Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
பாலியல் வழக்கில் கைதாகியுள்ள சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராய வழக்கில் இஞ்சினியரிங் படிப்பை பாதியில் நிறுத்திய மாதேஷ் என்பவர் 6 பேரல் மெத்தனால் சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.
பீகாரில் நீட் தேர்வு முறைகேடு காரணமாக 17 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு மருத்துவ சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக பா.ஜ.க.வில் சாதிய அடிப்படையில்தான் நடவடிக்கையா? என்று திருச்சி சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில் 54 வயது தங்கையை கத்தியால் குத்திய 75 வயது அண்ணன் கபாலி கைது செய்யப்பட்டார்.
சென்னையில் 1800 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிவகுமார் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
நீட் இளநிலைத் தேர்வு, யுஜிசி நெட் தேர்வு விவகாரத்தில், எவ்வளவு பெரிய, அதிகாரத்தில் இருக்கக்கூடிய ஆளாக இருந்தாலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒருவர்கூடத் தப்பிக்க முடியாது என்று மத்திய இணை அமைச்சர் சஞ்சய் சேத் உறுதி அளித்துள்ளார்.
ஏரல் அருகே முக்காணி கிராமத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது சமூகநீதிக்கு எதிரானது என்றும் அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில், பார்வதிபுரம், ஆசாரிப்பள்ளம், கோட்டார் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான மாதேஷ் நண்பர்கள் சக்திவேல் மற்றும் மீன் வியாபாரி கண்ணன் ஆகியோர் கைது. மெத்தனால் கடத்த உதவியதாக சக்திவேல் மற்றும் கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல்
பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் சூரஜ் ரேவண்ணா கைது!
கர்நாடகா ஆபாச பாலியல் வீடியோக்கள் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரருமான சூரஜ் ரேவண்ணா கைது
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது - முக்கிய குற்றவாளியான மாதேஷின் நண்பர்கள் சக்திவேல் மற்றும் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் 108 பேரில் 104 பேரின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சென்னையில் உள்ள எம்ஜிஆர் நகரில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
இன்று நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் திடீரென ஒத்திவைக்கப்பட்டதால் மாணவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களை விசாரணைக்காக யாழ்ப்பாணம் துறைமுகத்துக்கு அழைத்து சென்றது இலங்கை கடற்படை
Background
நீட் முறைகேடு விவகாரத்தை தொடர்ந்து தேசிய தேர்வு முகமை தலைவர் பதவியில் இருந்து சுபோத்குமார் சிங் நீக்கப்பட்டுள்ளார். நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 23 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்த நிலையில் நெட் தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக கூறி அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக உள்ள பிரதீப் சிங் கரோலாவுக்கு தேசிய தேர்வு முகமையின் தலைவராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- டி20 உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் வங்கதேசம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றது.
இந்நிலையில் இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், முதுநிலை நீட் தேர்வின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்வதற்காக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -