கண்ணாடி மணிகள் கண்டறியப்பட்டுள்ளது!
பள்ளிகளில் சாதிய வன்முறையை தடுக்க தமிழ்நாடு அரசுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழங்கிய அறிக்கையின் நகலை சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் கிழித்து எரிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் கோரிக்கை. துணை மேயர், ஆணையரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக மேயர் பிரியா பதில்
கள்ளக்குறிச்சி உயிரிழப்பு விவகாரத்திற்கு திமுக அரசு தான் காரணம். இந்த விவகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு கொள்ள வில்லை. கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும்” - கள்ளக்குறிச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு ஆகஸ்டில் நடத்த திட்டமிட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகையாக 2024-25ம் ஆண்டில் ரூ.4.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட இருக்கிறது.
நாட்டுக்கு சேவையாற்றவும், 140 கோடி மக்களின் கனவை நனவாக்கவும் எம்பிக்கள் பாடுபட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான ஆட்சி முக்கியம் - பிரதமர் மோடி
"கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் மட்டும் 11 பெண் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" - சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல்
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலையை இடமாற்றம் செய்ததை கண்டித்து கைகளில் அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றி வருகிறார். 110- விதியின் கீழ் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 10,000 கி.மீ கிராமபு புற சாலைகள் ரூ. 4,000 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மக்களவை தற்காலிக சபாநாயகராக பாஜக எம்.பி பர்துஹரி மஹ்தாப் பதவியேற்பு.. விழாவை புறக்கணித்தனர் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள்
கோவை விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாய் மூலம் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலைய வளாகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் இதே போல வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிர் எழுப்பு தொடர்பாக அதிமுக என்று மாவட்ட தலைநகரில் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் அனுமதி தராததால், அனுமதி மீறி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்
“தமிழ்நாடு முழுவதும் 4 கோடியே 42 லட்சம் ஒமெப்ரஸோல் (Omeprazole)மருந்துகள் கையிருப்பு உள்ளது; அது அல்சர் போன்ற வியாதிகளுக்கு தரப்படுகிறது; ஃபோமெபிசோல் (Fomepizole) 4 கோடி 42 லட்சம் மருந்துகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உள்ளது; மருந்துகள் கையிருப்பு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் வெள்ளை அறிக்கை விடவேண்டும் என கூறியுள்ளார் அதற்கும் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது” - சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் : "ரூ 10 லட்சம் கொடுத்து தீய முன்னுதாரணத்தை தமிழ் மண்ணில் உருவாக்கி இருப்பதை உணர வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கருத்து
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மட்டும் 109 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 12 பேர் கண் பார்வை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
டி20 உலகக் கோப்பை 2024ன் 51வது போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சூப்பர் 8ல் மோத இருக்கின்றன. அரையிறுதி போட்டிக்கு செல்லும் முனைப்பில் இரு அணிகளும் இந்த போட்டியில் தீவிரம் காட்டும்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவாங்கூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகிறது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுகின்றனர். மும்முனை போட்டி நிலவுவதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது. அதேசமயம் இந்த இடைத்தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 16 வேட்பாளர்களும், சுயேட்சையாக 40 பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி, திண்டுக்கல், தென்காடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்கள், 3 விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.
இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு இன்று நடக்க உள்ளது. சிஎஸ்ஐஆர்-யுஜிசி-நெட் தேர்வை மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஜூன் 21) ரத்து செய்தது. இதற்குப் பிறகு, ஒரு நாள் கழித்து, தேசிய தேர்வு வாரியமும் (NBE) நீட் பிஜி தேர்வை ஒத்திவைத்தது.
Background
டி20 உலகக் கோப்பை 2024ன் 51வது போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சூப்பர் 8ல் மோத இருக்கின்றன. அரையிறுதி போட்டிக்கு செல்லும் முனைப்பில் இரு அணிகளும் இந்த போட்டியில் தீவிரம் காட்டும். இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான இந்தப் போட்டியானது இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு செயின்ட் லூசியாவில் தொடங்குகிறது.
- பாஜக அரசு புதிதாக ஆட்சி அமைத்த பிறகு, 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 24) முதல் தொடங்க உள்ளது. 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கி வருகின்ற ஜூலை 3 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு பின் இன்று கூடவுள்ள மக்களவை கூட்டத்தொடரில் புதிய எம்.பிக்கள் பதவியேற்கவுள்ளனர். இந்த மக்களவை கூட்டத் தொடரின் முதல் இரண்டு நாள்களிலும் புதிய எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனர்.
- திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுகின்றனர். மும்முனை போட்டி நிலவுவதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது. அதேசமயம் இந்த இடைத்தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 16 வேட்பாளர்களும், சுயேட்சையாக 40 பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தல் அலுவலகமான விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாள் என்பதால் அன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -