தேனி மாவட்டத்திற்கு கஞ்சா சப்ளை! சிக்கிய ஆந்திரா சப்ளையார்.. போலீசாரால் அதிரடி கைது

ஆந்திராவில் இருந்து  தமிழக பகுதிக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மொத்த வியாபாரியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 25 கிலோ கஞ்சாவினை பறிமுதல் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Continues below advertisement

தமிழக, கேரள எல்லையை இணைக்கும் முக்கிய நகரமாக கம்பம் விளங்குகிறது. இந்தப் பகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. தமிழக, கேரள எல்லையை ஒட்டி உள்ளதால் கம்பத்திலிருந்து ஏராளமான வணிக ரீதியான போக்குவரத்துகள் தமிழ, கேரள இரு மாநிலங்களுக்குமிடையே இருந்து வருகிறது.

Continues below advertisement

இதையும் படிங்க : Shaktikanta Das: பிரதமரின் முதன்மை செயலாளரானார் சக்திகாந்த தாஸ்.! காஞ்சிபுரம் டூ மோடி ஆஃபிஸ்...


கேரள எல்லையை ஒட்டியுள்ள கம்பம் மெட்டு, குமுளி, கட்டப்பனை, வண்டிப்பெரியார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கேரள மாநிலத்தவர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கம்பம் பகுதிக்கு அதிகம் வருவதுண்டு, அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த வளர்ந்து வரும் நகரமாக கம்பம் திகழ்கிறது. அதேபோலத்தான் இரு மாநில எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள போடி நகர் பகுதியும், கம்பம் இருபோக விவசாயத்திற்கு மட்டும் பிரபலமானது அல்ல, இங்கு கஞ்சா விற்பனையும் பிரபலமானது என கூறப்படுகிறது. 

கம்பம் பகுதியில் சட்டவிரோதமாக அதிக அளவில் கஞ்சா விற்பனை என்பது இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என புகார் எழுந்துள்ளது. தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதியாக இருப்பதால் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் கம்பத்திற்கு வந்து கஞ்சா வாங்கி கொண்டு செல்வது தற்போதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் , கம்பம் வடக்கு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ராமர், செந்தில் குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் அவர்கள் மீது குண்டர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்த வைப்பு ரெட்டி ராஜு என்பவரிடம் இருந்து கஞ்சாவினை வாங்கி வந்து தேனி மாவட்டத்தில் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க :இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!


குற்றவாளி குறித்து தகவல் அறிந்த போலீசார் தனிப்படை அமைத்து ஆந்திர மாநிலத்திற்கு  விரைந்து சென்று அவரை கைது செய்து அவரிடமிருந்து 25 கிலோ கஞ்சாவினை பறிமுதல் செய்துள்ளனர். அதன் பின்னர் அங்குள்ள ஆந்திர மாநில கோதாவரி மாவட்டம் கோவூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்துசிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் கூறுகையில், தேனி மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையினை தடுப்பதற்கு தனி படை அமைத்து கண்காணித்து   வருவதாகவும், மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களை நீதிமன்ற உத்தரவுப்படி வங்கி கணக்கு, அசையும், அசையா சொத்துக்களை முடக்கி வருவதாகவும், தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். தமிழகப் பகுதியில் கஞ்சா விற்பனையை தடை செய்வதற்காக தேனி மாவட்டத்திலிருந்து ஆந்திரா மாநிலம் சென்று போலீசார் குற்றவாளிகளை கைது செய்து வரும் சம்பவம் சமூக ஆர்வலர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola