Breaking News LIVE: ஜூலை 8ல் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 04 Jul 2024 08:14 PM
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிக்கு அழைப்பு
ஹத்ராஸ் செல்லும் ராகுல் காந்தி!

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூற ராகுல் காந்தி உத்தர பிரதேசத்திற்கு செல்ல உள்ளதாக காங்கிரஸ் அமைப்பு செயலாளர் கே. சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 3 பேர் விடுதலை

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 3 பேர் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லோபஸ், அந்தோணி மற்றும் முருகானந்தம் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 3 பேர் விடுதலை

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 3 பேர் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லோபஸ், அந்தோணி மற்றும் முருகானந்தம் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

Breaking News LIVE: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! இரவு 8 மணிவரை வெளுக்க போகும் மழை!

Breaking News LIVE: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


வேலூர், ராணிப்பேட்டை மற்றும் நாமக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் இரவு மணி 8.30 மணி வரையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 





Breaking News LIVE: ஹதராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த சம்பவம் - 6 பேர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் ஹதராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த 121 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும் ஐஜி தெரிவித்துள்ளார். 

Breaking News LIVE: பாரிஸ் ஒலிம்பிக் போட்டி: இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்

ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை பாரிஸில் நடைபெற உள்ளன. இதற்கான 27 பேர் கொண்ட இந்திய தடகள வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தின் சார்பில் 5 பேர் இடம் பெற்றுள்ளனர். சுபா வெங்கடேஷன், பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், வித்யா ராமராஜன், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க உள்ளனர். 

Breaking News LIVE: ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்

Breaking News LIVE: ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்கிறார் , ஹேமந்த் சோரன்.

Neengal Nalama : ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

‘நீங்கள் நலமா’ - பயனாளிகளை வீடியோ கால் வாயிலாகத் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க - கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்

“கூலிப்படை மூலம் இக்கொலையை செய்த திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க” - படுகொலை செய்யப்பட்ட சேலம் அதிமுக நிர்வாகி சண்முகத்தின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு

NEET Protest : நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை மேலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மதுரை மேலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்.

திருப்பூர்: பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து – பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்

திருப்பூர்: பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து – பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்

Subramaniapuram - 16 Years : ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் 16 ஆண்டுகளை நிறைவு செய்தது.

ஜெய், சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு, ஸ்வாதி உள்ளிட்ட பலர் நடிப்பில், சசிக்குமார் இயக்கி நடித்த ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் 16 ஆண்டுகளை நிறைவு செய்தது.

Captain Miller : லண்டன் தேசிய திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை வென்றது கேப்டன் மில்லர்!

10-வது லண்டன் தேசிய திரைப்பட விழாவில், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை வென்றது, நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம்

T20 World Cup 2024 Champions : டெல்லி ஐடிசி மவுரியா ஓட்டலில் கேக் வெட்டிக் கொண்டாடிய டி20 உலக கோப்பை சாம்பியன்கள்

டெல்லி ஐடிசி மவுரியா ஓட்டலில் கேக் வெட்டிக் கொண்டாடிய டி20 உலக கோப்பை சாம்பியன்கள்! இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற உள்ளனர்.

Kovai Metro : கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

Coimbatore Metro Inpection : கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு!


மதுரையில் நேற்று மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து வங்கி அதிகாரிகள் ஆய்வுசெய்த நிலையில் இன்று கோவையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Gold Rate Today: மீண்டும் ₹54,000ஐ கடந்தது தங்கம் விலை!

Gold Rate Today: மீண்டும் ₹54,000ஐ கடந்தது தங்கம் விலை!


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.54080-க்கு விற்பனை செய்யப்படுகிறது

Rain Tamilnadu : 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது

எதற்காக நீட் வேண்டாம் என விஜய்யிடம் விளக்கம் கேட்க வேண்டும் - வினோஜ் பி.செல்வம்

நடிகர் விஜய் முதலில் மக்களை சந்திக்க வேண்டும். எதற்காக நீட் வேண்டாம் என அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும். NEET-க்கு என்ன விரிவாக்கம் என்பதை அவர் சொல்ல வேண்டும்: பாஜக வினோஜ் செல்வம் செய்தியாளர் சந்திப்பு

டெல்லி விமான நிலையம் வந்த இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு : காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்.

டி20 உலக கோப்பையுடன் தாயகம் திரும்பிய சாம்பியன்கள்.


டெல்லி விமான நிலையம் வந்த இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - மாவட்ட ஆட்சியர் பிடசாந்த் நடவடிக்கை. சின்ன சேலம் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது பிடிபட்டதாக தகவல்

Elephant Ruckus Kerala :1 மணி நேரம் போராடி விரட்டிய வனத்துறை அதிகாரிகள்

கேரளா: தென்னை மரத்தை வேரோடு சாய்த்த காட்டு யானை - 1 மணி நேரம் போராடி விரட்டிய வனத்துறை அதிகாரிகள்.. குடியிருப்பு வாசிகள் நிம்மதி!

6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

தமிழகத்தில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

நுங்கம்பாக்கத்தில் 7செமீ மழை பதிவு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. நுங்கம்பாக்கத்தில் ஒரு மணி நேரத்தில் 7செமீ மழை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தாயகம் திரும்பிய இந்திய அணி

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி 4 நாட்களுக்குப் பிறகு, தனி விமானம் மூலம் டெல்லி திரும்பியது. அவர்களுக்கு தொடண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மோசமான வானிலை காரணமாக இந்திய அணி வீரர்கள், உடனடியாக தாயகம் திரும்ப முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Background


  • நீட் விலக்கு சட்டத்துக்கு உடனடி ஒப்புதல் வழங்கக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக அரசு நிறைவேற்றிய தீர்மானத்துக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆதரவு

  • சென்னையில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை - நுங்கம்பாக்கத்தில் ஒரு மணி நேரத்தில் 6 செ.மீ மழை பதிவு

  • கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா - தனிப்பட்ட காரணங்களால் பதவி விலகுவதாக தகவல்

  • திட்டமிட்டபடி இன்று மறியல் போராட்டம் நடைபெறும் என்று பாம்பன் மீனவர்கள் அறிவிப்பு - அதிகாரிகள் உடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

  • அக்னிவீர் திட்டம் தொடர்பாக கடவுள் சிவன் முன்பு பொய் சொன்ன அமைச்சர் ராஜ்நாத் சிங் - வீடியோ வெளியிட்டு ராகுல் காந்தி விமர்சனம்

  • மணிப்பூர் பிரச்னையில் எண்ணெயை ஊற்றி பெரிதாக்க நினைப்பவர்களை அந்த மக்கள் புறக்கணிப்பார்கள் - பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேச்சு

  • ஹத்ராஸில் நூறுக்கும் அதிகமானோர் பலியானது தொடர்பாக ஜப்பான் மற்றும் ரஷ்யா நாடுகளின் தலைவர்கள் இரங்கல்

  • பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல்

  • ஜார்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன் ராஜினாமா - விரைவில் ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல்

  • டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி தாயகம் திரும்பியது - பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துகள் பெற திட்டம்

  • உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி திறந்தவெளி பேருந்தி இன்று மாலை மும்பையில் பேரணியாக செல்ல இருக்கிறது

  • அசாமில் வெள்ளம் - 46 பேர் உயிரிழந்த நிலையில், 16 லட்சம் பேர் பாதிப்பு

  • கேரளாவில் அதிர்ச்சி - 15 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான பெண்ணின் உடல் காதல் கணவனின் வீட்டில் மீட்பு

  •  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.