Breaking News LIVE, July 29: ”சுதந்திரத்துக்கு பிறகுதான் படிப்பறிவு குறைந்த நாடாக இந்தியா மாறியது' : ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
Breaking News LIVE, July 29: தமிழ்நாடு தொடங்கி பாரிஸ் ஒலிம்பிக் வரையிலான லேட்டஸ்ட் தகவல்களை, உடனுக்குடன் அறிந்துகொள்ள ஏபிபி செய்தி இணைய செய்திதளத்துடன் இணைந்திருங்கள்.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று இரவு 8 மணி நிலவரப்படி, விநாடிக்கு 93,368 கன அடியாக குறைந்துள்ளது.
அணையின் நீர் மட்டம் 118.41 அடியாக உயர்ந்து, நீர் இருப்பு 90.957 டி.எம்.சி. ஆக உள்ளது
"நம் நாட்டின் பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம், ஆன்மிகம் உள்ளிட்டவை ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் முற்றிலும் அழிக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்த பிறகுதான் படிப்பறிவு குறைந்த நாடாக இந்தியா மாறியது" - மதுரையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
திருவண்ணாமலை: ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே திருமலையில் நட்சத்திர வடிவில் அமைந்துள்ள சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழா நடைபெற்று வருகிறது
சென்னை உள்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் சுமார் 6 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளைக் கடத்த முயன்ற 3 பேர் கைது!
"முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகே OTT தளங்களில் வெளியிட வேண்டும்" தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்!
திருவாரூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ₹67.41 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு. திருவாரூர் நகரில் மாவட்ட மைய நூலகம் அருகில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலம் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 3 அரசியல் படுகொலைகள்: சட்டம் - ஒழுங்கை காக்க முடியாவிட்டால், திமுக அரசு பதவி விலக வேண்டும்! : பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்
பாரீஸ் ஒலிம்பிக் - ஆடவர் துப்பாக்கி சுடுதலில் 10 மீ ஏர் ரைபிள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் 4வது இடம் பெற்று பதக்க வாய்ப்பை இழந்தார்
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் - 40,000 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது .
மீதமுள்ள பயனாளிகளுக்கு வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் ஆணைகள் வழங்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தகவல் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024-25 நிதி ஆண்டில் ஒரு வீட்டுக்கு ₹3.10 லட்சம் என்ற அளவில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட ₹3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளில் பட்ஜெட்டில் கல்விக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
"கொலைகளுக்கு காரணம் முன்விரோதம்.. அரசு அல்ல" சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி
Free Vaccination in Private Hospitals: தமிழ்நாட்டில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளிலும், இனி குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக, பொதுசுகாதார இயக்குனர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி. 51 கவுன்சிலர்களில் யாரும் பங்கேற்காததால் தீர்மானம் தோல்வியில் முடிந்தது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஓரிரு நாட்களில் 120 அடியை எட்டும் என்பதால், எந்த நேரத்திலும் காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படும். இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்.
காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ரத்தாகுமா?
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையிலா தீர்மானம் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், பெரும்பாலான கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு எனத் தகவல்.
காஞ்சிபுரம் மேயராக அவர் பதவி வகித்த சில மாதங்களிலேயே அவருக்கு எதிராக கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கினர். மேயருக்கு எதிராக உள்ள 22 கவுன்சிலர்களும், ஆதரவாக உள்ள 10 கவுன்சிலர்களும் சுற்றுலா சென்றுள்ளதாகத் தகவல்
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு விநாடிக்கு 12,000 கன அடியில் இருந்து 16,000 கன அடியாக அதிகரிப்பு பகல் 12 மணியளவில் 20,000 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது
ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக நடிகை அபிராமி பதிவிட்டுள்ளார்!
Breaking News LIVE, July 29: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.51,320-ஆக விற்பனையாகி வருகிறது
சற்று நேரத்தில் தொடங்க உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு எதிராக , நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று நடைபெற உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் வருகை.
இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது
6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
நீர்வரத்து விநாடிக்கு 1.53 லட்சம் கன அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் மட்டம் 116.36 அடியாக உள்ளது டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது
புழல் ஏரிக்கு நீர்வரத்து 145 கனஅடியாக உள்ளது. நீர்இருப்பு 2579 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றம்.
சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 110 மில்லியன் கனஅடியாக உள்ளது. வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 307 மில்லியன் கனஅடியாக உள்ளது.
பொன்னேரி அடுத்த மாதவரம் பகுதியில் சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு, நடிகர் பிரபுதேவா முன்னிலையில் 'நம்ம மாஸ்டர் நம்ம முன்னாடி' என்ற உலக சாதனை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் சுமார் 100 நிமிடங்கள் தொடர்ந்து 100 பாடல்களுக்கு நடனமாடி அசத்தினர்.
ஒலிம்பிக்ஸ் மகளிர் வில்வித்தை குழு போட்டியில் 10வது முறையாக தங்கப் பதக்கத்தை தன்வசப்படுத்திய தென் கொரியா!
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கில்கலதுண்டி மீனவர்கள் 3 நாட்கள் முன்பு மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். கடலில் மீனுக்காக வலை விரித்தபோது பிரமாண்ட மீன் ஒன்று வலையில் சிக்கியது.
அதனை கடும் சிரமத்துடன் கரைக்குக் கொண்டு வந்தனர். பின்னர் கிரேன் உதவியுடன் அந்த மீனை எடைப் போட்டதில் ஒன்றரை டன் இருப்பதும், இந்த மீன் ஆயுர்வேத மருந்து தயாரிக்கப் பயன்படும் தேக்கு மீன் எனவும் தெரிந்தது. சென்னையைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் அதனை வாங்கிச் சென்றார்.
ஆடி கிருத்திகையை ஒட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தனது மகன்களுடன் சாமி தரிசனம் செய்தார் நடிகர் தனுஷ்!
Background
- டெல்டா பாசன சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு - அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியதால் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
- நாகை, மதுரை உள்ளிட்ட 8 இடங்களில் மீண்டும் சதமடித்த வெயில் - தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
- சென்னையில் 134வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை - பெட்ரோல் ரூ. 100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை
- வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர்கள், எஸ்பி, மேயர், கமிஷனராக ஆட்சி செய்யும் பெண் அதிகாரிகள் - குவியும் வாழ்த்துகள்
- குற்றால அருவிகளில் - குளிக்க தட விதித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகள்
- காரைக்குடி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு - காளை முட்டியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
- அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள 'எமக்கு தொழில் ரொமான்ஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்காததால் தயாரிப்பாளர் திருமலை காட்டம்
- பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பதக்கம் வென்ற மனு பாக்கர் - வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
- செய்தியாளர் சந்திப்பின்போதே மத்திய அமைச்சர் குமாரசுவாமி மூக்கில் ரத்தம் வழிந்ததால் பரபரப்பு - பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதி
- புதிய அரசியல் கட்சி தொடக்கம் எப்போது? - அறிவிப்பை வெளியிட்டார் பிரசாந்த் கிஷோர்
- அமெரிக்க தேர்தல் நன்கொடை வசூலில் கமலா ஹாரிஸ் சாதனை - 5 நாட்களில் ஆயிரத்து 600 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல்
- பாகிஸ்தானில் தீவிரவாதிகள் 38 பேர் அதிரடி கைது
- மகளிர் ஆசியக் கோப்பை ஃபைனலில், இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது
- இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியது இந்திய ஆடவர் அணி
- மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் வென்ற இங்கிலாந்து, தொடரை 3-0 என கைப்பற்றியது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -