Breaking News LIVE: மஹாராஷ்ட்ராவில் ஓபிசி சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரி போராட்டம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
தமிழ்நாட்டில் இன்று 4 இடங்களில் 100°Fக்கு மேல் வெயில் பதிவு!
மதுரை விமான நிலையம் - 102°F
ஈரோடு - 101°F
கடலூர் - 100°F
பரங்கிப்பேட்டை - 100°F
"கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சம்பவம் சட்டசபை கூடும்போது ஏன் நடக்க வேண்டும்? நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 இடங்களை வென்ற திமுக கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற திட்டமிடலோடு இந்த சம்பவம் உருவாக்கப்பட்டதோ என சந்தேகம் எழுந்திருக்கிறது" -பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
பாஜக அலுவலகத்துக்கு பூட்டு போட்டு காங்கிரஸ் போராட்டம்! நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து ஹரியானாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் காங்கிரசார், பாஜக அலுவலகத்துக்கு பூட்டு போட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டனர். மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பிரசன்னா என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
“பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.667 செல்வு; ஆனா செல்லப் பிராணிகளுக்கு ரூ.2199” - வீட்டுப் பணியாளர்களை கொடுமைப்படுத்திய வழக்கில் ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறைத்தண்டனை - சுவிஸ் நீதிமன்றம்
“சாகசம் பண்ணும்போது இதெல்லாம் சகஜம்” விஜய்யின் பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த பேட்டி
“சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவை, பொதுமக்கள்-தனியார் பங்களிப்பு முறையில் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்” - அமைச்சர் கே.என்.நேரு
ஆளும் அரசின் விழாக்களுக்கு செல்வது மட்டும் திரைத்துறையின் பணியல்ல! மக்கள் பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் குரலை அரசியல் என்று விடுவார்கள். திரைத்துறையினரும் குரல் கொடுத்தால் அரசால் திசை திருப்ப இயலாது! கள்ளக்குறிச்சி விவகாரம் அரசியல் அல்ல... பாமர மக்கள் மீதான அதிகார தாக்குதல்! எல்லாம் கொடுத்த மக்களுக்காக ஏன் குரல் கொடுக்க கூடாது என்பதே எல்லோரின் கேள்வியாகும்! மக்கள் படும் துயரங்களை கண்டு மற்றவர்களை போன்று தூரம் செல்லாமல் குரல் கொடுத்து நேரிலும் சென்று ஆறுதல் தெரிவித்த தம்பி விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! திரைப்பணியோடு நின்று விடாமல் மக்கள் பணியிலும் ஈடுபடவுள்ளது வரவேற்கத்தக்கது!
கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்களை கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்ட தமிழக அரசை கண்டித்து தருமபுரி தொலை தொடர்பு நிலையத்தில் பாஜக சார்பில் நிர்வாகிகள் 50க்கும் மேற்படோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் போலீசார் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்காத நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 60 க்கும் மேற்பட்ட பாஜகவினர் அனைவரையும் போலீசார் கைது செய்து பேருந்து மூலம் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தொலை தொடர்பு நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஷச் சாராய மரணம் தொடர்பாக 3 பேர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமர், சின்னதுரை மற்றும் ஜோசப்ராஜா ஆகியோர் மீது கச்சிராப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாராயத்தில் மெத்தனால் கலந்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும், எத்தனை பெரிய பொறுப்பில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை, அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை எனவும் கூறியுள்ளார். விஷச்சாரயத்தில் எங்களுக்கு என்ன தேவை, என்ன அவசியம் இருக்கிறது?; விஷச்சாரயத்தை ஒழிக்கும் முனைப்பில் திமுக அரசு உள்ளது. நிச்சயமாக இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
28 லட்சம் டெல்லி மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வரையிலும் உண்ணாவிரதத்தை தொடர்வேன் என ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். டெல்லியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது எனவும், ஹரியானா அரசு தண்ணீர் வழங்க சம்மதிக்காததால் வேறு வழியின்றி உண்ணாவிரதத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பகுதியில் தெருநாய்கள் சேர்ந்து கடித்ததில் 8 வயது சிறுமி படுகாயமடைந்துள்ளார். கூலித்தொழிலாளியான காளிராஜ் என்பவரது மகளான, மனிஷாவை 10 நாய்கள் சேர்ந்து கடித்து குதறியுள்ளன. அவருக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெருநாய்களை கட்டுப்படுத்த பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
குறைந்த விலை, சிறந்த சேவையில் ‘HD செட் ஆப் பாக்ஸ்’ அரசு கேபிள் டிவி மூலம் வழங்க திட்டம்; இன்னும் 2 மாதத்திற்குள் அனைத்து அரசு கேபிள்களிலும் ‘HD செட் ஆப் பாக்ஸ்’ கொண்டு வரப்பட்டு அதன் பிறகு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும்” என சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலக முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி திரு. விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் பொதுவாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் திரு.விஜய் அவர்கள் பூரண உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் பதிவில், “தமிழ்த்திரையுலகில் தன் திறமைமிக்க நடனம், உரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய ஆற்றலைப்பெருக்கி, ஆகச்சிறந்த நடிப்புத்திறனால் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் முதல் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் வரை அனைத்துத்தரப்பு மக்களின் மனங்களையும் வென்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு, எல்லோரது நேசத்தையும் பெற்று உச்சம்தொட்டு உயர்ந்து நிற்கும் அன்புத்தம்பி!
காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள, எனதருமை இளவல், எனது அன்புத்தளபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், என்னுயிர்த் தம்பி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!” என தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள திண்ணப்பட்டியில் கார்த்திக் என்ற விவசாயி வளர்த்து வந்த 10 ஆடுகளை சிறுத்தை கடித்துக் கொன்றது - வனத்துறையினர் தீவிர விசாரணை
போராட்டம் நடத்த வருமாறு சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் சென்னை மெரினாவில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதால் மறுத்தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது. இதனிடையே நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டு ரத்து செய்யப்பட்ட 1,563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுத்தேர்வு நடக்க உள்ளது.
மத்திய அரசு தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 கோடி அபராதம் விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது. பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதலை அடுத்து நடைமுறைக்கு வந்தது.
இன்று காலை 10 மணிக்கு நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Background
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளச்சாராய மரணங்கள் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து ஏற்பட்ட உடல்நலக்குறைவால் 100க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்கள். இதில் 55 பேர் உயிரிழந்துள்ளதுள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிலர் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 200 பெண்களை தேர்வு செய்து ரூ. 1 லட்சம் மானியம் வழங்கும் பிங்க் ஆட்டோ திட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டமானது, சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாகவும், பெண்களுக்கான சுய தொழில் வாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டுவதில், உரிமம் பெற்ற ஆர்வமுள்ள 200 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம் - இந்தியா ஆகிய அணிகள் மோதுகின்றது. சூப்பர் 8 சுற்றுகள் நடந்து வரும் நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம் ஆஸ்திரேலியாவில் டிஎல்எஸ் முறையில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இன்றைய ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்த முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சூப்பர் 8ல் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி அந்த வெற்றியை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -