Breaking News LIVE, July 28: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறப்பு
Breaking News LIVE: தமிழ்நாடு தொடங்கி பாரிஸ் ஒலிம்பிக் வரையிலான லேட்டஸ்ட் தகவல்களை, உடனுக்குடன் அறிந்துகொள்ள ஏபிபி செய்தி இணைய செய்திதளத்துடன் இணைந்திருங்கள்.
புதுச்சேரியில் பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பான சமாதான பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியடைந்துள்ளது. சமாதானம் பேசச் சென்ற பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவிடம் “பாஜக கூட்டணியால் எங்களுக்கு இழப்புதான் ஏற்பட்டுள்ளது” என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி காட்டம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவையடுத்து, சேலம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறப்பு - அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். குறுவை பயிர் சாகுபடி மற்றும் ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாட அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்தாண்டு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் ஏற்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது நீர் திறக்கப்பட்டுள்ளது.
"புதிய குற்றவியல் சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்திருக்கிறார்கள். அவையெல்லாம் நம் வாயில் நுழையகூட மாட்டேங்குது. ஏதோ சங்கீதா-னு மட்டும் நினைவுல இருக்கு" சென்னையில் நேற்று நடைபெற்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கருஞ்சைட்டை விருது வழங்கும் விழாவில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு.
பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் - முதல் தகுதிச் சுற்று போட்டியில் வென்றார் பி.வி.சிந்து
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விக்னேஷ் என்கிற அப்பு, விஜயகுமார், முகுந்தன் ஆகிய மேலும் 3 பேர் கைது.
இந்த வழக்கில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறித்து டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் மற்றும் உயரதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்
புதுச்சேரி: அதிமுக வார்டு செயலாளர் வெட்டி படுகொலை..
கடலூர் நவநீத நகர் அதிமுக வார்டு செயலாளர் பத்மநாபன் (43) என்பவரை புதுச்சேரி கடலூர் எல்லைப் பகுதியான பாகூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 5 மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம்; இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக பாகூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
“தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் இன்று மின்சார ரயில்கள் ரத்து காரணமாக பேருந்துகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்.
கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க கூடுதல் காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர் மட்டம் 107 அடியைத் தாண்டியுள்ளது
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 8. 30 மணி நிலவரப்படி, விநாடிக்கு 1,55,000 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது
தூத்துக்குடி செல்சீனி காலனி பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கி வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீர் தீ விபத்து பிளாஸ்டிக் கழிவுகள் தீப்பற்றி எரிவதால் கரும்புகை சூழ்ந்து மாநகரப் பகுதி முழுவதும் கரும்புகையாக காணப்படுகிறது 3 வண்டிகளில் வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் ஸ்டீஃபர்ன் ராஜை கேரள சைபர் கிரைம் போலீசார் மதுரையில் கைது செய்தனர்!
குருவாயூரப்பன் அம்பல நடையில் படத்தை பதிவேற்றம் செய்தது தொடர்பாக தயாரிப்பாளர் அளித்த புகாரில் நடவடிக்கை
குஜராத் மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.கைலாஷ்நாதன், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமனம்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்த இவர், ஊட்டியில் பள்ளிக்கல்வியையும் சென்னை பல்கலையில் முதுகலை பட்டமும் முடித்துள்ளார்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு நிலவரம் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் நீர் இருப்பு 39.01% ஆக உள்ளது.
மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 4.587 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது
செம்பரம்பாக்கம் - 40.27%
புழல் - 78.39%
பூண்டி - 3.47%
சோழவரம் - 10.36%
கண்ணன்கோட்டை - 61.6%
கன்னியாகுமரி: குமரி முனை, விவேகானந்தபுரம், கொட்டாரம், அகஸ்தீஸ்வரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பரோல் விடுப்பில் வெளிவந்து, 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர், தனிப்படை போலீசாரால் கைது.
சென்னை பரங்கி மலையில் நடந்த கொலை வழக்கில், கண்ணன் (56) என்பவருக்கு பூவிருந்தவல்லி விரைவு நீதிமன்றம் 2007ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது புழல் சிறையில் இருந்த கண்ணனுக்கு 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 5 நாட்கள் நீதிமன்றம் பரோல் விடுப்பு வழங்கிய நிலையில், வெளியே வந்த அவர் தலைமறைவானார் நாகை மாவட்டம் வேளங்கண்னியில் பதுங்கியிருந்த அவரை 12 ஆண்டுகள் கழித்து போலீசார் கைது செய்தனர்
புதிய திரைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் மதுரையில் கைது.
ஸ்டீபன் ராஜ் என்பவரை கேரள சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு படத்திற்கு ₹5000 கமிஷன் பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் புதிய படங்களின் முதல் நாள் காட்சியிலேயே சிறிய கேமரா வைத்து வீடியோ எடுத்துள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புதிய படங்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 1.34 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது அணையின் நீர் மட்டம் 107.69 அடியாகவும், நீர் இருப்பு 75.167 டி.எம்.சி. ஆகவும் உள்ளது
கோவை தடாகம் பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்துக்குள் புகுந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த மாட்டுத் தீவனத்தை ருசித்துச் சாப்பிட்ட காட்டு யானைகள்!
கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து, வினாடிக்கு 1.35 இலட்சம் கன அடியிலிருந்து 1.52 இலட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒகேனக்கல் பகுதியில் பாறைகள், அருவிகள் தெரியாத அளவில் வெள்ளக் காடாய் காட்சியளித்து வருகிறது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் காவிரி கரையோரமுள்ள ஆலம்பாடி, ஊட்டமலை, ஒகேனக்கல், நாகமரை, பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து ஒகேனக்கல்லில் 14-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
Background
- புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாடு - மக்களின் கொந்தளிப்பிற்கு பாஜக பதில் சொல்லியே ஆக வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
- திருப்பூர் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி ஆதரவாளர் குற்றம்சாட்டியதால் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியேறினார் - ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை
- ஈவிகேஎஸ்.இளங்கோவன்-கார்த்தி சிதம்பரம் மோதல்: முற்றுகிறது வார்த்தை போர், வருத்தத்தில் மூத்த தலைவர்கள்
- பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி திட்டத்தில் நடக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
- பவானிசாகர் அணைக்கு அணக்கு நீர்வரத்து 8,427 கனஅடியில் இருந்து 6,873 கன அடியாக குறைவு
- அரசு போக்குவரத்து கழகங்களில் பொதுமேலாளர்கள் 5 பேர் பணியிட மாற்றம்
- சென்னை பூந்தமல்லி அருகே ரசாயனம் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி தீடீரென வெடித்துச் சிதறி தீப்பற்றியது
- 9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் - பஞ்சாப் ஆளுநர் பன்சாரி லால் புரோகித்தின் ராஜினாமா ஏற்பு
- மகாராஷ்ட்ரா ஆளுநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்
- டெல்லியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் புகுந்த வெள்ளம் - 3 மாணவர்கள் உயிரிழந்த சோகம்
- மாநில காவல்துறையில் அக்னிபாத் வீரர்களுக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு - ராஜஸ்தான், அருணாச்சலபிரதேச மாநில அரசுகள் அறிவிப்பு’
- எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு பாக். தீவிரவாதிகளுக்கு எதிரான என்கவுன்டரில் ராணுவ வீரர் பலி: கேப்டன் உட்பட 4 பேர் காயம்
- அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை முந்தும் கமலா ஹாரிஸ் - சாதகமாக மாறும் கருத்து கணிப்புகள்
- இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் - அமெரிக்காவில் இருந்து உடனடியாக நாடு திரும்புகிறார் நேதன்யாகு
- வெளிநாடுகளில் படித்து வருவோரில் 5 ஆண்டில் 633 இந்திய மாணவர்கள் பலி: அமெரிக்காவில் இருந்து 48 பேர் நாடு கடத்தல்
- பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிப்போட்டிக்கு தகுதி - ஆடவர் ஹாக்கி அணி முதல் போட்டியில் வெற்றி
- மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் ஃபைனல் - இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை
- இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -