Breaking News LIVE: 'விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்வை பாடமாக்குவேன்' - ஆளுநர் ரவி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
"முன்பு 4 பிரிவுகள் மட்டுமே இருந்தன; இஸ்லாமியர்கள் இருந்தார்கள். ஆனால் சாதி இல்லை" - ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேச்சு
Governor Ravi On Freedom fighters : "எனக்கு வாய்ப்பு கிடைத்தால், மறைக்கப்பட்ட விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்வை பாடமாக்குவேன். 20-ஆம் நூற்றாண்டில் இருந்து விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை கதை திரித்துக் கூறப்பட்டுள்ளது" - ஆளுநர் ரவி
யூரோ கோப்பை கால்பந்து: உக்ரைன் அணிக்கு எதிரான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது ரோமானியா அணி.
"தமிழ்நாட்டில் வாக்குச்சாவடியை கைப்பற்றுவதை அறிமுகப்படுத்தியதே அதிமுகதான்" - விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
காங்கிரஸ் தலைவர் கார்கேவுடன், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி எம்.பி. உள்ளிட்டோர் ஆலோசனை வயநாடு அல்லது ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்வது குறித்து ஆலோசனை
Jelly Fish Allergy Rameshwaram Ariyaman SeaShore : ராமேஸ்வரம் அரியமான் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கடித்ததால் 30க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகளுக்கு ஒவ்வாமை
"அண்ணாமலையை மாத்திட்டு பின்லேடனே வந்தாலும் சரி, அதிமுக முன் வைச்ச கால பின் வைக்காது" - பாஜகவுடன் மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதா என எழுப்பிய கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்
டெல்லியில் உள்ள காயிதே இல்லத்தில் வெற்றி பெற்ற இரண்டு தொகுதியில் எந்த தொகுதியை ராஜினாமா செய்வது? என்பது குறித்து ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தியுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் உள்ள துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஒருவார பயிற்சி முடித்துவிட்டு சென்னை திரும்பிய மாணவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். லண்டனில் பெற்ற அனுபவங்களை முதலமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர். சர்வதேச நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.
மேற்கு வங்கம்: டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ்.
Chennai Sub Inspector John Albert Suicide : சென்னை பட்டினபாக்கம் காவலர் குடியிருப்பில் துணை காவல் ஆய்வாளர் ஜான் ஆல்பர்ட் தற்கொலை
குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி தெரிவித்துள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை
சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு மாநகர் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள டோக்கன் வழங்கப்படுகிறது.
”ஒரு பெண்மணியை மேடையில் வைத்து அவமானப்படுத்தியது தவறு” - தமிழிசையிடம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா நடத்து கொண்டது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
திருவொற்றியூர் - உறவினர் வீட்டிலிருந்த தன் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்க சென்ற மதுமதி (33) என்ற பெண்ணை, தரதரவென இழுத்துச் சென்றுள்ளது எருமை மாடு. மாட்டின் கொம்பில் சிக்கிய அவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பலத்த காயத்துடன் 20 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் மதுமதி.
தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமே கிடையாது; பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றால் தனித்து நிற்க வேண்டும்; கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிட்டு 10% வாக்கு சதவிகிதம் பெற்று விட்டோம் என்று கூறுவது சரியல்ல என ஜெயகுமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்
எத்தனை தேர்தல் வந்தாலும் பாஜக வாக்குசதவீதம் அதிகரிக்காது. திமுக குறுக்குவழியில் வெற்றிபெற முயற்சிக்கும் - ஜெயக்குமார்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் அஜித் சுவாமி தரிசனம்.. அன்பளிப்பாக பெருமாளின் சிலையை கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட ரசிகர்
காஞ்சிபுரத்தில் உள்ள விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலரை கணவன் சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடினார். இதில் ரத்தக்காயம் அடைந்த பெண் காவலரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மஹாராஷ்ட்ர மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நியமனம் தேர்தல் இணை பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் நியமனம்
சென்னை திருவொற்றியூரில் எருமை மாடு முட்டி பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அந்த மாட்டினை யாரும் உரிமை கோரவில்லை என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள மரத்தில் டெம்போ டிராவலர் மோதியதில் 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தோல்வி பயத்தால் அதிமுக போட்டியிடவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவி ரயில்வே அமைச்சகம் அறிவித்தது
மேற்கு வங்க ரயில் விபத்தில் மீட்பு பணிகள் முடிவடைந்தது. சரக்கு ரயிலின் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் மற்றும் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் காவலர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 25 பேர் காயமடைந்துள்ளனர் என்று ரயில்வே வாரியத் தலைவரும்,ர தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெய வர்ம சின்ஹா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் பயணிகள் விரைவு ரயிலின் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலி எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உருகுலைந்த ரயில் பெட்டிகளை கேஸ் கட்டர்கள் கொண்டு அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அதிகாரிகளிடம் பேசி நிலைமையை கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விபத்து நடந்த இடத்திற்கு செல்கிறார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில், பயணிகள் விரைவு ரயில் மீது மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். போர்க்கால அடிப்படையில் நடக்கும் மீட்பு பணிகளை நேரில் சென்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிடுகிறார்.
மேற்கு வங்கத்தில் ரயில்கள் மோதி விபத்து நடந்த நிலையில், காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸில் சிக்கித் தவிக்கும் பயணிகளை மீட்பதற்காக 10 பேருந்துகள் விபத்து நடந்த இடத்திற்கு புறப்பட்டுள்ளன. மேலும், சிலிகுரி-கொல்கத்தாவிலிருந்து சிலிகுரி டென்சிங் நார்கே பேருந்திலிருந்து கூடுதல் பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடாதது நல்லது தான். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்குத்தான் பலம். திமுகவை எதிர்த்து பாமக வெற்றி பெற்றால் தான் உண்டு. நானும் ஓட்டு போடுகிறேன். அரசியல் பேச உரிமை எனக்கும் உண்டு.
காஞ்சன்ஜங்கா ரயில் மோதலுக்கு சீல்டா ரயில் நிலையத்தில் அரசாங்கம் உதவி மையத்தை அமைத்துள்ளது. கூடுதல் விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களை அறியலாம். 033-23508794 , 033-23833326 என்ற எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் பயணிகள் விரைவு ரயில் - சரக்கு ரயில் மோதிய விபத்தில் இதுவரை உயிரிழந்த 5 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமைடந்த நிலையில், சரக்கு ரயில் ஓட்டுநரும் உயிரிழந்தார்.
மேற்கு வங்க பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்து இதுவரை 4 பேர் உயிரிழப்பு - பலர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மேற்குவங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுமதிக்க 30க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சியாஸ்டா செல்வதற்காக நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதால் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. ஜூன் 20 ஆம் தேதி இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் விதமாக நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர். ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து தங்களது அன்பினை பகிர்ந்து கொண்டனர்.
ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, அர்ஜுன் நாயக் என்ற கணினி ஆசிரியரை சந்தித்தார். அர்ஜுன் நாயக் ஒரு ஒப்பந்த ஆசிரியர், விபத்தில் தனது ஒரு காலை இழந்தார்.
சென்னை விமான நிலையத்துக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸ் அதிகாரிகள் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். சோதனையையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளிதான் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு வாரங்களில் சென்னை விமான நிலையத்து வந்த 5வது வெடிகுண்டு மிரட்டல் இதுவாகும். நேற்று நெல்லை ரயில்வே நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேசம்: ஈத் அல் அதா பண்டிகையை முன்னிட்டு கோரக்பூரில் உள்ள முபாரக் கான் ஷஹீத் மஜாரில் மக்கள் நமாஸ் செய்கிறார்கள்.
பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் விடுமுறை தினம் என்பதால் சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்ரீத் பண்டிகையையொட்டி போபாலில் உள்ள இத்கா மசூதியில் இஸ்லாமிய மக்கள் தொழுகை நடத்துகிறார்கள்
டெல்லி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஃபதேபுரி மசூதியில் மக்கள் தொழுகை நடத்துகிறார்கள்.
இஸ்லாமியர்களால் தியாக திருநாளாக பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் ஒன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் அதிகாலையில் நடந்த சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.
Background
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான எலான் மஸ்கின் கருத்து, இந்திய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான குற்றச்சாட்டுகள் பல காலங்களாகவே தொடர்கிறது. சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின்போது இவை மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே தொழிலதிபர் எலான் மஸ்க் “மின்னணு வாக்கு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும். அவற்றை ஒழிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனை ராகுல்காந்தி ஆதரித்து பதிவு வெளியிட்டார். ஆனால் பாஜக முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
- டி20 உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்றது. இதனிடையே இன்று நடக்கும் 3 ஆட்டங்களில் வங்கதேசம் -நமீபியா, இலங்கை நெதர்லாந்து, நியூசிலாந்து - பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றது.
- விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. முன்னதாக அதன் கூட்டணி கட்சியான அதிமுகவும் இடைத்தேர்தலில் பங்கேற்க போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இடைத்தேர்தல் மீது நம்பிக்கையில்லை. எனவே தொண்டர்களின் நேரம், பணம், உழைப்பு ஆகியவற்றை வீணடிக்க விரும்பவில்லை என தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -