Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
நெல்லை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் தற்போது காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்புத்துறையினரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் மணலி புதூரில் தனியார் பெயிண்ட் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
மத்திய அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக போபால் வந்தடைந்த மத்திய அமைச்சரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராம்பன் மாவட்டத்தில் உள்ள சங்கல்தான் மற்றும் ரியாசி இடையே புதிதாக கட்டப்பட்ட உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்-செனாப் ரயில் பாலத்தை ரயில்வே அதிகாரிகள் விரிவான ஆய்வு செய்தனர். இந்த வழித்தடத்தில் விரைவில் ரயில் சேவை தொடங்கும்.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே நாடு; ஒரே கோரிக்கை எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க வரும் 20ஆம் தேதி தமிழகம் வருவதாக இருந்தது. ஆனால் தற்போது அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதமர் மோடியின் வருகையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாஜகவின் கரு.நாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ்கார்டனில் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவில் தற்போது சாதி வந்துவிட்டது. மக்களவைத் தேர்தலில் அதிமுக 3வது, 4வது இடத்திற்கு செல்ல யார் காரணம்? 2026ல் அதிமுக தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்கும். தானும் கெட்டு கட்சியையும் கெடுக்கக்கூடாது. பட்டிதொட்டியெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க போகிறேன். அதிமுக முடிந்துவிட்டது என நினைக்க முடியாது. என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் ஆகிவிட்டது” என்றார்.
மேல்மலையனூர் அருகே உள்ள கண்டமநல்லூர் கிராமத்தில் வீட்டின் அருகே இருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்த கோப்பெருந்தேவி (15) என்ற சிறுமி உயிரிழப்பு
வருகின்ற ஜூன் 18 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 19 முதல் 22 வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்கள் புதுவை, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார்: பாட்னாபில் கங்கை ஆற்றில் பக்தர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 17 பேர் சென்ற படகு உமாநாத் கங்கா காட் பகுதியில் கவிழ்ந்ததில் நீரில் மூழ்கியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உழவர் செயலி மூலம் கூட்டுறவு சங்கங்களில் உள்ள வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
“இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கருப்பு பெட்டி போன்றது, அவற்றை ஆராய்வதற்கு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை; இந்தியவின் தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என புகார்கள் எழுந்துள்ளன; அரசு அமைப்புகள் பொறுப்பேற்க முடியாத நிலையில் ஜனநாயகம் ஏமாற்று நாடகமாக மாறி, மோசடிக்கு ஆளாகிறது” - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும் என டெஸ்லாவின் நிறுவனரான எலான் மஸ்கின் பதிவை குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி X தளத்தில் பதிவு
“கோவை மக்களவைத் தொகுதியில் அதிகமான வாக்குகளை பாஜகவுக்கு மக்கள் அளித்திருக்கிறார்கள்; கூட்டணியில்லாமல் அதிகமான வாக்குகளை பெற்று மக்களை ஆதரவைப் பெற்று இருக்கிறோம்; பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மிகப்பெரிய எழுச்சியை பெற்றுள்ளார்” - கோவையில் தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேட்டி
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை கள்ளக்கடல் நிகழ்வு நடக்கும் என்பதால் பொதுமக்கள் கடலில் இறங்க பேரிடர் மேலாண்மை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. குமரி முனையில் இன்று குவிந்த சுற்றுலா பயணிகள், போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை அகற்றி கடலில் இறங்கி வழக்கம் போல குளித்தனர்
Breaking News LIVE: முதலமைச்சர் ஸ்டாலின் கனவு பலிக்காது - எடப்பாடி பழனிசாமி
சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் பெறுவோம் என்னும் ஸ்டாலினின் கனவு பலிக்காது
தி.மலை: சிக்கன் ரைஸ் சாப்பிட்ட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு வாந்தி மயக்கம்
ஈரோடு பவானிசாகரில் தர்பூசணியை டெம்போவில் ஏற்றிவிட்டு காவலுக்கு நிலத்தில் படுத்திருந்தபோது யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு.. சத்தம் கேட்டு எழுந்து டெம்போவில் ஏறி 3 பேர் தப்பித்தனர்
ஸ்ரீபெரும்புதூர்: வாடகைக்கு கார் எடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் - 5 பேர் கைது
Centipede In Ice cream : ஐஸ்கிரீமில் கிடந்த பூரான்!
உத்தரபிரதேசம் : நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான் இருந்ததாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு
புதுச்சேரியில் தொடர் கோயில் திருட்டில் ஈடுபட்டு வந்த, கடலூரைச் சேர்ந்த பிரபல உண்டியல் திருடன் சுகுன்ராஜை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கம்பி தடுப்புகளுக்குள் நுழைந்து கோயிலுக்குள் சென்று திருடியது எப்படி என நடித்துக் காட்டினான். உருளையன்பேட்டை முல்லை நகரில் பிரசித்தி பெற்ற உலக நாயகி அம்மன் கோவில் உள்ளது. கோயிலில் கடந்த 31ம் தேதி இரவு பூஜைகள் முடித்து வழக்கம் போல கோவிலை பூட்டினர். மறுநாள் காலை பூசாரி இளந்திரையன் கோயிலை திறந்தபோது கோயிலுக்குள் உள்ள அலுவலக பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அலுவலக பீரோ, லாக்கரில் இருந்த அம்மன் நெக்லஸ், கம்மல் உட்பட 5 பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது. கோயில் கருவறை கதவையும் உடைக்க முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்திராகாந்தியை ’இந்தியாவின் தாய்’ என்றும், மறைந்த காங்கிரஸ் முதல்வர் கே.கருணாகரன் மற்றும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஈ.கே. நாயனார் இருவரையும் தனது ’அரசியல் குருக்கள்’ என்றும் விவரித்தார்.
மேலும், கருணாகரன் நினைவிடத்திற்கு வருகை தருவதில் எந்த அரசியல் சாயத்தையும் சேர்க்க வேண்டாம்; தனது குருவுக்கு மரியாதை செலுத்த வந்ததாகவும் கூறினார் சுரேஷ் கோபி
விக்கரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு. பாஜக கூட்டணியில் உள்ள பாமகவை வெற்றிபெற வைக்கவே அதிமுக தேர்தல் புறக்கணிக்கப்பட்டுள்ளது என ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
நமீபியாவை வீழ்த்தியது இங்கிலாந்து. 4 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி, 5 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றால், தொடரில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் என்பதால் அப்போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தொடர் விடுமுறையை ஒட்டி, கன்னியாகுமரியில் கடலில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள். கள்ளக்கடல் எச்சரிக்கையை மீறி சுற்றுலா பயணிகள் அதிகாலை முதலே கடலில் இறங்கி குளித்து, செல்பி எடுத்து மகிழ்ச்சியுடன் இருந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குமரியில் 2.1 மீ, ராமநாதபுரம் 2.3மீ, தூத்துக்குடி, நெல்லையில் 2.2 மீ உயரம் வரை அலைகள் எழும்ப வாய்ப்புள்ளது.
Background
- நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தில் சிறில் என்பவரது வீட்டில் காம்பவுண்ட் சுவரை ஏறி உள்ளே நுழைந்து மர்ம நபர் அவரது மனைவி ரோனிகாவை கத்தியால் மிரட்டி மிளகாய் பொடியை தூவி 9 பவுன் தாலி செயின் பறித்துள்ளார் .இந்த சம்பவம் குறித்து வள்ளியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செங்கனூர் பகுதியில் அருகே உள்ள சாலையில் பள்ளி பேருந்து நேற்று காலை வந்து கொண்டிருக்கும் போது வாகனத்தில் இருந்து புகை கிளம்பியதால், டிரைவர் வாகனத்தை உடடியாக நிறுத்தி குழந்தைகளை பாதுகாப்பாக வெளியே கொண்டு சென்றார்.வாகனத்தில் இருந்த அனைத்து குழந்தைகளையும் பாதுகாப்பாக மீட்டார் டிரைவர்.
- கேரள மாநிலத்தில் திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் இன்று காலை 8.15 மணி அளவில் திடீரென்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சில நொடிகள் பலத்த அதிர்வு ஒலி உணரப்பட்டது. பீதியடைந்த பலர் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.மூன்று வினாடிகளுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.3Sec முதல் 4 Sec வரை இருந்தாக கூறுகின்றனர்.
- 2024 டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா - கனடா இடையிலான ஆட்டத்தில் மழை நிற்காமல் தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் தொடங்கும் முன்பே ரத்து செய்யப்பட்டது. அதாவது போட்டியில் ஒரு பந்து கூட வீசாமல் ரத்து செய்தது ஐசிசி. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -