Breaking News LIVE, July 17:வால்பாறையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - கோவை மாவட்ட ஆட்சியர்
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ் மற்றும் நுகு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 55,500 கன அடியாக அதிகரிப்பு இதன் காரணமாக வரும் நாட்களில் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து இன்னும் அதிகரிக்கக் கூடும்
மதுரை: தெற்கு மண்டல காவல்துறை தலைவராக (ஐ.ஜி) இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் பிரேம் ஆனந்த் சின்ஹா
இன்ஸ்டா மூலம் விவாகரத்தை அறிவித்த துபாய் இளவரசி ஷேகா மஹ்ரா
கன மழையின் காரணமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு நாளை (18-07-24) விடுமுறை - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு - காவல் ஆய்வாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!
மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ கைதுக்கு எதிராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மற்றும் ஜாமின் மனு மீதான உத்தரவை ஒத்தி வைத்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்
ஆவடி அருகே அயப்பாக்கம் சாலையில் அதிவேகமாக வந்த கார் மோதி எதிரே ஸ்கூட்டரில் சென்ற பெண் காவலர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் விபத்தை ஏற்படுத்திய கார் மற்றொரு கார் மற்றும் கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லோடு ஆட்டோ மீதும் மோதியது படுகாயமடைந்த பெண் காவலர் பவித்ரா போரூர் காவல் நிலையத்தில் பணியாற்றுகிறார். விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை
நில அபகரிப்பு தொடர்பான அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில், கைதான காவல் ஆய்வாளர் பிருத்விராஜுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி அவரை சேலம் மத்திய சிறையில் அடைக்க கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு..
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் காடம்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அப்பர் ஆழியாரிலிருந்து 2,500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது
நெல்லை: ஏர்வாடியில் இஸ்லாமியர்களில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னையால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உயர் நீதிமன்ற உத்தரவின்படி இன்று மொஹரம் சந்தனக்கூடு ஊர்வலம் நடக்க உள்ளது மாவட்ட எஸ்.பி. தலைமையில் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
காவிரியில் நீர் திறப்பு 40,000 கன அடியில் இருந்து 45651 கன அடியாக அதிகரித்துள்ளது கர்நாடக மாநிலம்
Breaking News LIVE, July 17:சென்னை புழல் அருகே,சூரப்பட்டு பகுதியில் ஆறு மாதமாக தலைமறைவாக ரவுடி சேதுபதியை துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளது காவல்துறை
பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடிக்கும் ’மெய்யழகன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!
பெரம்பலூர் அருகே கடந்த ஆண்டு, அரசு பள்ளி ஆசிரியையை கொடூரமாக அடித்து கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையிலுள்ள சக ஆசிரியர் வெங்கடேசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல்துறைக்கு பரிந்துரைத்து மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் உத்தரவு!
தஞ்சாவூர்: பூதலூர், வளம்பக்குடி அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அடுத்த 24 மணிநேரத்தில் சென்னையில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு
சேலம்: ஆடி மாதத்தின் முதல்நாளான இன்று அழிஞ்சி செடி குச்சியில் தேங்காயை சொருகி அதை தீயிலிட்டு உண்ணும் பண்டிகை கிராமபுறங்களில் விமர்சையாக கொண்டாட்டப்பட்டது புது மண தம்பதிகளுக்கு தலை ஆடி கொண்டாட்டம் நடைபெறும்போது அவர்களுக்கு புத்தாடை அணிவித்து, குடும்பத்தோடு இணைந்து தேங்காய் சுட்டு விநாயகருக்கு படைத்து உண்ணுவது இங்கு வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
டெல்லி சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசியுள்ளார். 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் ரவி நேற்று பிரதமரை சந்தித்த நிலையில் இன்று மத்திய கல்வி அமைச்சரை சந்தித்துள்ளார்.
தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக தமிழக் அரசு மாநில கல்விக்கொள்கை தயாரித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பாபநாசம் அருகேயுள்ள பசுக்கிடை விளை, அகஸ்தியர்புரம், விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக இரண்டு கரடிகள் ஜோடியாகவும் குட்டியுடனும் சுற்றி திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது இந்தநிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் விக்கிரமசிங்கபுரம் முதலியார்பட்டியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த பொழுது மெயின் ரோட்டில் ஒற்றை கரடி ஒன்று உலா வந்தது இதனை கண்டு அப்பகுதி மக்கள் மற்ற பயணிகள் அப்பகுதி வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களில் வருபவர்களை சத்தம் காட்டி அந்த சாலையில் கரடி நிற்கிறது பார்த்து வாருங்கள் என சத்தம் எழுப்பினர் மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிக நபர்கள் கூடியதால் கரடி அங்கிருந்து வனப்பகுதி நோக்கி ஓடிவிட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து கரடியை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றன
ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.7000-ஐ நெருங்கி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு புது உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கம் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.90 உயர்ந்து ரூ.6,920க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ.55,360 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ. 100.50 க்கு விற்பனை ஆகிறது.
கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு அங்காங்கே மண் சரிவும் ஏற்படுகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் மண் சரிவில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிழந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதனிடையே உத்தர கன்னட மாவட்ட அங்கோலா அருகே சிரூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவில் வீடு ஒன்றும், தேநீர் கடை ஒன்றும் சிக்கியதில் அதில் இருந்தவர்கள் மண்ணில் புதைந்தனர். சிறுமி உட்பட 5 பேரின் உடல்களை மீட்பு படையினர் இதுவரை மீட்டுள்ளனர். மேலும் 7 பேர் வரை மண்ணில் புதைந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் 22 ஆயிரம் கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல்லில் 2வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 20,910 கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரத்திற்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
Background
- தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
- தமிழ்நாட்டின் புதிய உள்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
- தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்
- மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒப்புதல் தர வேண்டும் – கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்
- நிலமோசடி வழக்கில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது
- சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைக்க ராமநாதபுரம் மக்களவை நிர்வாகிகள் வலியுறுத்தல்
- போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிடம் தொடர்புடையவர்களுடன் விசாரணை
- மதுரையில் நாம் தமிழர் நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கைது – சொத்து தகராறில் கொலை நடந்தது அம்பலம்
- முறைகேடு புகாரில் சிக்கிய ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரி பூஜாவின் பயிற்சி நிறுத்தி வைப்பு
- ஆடி மாதம் இன்று பிறந்ததை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் காலை முதலே அலைமோதி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -