Breaking News LIVE: நாளை ராகுல் காந்தி பிறந்தநாள் : கபாலீஸ்வரர் கோயிலில் தங்கதேர் இழுத்த செல்வபெருந்தகை
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
ஆந்திரப் பிரதேசத்தில் முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பெயரில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை புதிய அரசு மாற்றம் செய்து அரசாணை வெளியீடு ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ்.ஆர் பெயரிலான திட்டங்களுக்கு என்.டி.ஆர்., மற்றும் சந்திரபாபு நாயுடு பெயர் சூட்டல்
காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஒலிமுகமது பேட்டை, பூக்கடை சத்திரம், ஓரிக்கை, பெரியார் நகர், பேருந்து நிலையம், தாமல், வாலாஜாபாத், பாலுசெட்டி சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை
இரிடியம் வாங்கித் தருவதாக கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ₹11 கோடி மோசடி செய்த புகாரில், கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த பெரோஷ்கான் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
"மோடி அரசு என்பதை கூட்டணி அரசாக மாற்றி எழுதியுள்ளனர் இந்திய மக்கள்" - ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மைலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தங்கதேர் இழுத்த பிறகு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி
நாடு முழுவதும் நடக்கும் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
நாகூர் நாகநாத சுவாமி கோயில் தேரோட்டத்தை ஒட்டி வரும் 20ம் தேதி ஒருநாள் மட்டும், நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு விடுமுறையை ஈடுசெய்ய அடுத்த மாதம் 6ம் தேதி பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு
"ஒலிம்பிக் போட்டியில் தங்கபதக்கம் வாங்க வேண்டும் என்பதே எனது லட்சியம்" - பிருத்விராஜ் தொண்டைமான் பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் பிரிவுக்கு தகுதி பெற்றுள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான்
‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க உள்ளது தமிழ்நாடு அரசு.
பயனாளர்களை தேர்வு செய்யும் பணியை வரும் 25ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு. இப்பட்டியலை வரும் 30ம் தேதி நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும்.
தொடர்ந்து ஜூலை 10ம் தேதிக்குள் வீடு கட்டும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தல்.
இத்திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ₹3,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவை: தொண்டாமுத்தூரை அடுத்த நரசிபுரம் பகுதியில் தண்ணீர் தேடி காட்டுக்குள் இருந்து நொய்யல் கிளை ஓடைக்கு வந்த ஒற்றை காட்டு யானை! ஓடையில் நீர் அருந்தி விட்டு பின் சென்றது. வனப்பகுதிக்குள் தண்ணீர் தொட்டிகள் அமைத்து நீர் நிரப்பி வைக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை
பரோலில் வந்து தலைமறைவாக உள்ள ரவுடி கர்ணாவின் வீட்டை சோதனை செய்ய புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு. குடும்பத்துடன் தலைமறைவாக உள்ள ரவுடி கர்ணா தொடர்பாக ஏதாவது ஆவணங்கள் அவரது வீட்டில் கிடைக்கலாம் என்ற அடிப்படையில் முதலியார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது
மேற்கு வங்க பாஜக எம்பிக்கள் 3 பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், பாஜக மாநிலங்களவை எம்பி அனந்த மகாராஜ் முதல்வர் மம்தா பானர்ஜியுடன் சந்திப்பு!
சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லைகள் - தெருநாய்களுக்கு உணவிடுதல், வீட்டருகே நிழலில் வைத்தல் போன்ற செயல்களுக்கு குழந்தைகளை அனுமதிக்காமல் இருக்குமாறு பொதுமக்களுக்கு மாநகராட்சி மேயர் பிரியா வேண்டுகோள் சென்னை மைலாப்பூரில் தெரு நாய் கடித்து காயமடைந்த சிறுவனை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் மேயர் பிரியா
சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட, யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமின் கோரிய வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
"மே மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பு பெறாத ரேஷன் அட்டைதாரர்கள், ஜூன் இறுதி வரை அவற்றை பெற்றுக் கொள்ளலாம்; ஜூன் மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பும் இம்மாத இறுதிக்குள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" - உணவுத்துறை அதிகாரிகள் தகவல்
மகாராஷ்ட்ரா: 300 அடி உயர மலை மேல் இருந்த கோயிலுக்கு தன் நண்பருடன் சென்ற ஸ்வேதா (23) என்ற பெண், காரை ரிவர்ஸ் எடுத்த போது விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு; கார் ஓட்டிப் பழக நினைத்த அப்பெண், நொடிப்பொழுதில் மலையில் இருந்து கீழே விழுந்தது உடனிருந்த நண்பர் எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது
மாங்கனி திருவிழாவை முன்னிட்டு வரும் 21ம் தேதி காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்தை மழை பெய்து வருகிறது. வில்பட்டி, பள்ளங்கி, பூம்பாறை ஆகிய பல மலைக்கிராமங்களில் காய்கறிகள் நடவு செய்யும் காலம் என்பதால், மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து ஏர்ப்போர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் சென்னையில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து விமாத்தில் இருந்த பயணிளின் உடைமைகளை ஓடுதள்த்தில் இறக்கி வைத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புதூர்நாடு அடுத்த பெரும்புள்ளி,சின்னவட்டானூர்,கல்லாவூர் ஆகிய பகுதியை சேர்ந்த 23க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூருக்கு பிக்கப் வேன் மூலம் வந்துள்ளனர்.
அப்போது திருப்பத்தூர் பெரிய ஏரி பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 23க்கும் மேற்பட்டோர் பலத்த படுகாயம் அடைந்துள்ளனர்.
சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் படுகாயம் அடைந்தவர்களை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பிறமாநில ஆம்னிகளில் முன்பதிவு செய்ய வேண்டாம் என தமிழக போக்குவரத்துக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக அரசின் அனுமதி இல்லாமல் இயங்கும் ஆம்னி பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டாம். வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அரசின் எச்சரிக்கைகளை மீறி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும். பாதிப்புக்கு உள்ளாகும் பயணிகள் உரிமையாளரிமே நிவாரணத்தை பெற முடியும்” எனத் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக கர்நாடகா அரசுக்கு எதிராக பெங்களூரு சுதந்திர பூங்காவில் ஜேடிஎஸ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் இன்று பிற்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ள, பயிற்சியாளருக்கான நேர்காணலில் கவுதம் கம்பீர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி மாவட்டம் பெரும்பாலையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். செஞ்சல்பட்டு மாவட்டத்தில் உள்ள 138 கல்வெட்டுகளின் விளக்க உரை அடங்கிய கல்வெட்டுகள் தொகுதி வெளியிடப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை எனவும் போட்டியிடவில்லை எனவும் தவெக தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் எங்கள் பிரதான இலக்கு. இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல் உட்பட எந்த தேர்தலிலும் தவெக போட்டியிடாது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து | மேற்கு வங்கம்: விபத்து நடந்த டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ஃபன்சிடேவா பகுதியில் இருந்து சமீபத்திய ட்ரோன் காட்சிகள், அந்த இடத்தின் தற்போதைய நிலையைக் காட்டுகின்றன.
இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 25 பேர் காயமடைந்தனர். இன்று காலை பன்சிதேவா பகுதியில் இருந்து ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலர் பொறுப்பில் இருந்துவிடுவிக்கப்பட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவை தலைவர் தேர்தலில் செஞ்சி மஸ்தான் மட்டுமே போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த நிலையில், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் சரக்கு ரயில் மேல் ஏறிய மாணவர் கவின் சித்தார்த் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு ரயில்மேல் ஏறிய போது மின்சார கம்பி மீது கை பட்டு உயிரிழந்தார்.
சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பனமரத்துப்பட்டி பிரிவு ரோட்டில் இருந்து ஆண்டலூர் கேட் வரை எவ்வித அனுமதியும் இன்றி 12 சிறுவர்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இதனையடுத்து, அனுமதியின்றி பயிற்சி கொடுத்த குற்றத்திற்காக நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலம்
பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்ற பயிற்சியாளர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் மல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அனுமதி இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சி கொடுத்த குற்றத்திற்காக பயிற்சி கொடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யஜனாவின் பயனாளிகளுக்கு 17வது தவணையை வழங்க பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் 9.26 கோடி பயனாளிகளுக்கு தவணையாக ரூ.20000 கோடியை பிரதமர் மோடி வழங்க உள்ளார்.
இதன் மூலம் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ரூ.2000 வீதம் வருடத்திற்கு ரூ.6000 கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 4 மீனவர்களையும் ஒரு படைகையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.
4 பேரையும் விசாரணைக்காக காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
சென்னையில் வீட்டு வாசலில் தெரு நாய்களுக்கு பிஸ்கட் போட்டுக்கொண்டிருந்த 6 வயது சிறுவனை தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து படுகாயம் அடைந்த சிறுவன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்றும் சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 21ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Background
- வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். அதேநேரம் அங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில், பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
- கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வுப் பணியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று துவங்கி வைக்கிறார். தேர்தலுக்கு முன்பாகவே 8- இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வந்ததால் அங்கு பணிகள் துவங்காமல் இருந்தது.
- அன்னியூர் சிவா, விசிக தலைவர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வாட்சப் DP-யில் வையுங்கள். விசிகவிற்கு இரண்டு இடங்களில் போட்டியிட வைத்து தேர்தலில் அங்கீகாரம் வாங்கி கொடுத்த முதல்வருக்கு நன்றி செலுத்தும் விதமாக திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும் - எம்பி ரவிக்குமார்
- எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வு.க்கு சாதகமாக இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வின் பி-டீம் மாக செயல்படுவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் குற்றம் சாட்டினார்.
- பிறந்து 38 நாட்களே ஆன ஆண் குழந்தையை கொன்ற தாத்தா கைது - உயிருக்கு ஆபத்து மற்றும் கடன் தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோசியர் சொன்னதால் கொன்றதாக வாக்குமூலம்
- காஞ்சிபுரத்தில் பெண் காவலருக்கு பட்டப்பகலில் அரிவாள் வெட்டு - குடும்ப பிரச்னையில் கணவரே தாக்கியதாக தகவல்
- குஜராத்தில் சரக்கு ரயில் ஓட்டி வந்த ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு 10 சிங்கங்களின் உயிரை காப்பாற்றியுள்ளார். தண்டவாளத்தில் சிங்கங்களை பார்த்தவுடன் அவசர பிரேக்கை போட்டுள்ளார்.
- பாகிஸ்தான் அணி குறித்து பேசியுள்ள அந்த அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டியன், “பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை. ஆனால் அவர்கள் அதை ஒரு அணி என்று அழைப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அது ஒரு அணியே அல்ல” என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
- ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன் வீசிய 4 ஓவர்களில் ஒரு ரன்னை கூட விட்டுக் கொடுக்காமல், 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 4 ஓவர்களையும் மெய்டனாக்கிய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
- அடுத்த டி20 உலகக்கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ள அணிகள் உள்பட 8 அணிகள் அடுத்த டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. அந்த வகையில் அமெரிக்கா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -