Breaking News LIVE: 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு அரசு
Breaking News LIVE, July 9 : நாடு முழுவதும் இன்றைய பல்வேறு முக்கிய நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை, உடனுக்குடன் அறிய ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் தொடர்ந்து இணைந்திருங்கள்
சீர்காழி ரவுடி சத்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்கிய புகாரில் கைதான பாஜகவைச் சேர்ந்த அலெக்சிஸ் சுதாகர் வழக்கறிஞராக பணிபுரியத் தடை
Kasthuri Rajamani : பாரீஸில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் 2024 – ல் மகளிருக்கான 67 கிலோ எடைப் பிரிவு பளுதூக்கும் போட்டிக்கு தேர்வாகியுள்ள தங்கை கஸ்தூரி ராஜாமணி அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினோம். தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக்கில் களம் காணும் 16 ஆவது நபராக தேர்வாகியுள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணியின் விமானப் பயணச் செலவு – தங்குமிடம் – உணவு – பயிற்சி மற்றும் இதர செலவுகளுக்காக ரூ. 7 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து வழங்கினோம். தங்கை கஸ்தூரி ராஜாமணி சர்வதேச அரங்கில் வெற்றி வாகை சூடி இந்தியாவிற்கும் – தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கட்டும்.
அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் 200 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. படுக்கை மற்றும் இருக்கை வசதிகளுடன் இந்த பேருந்துகள் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கீழ்தளத்திலும் படுக்கை வசதிகளுடன் கூடிய பேருந்துகள் மூலம் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மிகுந்த பயனடைய உள்ளனர். புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்துகளில் பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பேனிக் பட்டன் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மின்விசிறி மற்றும் மொபைல் போன் சார்ஜர், ரீடிங்க் லைட் போன்றவை கொண்டுவரப்பட்டுள்ளன.
விராட் கோலிக்குச் சொந்தமான பப் மீது வழக்குப்பதிவு... பெங்களூரு போலீஸ் அதிரடி நடவடிக்கை
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகு காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ் குமார் அகர்வால், ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக நியமனம் - தமிழ்நாடு அரசு
11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
“தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்
JEE நுழைவுத் தோ்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த பழங்குடியினர் மாணவி சுகன்யாவுக்கு வாழ்த்து சொன்ன ஜி.வி.பிரகாஷ்
“ஒரு குற்ற சம்பவம் நடைபெற்று தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குற்றம் சுமத்தலாம்; சம்பவம் நடைபெற்ற உடனே நடவடிக்கை எடுத்து, வழக்குப்பதிவு செய்து நீதிமன்றம் முன்பு நிறுத்துகிறார்கள்; தனிப்பட்ட முறையில் நடைபெறும் விவகாரங்களை பெரிதுபடுத்த வேண்டாம்” - புதுக்கோட்டையில் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு பேட்டி
திரு. செல்வப்பெருந்தகை அவர்கள், குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை. திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.
தமிழ்நாட்டில் மேலும் 5 தனியார் மருத்துவக் கல்லூரிகள். நாடு முழுவதும் 113 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது தேசிய மருத்துவ ஆணையம் (NMC)
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்! கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள்.
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு அன்புமணி ராமதாஸ் ஆறுதல்! கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
Breaking News LIVE, July 9: ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது, ஆம்ஸ்ட்ராங் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தின் வலது மற்றும் இடதுபுற பாசன கால்வாயில் தண்ணீர் சுழற்சி முறையில் முதல் மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும் இரண்டாவது மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும் மொத்தம் 10 நாட்களுக்கு
தண்ணீர் விட்டும், 5 நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும், தவணை ஒன்றுக்கு 72.60 மி.க.அடி வீதம் மொத்தம் 609.84 மில்லியன் கனஅடி சுழற்சி முறையில் 8 தவணையாக 10.07.2024 முதல் 06.11.2024 வரை மொத்தம் 120 நாட்களுக்கு முதல் போக விவசாய பாசனத்திற்கு சுமார் 8000 ஏக்கர் பாசன நிலத்திற்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம்
மற்றும் ஓசூர் வட்டம், இடதுபுற கால்வாய், வலதுபுற கால்வாய் மற்றும் கிளைக்கால்வாய்கள் மூலம் 8000 ஏக்கர் பாசனபரப்புகள் பாசன வசதி பெறும்.
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்
நீர்வளத் துறை
புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளுக்கான நேரம் மாற்றம் - வருகிற 15ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது. புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் நேரங்களை மாற்றி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதன்படி, காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12. 25 மணிக்கு இடைவேளை விடப்படுகிறது. அதன் பிறகு 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை பள்ளிகள் செயல்பட உள்ளன. இந்த புதிய நடைமுறை வருகிற 15ம் தேதி காமராஜர் பிறந்தநாள் அன்று அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மொத்தம் 261 குற்றவாளிகள்.. 1977 வழக்குகள்” தமிழ்நாடு பாஜகவில் உள்ள குற்றவாளிகளின் பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
ICC Men’s Player of the Month - June 2024 ஐசிசி-யின் 2024 ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா.
புதுச்சேரி: அனைத்து அரசு பள்ளிகளிலும் பாட வகுப்புகள் அதிகரிப்பு; தினசரி 7 வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் 8 வகுப்புகளாக நடைபெறும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், முன்னேற்பாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பழனி தெரிவித்துள்ளார். 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,040 பெண் வாக்காளர்களும், 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2,37,031 வாக்காளர்கள் உள்ளனர்.
276 வாக்குச்சாவடி மையங்களில் 662 வாக்குப்பதிவு கருவிகளும் (Ballot Unit). 330 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit) மற்றும் 357 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) என மொத்தம் 1349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
பதற்றமான வாக்கு சாவடி 45 உள்ளதால் அங்கு பணி புரிய 53 நுண்பார்வையாளர்கள் பணியில் இருப்பார்கள். தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு சார் அலுவலகங்கள்,தனியார் அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது! - மாவட்ட தேர்தல் அதிகாரி பழனி
தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்காலில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மாலை அல்லது இரவு வேளையில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி, குறந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்திற்குள் வந்த செய்திகள்:
புதுக்கோட்டையில் மர்மநபர்களால் இளைஞர் வெட்டிப் படுகொலை.
தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் 21 வயது இளைஞர் வெட்டிப்படுகொலை.
தேனியில் குண்டர் சட்டத்தில் சிறைசென்று வந்தவரை கொடிய ஆயுதங்களுடன் ஒரு கும்பல் கொல்ல முயற்சி.
இனி இந்த விடியா திமுக அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்தி எந்த பயனும் இல்லை. எனவே, மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது. மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு!
ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று அவரது மனைவிக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் செய்தவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள் என உறுதி அளித்தார்.
பிரதமர் மோடிக்கு எதிராக மாநிலங்களவையில் காங்கிரஸ் உரிமை மீறல் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது. முன்னாள் துணை குடியரசு தலைவர், ஹமித் ஹன்சாரியை விமர்சித்ததன் மூலம் பிரதமர் மரபுகளை தகர்த்துவிட்டதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக டிஜிபிக்கு தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாளிதழ் செய்தியை அடிப்படையாக வைத்து தாமாக முன்வந்து, தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. படுகொலை என்பதால் விரைந்து பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில், சட்ட-ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ரஷ்ய வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “எனது 3வது பதவி காலத்தில் 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்குவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 கோடி வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற்றுவதே இலக்கு. எனது 3வது பதவி காலத்தில் இன்னும் 3 மடங்கு அதிகமாக உழைக்க காத்திருக்கிறேன். இந்தியாவில் உள்ள 140 கோடி இந்தியர்களின் அன்பை பகிர்ந்து கொள்ள ரஷ்யா வந்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் செல்ல இருக்கிறார். அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்கிறார்.
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் செல்ல இருக்கிறார். அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்கிறார்.
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.54,140 க்கு விற்படுகிறது. கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ.6,770க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ99.50க்கு விற்பனையாகிறது.
சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சென்னை அண்ணாநகர் பகுதியில் கஞ்சா விற்ற 4 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்துள்ளனர். மணிகண்டன், இஸ்மாயில், ரஞ்சித், சதாஹித் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் மீன்களுக்கு போதிய விலை நிர்ணயம் செய்யக்கோரி மீனவர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட மீனவர்களுக்கு போதிய விலை கிடைக்காததால் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் 113 புதிய மருத்துவக்கல்லூரிகளை தொடங்குவதற்கு ம்த்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ நாடு முழுவதும் 113 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமையவுள்ளன. அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் 22 கல்லூரிகள், மகாராஷ்ட்ராவில் 14 கல்லூரிகள் அமையவுள்ளன.
தமிழகத்தில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதாவது விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா ஓங்கூர், விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சென்னை அவனம் பட்டு மற்றும் கன்னியாகுமரியில் தனியார் சார்பில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Background
- விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது - நாளை வாக்குப்பதிவு
- ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலி - சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் நியமனம் - அந்த பதவியில் இருந்த சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி அகாடெமி டிஜிபி ஆக மாற்றம்
- ஆம்ஸ்ட்ராங் படுகொலை - வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா? தமிழக அரச்டம் இயக்குனர் பா. ரஞ்சித் கேள்வி
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அமித் ஷாவிடம் தமிழக பாஜக இன்று மனு
- தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னையில் தொடரும் மேகமூட்டமான சூழல்
- தாம்பரம் அடுத்த திருநீர் மலையில் தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து - 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு
- ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் - உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
- மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல் காந்தி - பிரதமர் மோடி அம்மாநில மக்களை நேரில் சந்திக்க வேண்டும் என கோரிக்கை
- நாட்டு மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்த பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு
- மாஸ்கோவில் இன்று இந்தியா மற்றும் ரஷ்ய தலைவர்கள் இடையேயான உச்சிமாநாடு - இருநாட்டு உறவை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை
- ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் முறையீடு
- பார்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவராக ககன் நரங் அறிவிப்பு
- - - - - - - - - Advertisement - - - - - - - - -