Breaking News LIVE: துப்பாக்கிச்சுடுதல் : முன்னணி வீராங்கனை ஷ்ரேயாசி சிங் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் முன்னணி வீராங்கனை ஷ்ரேயாசி சிங் பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார்.
இந்த கள்ளச்சாராய விவகாரத்தில் சம்பந்தபட்டவங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்… கண் பார்வை போயிருக்கு, சிலர் உயிருக்கு போராடிட்டு இருக்காங்க… இனிமே இதை செய்யக்கூடாதுன்னு பயம் வரணும் - துரை வைகோ
செங்கல்பட்டு மாவட்டத்தில் பரனூர், மகேந்திராசிட்டி, மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
யூரோ சாம்பியன்ஷிப்: குரூப் E பிரிவில் ஸ்லோவக்கியா, உக்ரைன் அணிகள் மோதின. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் ஸ்லோவக்கியா வீரர் இவான் முதல் கோல் அடித்து அசத்தினார். ஆனால், அதன்பின் உக்ரைன் அணியில் 54வது நிமிடத்தில் மைகோலாவும், 80வது நிமிடத்தில் ரோமன் எரிம்சக்கும் அடுத்தடுத்து கோல் அடித்து உக்ரைன் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இதற்கு முந்தைய போட்டியில் தோல்வியை சந்தித்த உக்ரைன் அணி, தற்போது வெற்றி பெற்றுள்ளதால ரசிகர்கள் மகிழ்ச்சி.
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் மழைநீர் வடிகால் ரூ.15 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மேம்படுத்தப்படும்.
விஷச்சாராயம் மரண விவகாரம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்வு
Story Behind India's Narendra Modi ABC நிறுவனம் வெளியிட்டுள்ள Story Behind India's Narendra Modi documentary உண்மைகளை கொண்டதல்ல, அவதூறு என வெளியுறவுத் துறை அமைச்சகம் விமர்சனம்
தமிழ்நாட்டில் விஷச் சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஷிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தங்கபாலு, விஜய் வசந்த் உள்ளிட்ட பல காங்கிரஸ் பிரமுகர்கள் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
நீட் தேர்வு முடிவுகள் ஏன் முன்கூட்டியே வெளியானது என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தங்கபாலு, விஜய் வசந்த் உள்ளிட்ட பல காங்கிரஸ் பிரமுகர்கள் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
நீட் தேர்வு முடிவுகள் ஏன் முன்கூட்டியே வெளியானது என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷசாரயாம் வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்துள்ளது சி.பி.சி.ஐ.டி. போலீசார். இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் மூலம் வருமானமானது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ரூ. 1, 734 கோடி அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Breaking News LIVE: விஷச்சாராய விவகாரம் : அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் அவசர ஆலோசனை
சிறையில் இருந்து வெளிவர சில மணி நேரமே இருந்த நிலையில், விசாரணை நீதிமன்றம் நேற்று வழங்கிய இடைக்கால ஜாமீனுக்கு , டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீனுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
மலேசியாவிலிருந்து கடந்த 17-ம் தேதி சென்னை வந்த விமானப் பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சுங்கத்துறையினர் அந்தப் பயணியிடம் நடத்திய சோதனையின் போது 710 கிராம் எடையுள்ள 22 கேரட் தங்கச் சங்கிலி மற்றும் வளையல் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ.44.53 லட்சமாகும்.
இதேபோன்று, 18-ம் தேதி ஏர்அரேபியா விமான நிறுவன ஊழியர்கள், விமானப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்த ஒரு பையில், பசை வடிவிலான 1056 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கம் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 66.23 லட்சம் ஆகும்.
இது தவிர, 18ம் தேதி மலேசியாவிலிருந்து சென்னை வந்த ஒரு பெண் பயணியிடம் நடத்திய சோதனையில், அவர் கடத்தி வந்த 900 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.56.38 லட்சமாகும். கடத்தலில் ஈடுபட்ட பயணிகள் கைது செய்யப்பட்டு மேல் விசாரணை நடத்தப்படுகிறது.
விஷச்சாராய மரணங்கள் விவகாரம் : மாவட்ட ஆட்சியர்களுடன், காவல் கண்காணிப்பாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தும் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசிக்கிறார்
பாமகவிடம் 1 மாதம் ஆட்சியைக் கொடுத்தாலே போதும். போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்துக்காட்டுவோம் - அன்புமணி ராமதாஸ்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. தேர்தலில் போட்டியிட 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி இன்று மதியம் தனது முழு கொள்ளவை (47.50 கன அடி) எட்டும் என எதிர்பார்ப்பு சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை எதிர்த்து, அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது. இதுதொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல் தெரிவித்துள்ள நீதிமன்றம், அதுவரை கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமினை நிறுத்தி வைப்பதாகவும் உத்தரவிட்டுள்ளது
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வீடு வீடாக சென்று இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழ்ந்தவர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. விஷச்சாரயம் குடித்து கடந்த ஓராண்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, இதை தடுக்க அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான அதிமுக தொடர்ந்த வழக்கு. இதை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிய வழக்கு வரும் 26-ம் தேதி புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழ்ந்தவர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. விஷச்சாரயம் குடித்து கடந்த ஓராண்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, இதை தடுக்க அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிய வழக்கு வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழ்ந்தவர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. விஷச்சாரயம் குடித்து கடந்த ஓராண்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, இதை தடுக்க அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிய வழக்கு வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கத் தவறிய திமுக அரசை கண்டித்து வருகின்ற ஜூன் 25ல் போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 47 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். மேலும், கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களில் 30 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. கெஜ்ரிவாலின் ஜாமீன் உத்தரவை நிறுத்திவைக்கக் கோரிய மனுவை உடனே விசாரிக்க அமலாக்கத்துறை கோரிக்கை.
தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் உத்தரவிட்டுள்ளார்.
எனவே தலைவர் அவர்களின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 10வது சர்வதேச யோக தினம் மாணவ மாணவிகள் மத்தியில் கொண்டாடப்பட்டது.
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியின் அயராத முயற்சியால், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.
அதன் காரணமாகவும் ஜூன் 21ஆம் தேதியில் சர்வதேச யோகத்தனமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி மைதானத்தில் முனைவர் பிரவீன் பீட்டர் மற்றும் முதல்வர் மரியா அந்தோணி ராஜ் தலைமையில் சுமார் ஆயிரம் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்து அசத்தினர்.
மேலும் யோகா பயிற்சியின் சிறப்பு இன்றியமையாமை மேலும் யோகாவின் தேவைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ரூ. 54, 240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 6,780க்கு விற்பனையாகிறது.
அதேபோல், சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1.40 உயர்ந்து ரூ. 98.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரண வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் மாதேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளச்சாராயம் அருந்தி 40க்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கக்கூடிய சம்பவமாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு என்பது எதார்த்தத்தில் சாத்தியமில்லை. விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. அவர்களை நம்பி ஆதரவற்று நிற்கிறார்களே அவர்களுக்குத்தான் நிவாரணம் கொடுக்கிறோம். கள்ளுக்கடைகள் திறந்தால் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியம் தான். இதை பீகார் நிரூபித்துள்ளது. கேரளா அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கும் அதை அழிப்பது குறித்து ஒரு தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பு
தமிழ்நாட்டில் வரும் 23, 24, 25 ஆகிய 3 நாட்கள் அதி கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளை கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் 23, 24, 25 ஆகிய தேதிகளில் அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இன்றைய தினம் கேரளா மற்றும் கடலோர கர்நாடகாவில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமாக இருந்த சாராய வியாபாரிகள் 3 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாராய வியாபாரிகள் கோவிந்தராஜ், தம்பி தாமோதரன், கோவிந்தராஜ் மனைவி விஜயா ஆகியோருக்கு நீதிமன்ற காவல்.
மூன்று முறை நெல்லையப்பர் தேர் வடம் அறுந்த நிலையில் வட கயிருக்கு பதிலாக சங்கிலி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சேலம் மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர், மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சிகள் ஈடுபட்டனர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியாவின் வடக்கு எல்லையில் பனி படர்ந்த உயரத்தில் இந்திய ராணுவ வீரர்கள் யோகா செய்கிறார்கள்
நெல்லை நெல்லையப்பர் திருக்கோயில் 518 வது ஆண்டு நடைபெறும் ஆனித்தேரோட்ட திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் திருத்தேர் உட்பட 5 தேர்கள் நெல்லை ரத வீதிகளில் வலம் வருகிறது.
சுமார் 450 டன் எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் திருத்தேர் முழுக்க முழுக்க மனித சக்திகளால் இழுக்கப்படுகிறது.
கடந்த 13ம் தேதி தேரோட்டம் கொடியேற்றத்தோடு தொடங்கியது.
பத்து நாட்கள் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்றைய தினம் விமர்சையாக நடைபெறுகிறது.
சுவாமி நெல்லையப்பர் திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறுகிறது.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நெல்லையில் நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத்தின்போது வடம் அறுந்ததால் தேரோட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தேரோட்டத்தின்போது அறுந்த வடத்தை மாற்றி புதிய வடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
எந்தத் தேன் உணவானதோ அதே தேனில் எறும்பும் எந்தத் தண்ணீரில் மலரானதோ அதே தண்ணீரில் தாமரையும் எந்த நதியில் உயிர்கொண்டதோ அதே நதியில் மீனினமும் செத்து மிதப்பது தெரிந்த பின்னும் எந்த மது மறக்கச்செய்கிறதோ அதே மதுதான் மரிக்கச்செய்கிறது என்பதனை மறந்தனயே மனிதா! நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும் கள்ளச் சாராயம் ஒழிக்கப்பட வேண்டும் இறப்பின் காரணம் எதுவாயினும் இரங்கத்தான் வேண்டும் சாராயச் சாவுகளுக்காகவல்ல; சந்ததிகளுக்காக
நெல்லையில், நெல்லையப்பர் ஆனி கோயில் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் ஆனந்தி பென் படேல் ஆகியோர் 10வது சர்வதேச யோகா தினத்தை ஒட்டி யோகாசனம் செய்தனர்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி மும்பையில் உள்ள CSMT ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட யோகா அமர்வில், மத்திய ரயில்வே பொது மேலாளர் ராம் கரண் யாதவ் மற்றும் பிற மத்திய ரயில்வே மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
சர்வதேச யோகா தினத்தை ஒட்டி ஜம்மு & காஷ்மீரின் ஆர்எஸ் புரா செக்டரில் உள்ள, சர்வதேச எல்லையின் கடைசி போஸ்டில் பிஎஸ்எஃப் அதிகாரிகள் மற்றும் ஜவான்கள் யோகாசனம் செய்தனர்.
10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி மற்றும் பிஎல் வர்மா ஆகியோர் டெல்லியில் யோகாசனம் செய்தனர்.
Background
10வது சர்வதேச யோகா தினம்:
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜம்மு காஷ்மீரில் இருந்து 10வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை வழிநடத்துகிறார். பதற்றத்திற்கு சற்றும் பஞ்சமில்லாத ஸ்ரீநகரில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதால், இன்றைய நிகழ்வானது தேசிய அளவில் மட்டுமின்றி உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மோடி தலைமையில் யோகா:
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில், ஜம்மு காஷ்மீரில் உள்ள விஐபிக்கள், குழந்தைகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் என சுமார் 4,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 30 நிமிட லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா மற்றும் ஆயுஷ் அமைச்சர் பிரதாப்ராவ் கன்பத்ராவ் ஜாதவ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். ஸ்ரீநகரின் தால் ஏரிக்கரையில், ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு வளாகத்தில் யோகா நிகழ்வு நடைபெறுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள், "சுய மற்றும் சமூகத்திற்கான யோகா", அதாவது தனிநபர் நல்வாழ்வு மற்றும் சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதில் யோகாவின் முக்கிய பங்கை வலியுறுத்துவது ஆகும்.
ஏன் ஸ்ரீநகரில் கொண்டாட்டம்?
கடந்த காலங்களில் டெல்லியின் கர்தவ்யா பாதை, சண்டிகர், டேராடூன், ராஞ்சி மற்றும் ஜபல்பூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் யோகா தின கொண்டாட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். கடந்த ஆண்டு, நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கினார். இந்நிலையில் நடப்பாண்டு இறுதியில் ஜம்மு & காஷ்மீரில் நடைபெற உள்ளதால், இந்த முறை ஸ்ரீநகரை பிரதமர் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. பிரதமரின் வருகையை ஒட்டி, எஸ்பிஜி மட்டுமின்றி கடற்படையின் மார்கோஸ் கமாண்டோக்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச அளவில் கொண்டாட்டம்:
நியூயார்க்கின் டைம் ஸ்கொயர் பகுதியிலும் இன்று யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இதுதொடர்பாக பேசிய அங்குள்ள இந்திய தூதர் பினயா பிரதான், "இன்று நாங்கள் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறோம். பல நாடுகளைச் சேர்ந்த யோகா ஆர்வலர்கள் எங்களுடன் உள்ளனர். இது முழுவதுமாக தொடரும். இன்று நாம் 8,000 முதல் 10,000 பங்கேற்பாளர்களுடன் சேர்ந்து யோகாசனம் செய்வோம் என்று எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்தார். இதேபோன்று பல்வேறு உலக நாடுகளிலும் யோகா தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
ராணுவ வீரர்கள் கொண்டாட்டம்:
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு லடாக்கின் லேயில் உள்ள கர்னல் சோனம் வாங்சுக் மைதானத்தில் இந்திய ராணுவ வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். கொல்கத்தாவிலும் பிஎஸ்எஃப் வீரர்கள் யோகா செய்தனர். இதேபோன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் யோகா தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -