Breaking News LIVE, JULY 16: மழை பெய்யுது; தமிழகம் கவலைப்பட தேவையில்லை: கர்நாடக துணை முதல்வர்
Breaking News LIVE, July 16, 2024: நாடு முழுவதும் நடைபெற உள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.
காவிரி நதிநீர் பிரச்னை குறித்து துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், "தண்ணீர் இருந்தால் கண்டிப்பாக திறந்து விடப் போகிறோம். 177 டிஎம்சி தண்ணீரையும் திறந்து விட வேண்டும். சாதாரண ஆண்டில் திறந்து விடுவோம். நாங்கள் தண்ணீரை தேக்க விரும்பவில்லை... நேற்றிலிருந்து மழை பெய்து வருகின்றன. எனவே நாங்களும் தமிழகமும் கவலைப்படத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.
Breaking News LIVE, JULY 16: மின்கட்டண உயர்வை கண்டித்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 23ல் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Breaking News LIVE, JULY 16: மக்களவைத் தேர்தலின்போது, பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி பணத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், சிபிசிஐடி விசாரணைக்கு பின்னர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் தண்ணீர் திறப்பானது 36, 579 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் 10 பேர் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். பொன்னை பாலு, அருள் உள்ளிட்ட பத்து பேரும் பலத்த போலீஸ் காவலுடன் சிறைக்கு அழைத்து வரப்பட்டனர்.
Breaking News LIVE, JULY 16: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, காலை 5,054 கன அடியாக இருந்த நிலையில், 16,577 கன அடியாக அதிகரித்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கு ஜூலை 18 வரை நீதிமன்ற காவல் அளித்து , சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
Breaking News LIVE, JULY 16: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் வங்கியின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
நில மோசடி வழக்கில் கேரள எல்லையில் இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு விசாரணை.
நில மோசடி வழக்கில் ஒரு மாதத்துக்கு மேல் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று காலை கேரள எல்லையில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். கேரளாவில் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கரூர், திண்ணப்பா நகர் பகுதியில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம்!
பொறுப்பு நீதிபதியாக இருந்த மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியானதால் புதிய பொறுப்பு நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமானம்
“தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிப்பதும் கர்நாடக அரசின் கடமை” -சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பின் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு!
மின்கட்ட உயர்வை கண்டித்து ஜூலை 19ஆம் தேதி சென்னையில் பாமக தொடர் முழக்க போராட்டம் - அன்புமணி
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நிதிபதியாக இருந்த ஆர். மகாதேவன், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜம்மு & காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி கோட்டீஸ்வரன் சிங்கும், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை பெற உச்ச நீதிமன்றத்தை நாடவும், கர்நாடகா அரசுக்குக் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம்! -காவிரி பிரச்னை தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிடோர் நடித்துள்ள ‘விடுதலை பாகம் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 11.30 மணிக்கு வெளியாகிறது
கூடுதலாக பொழிந்த பருவமழை
இந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கான தென்மேற்கு பருவமழை சராசரி அளவை விட கூடுதலாக கிடைத்துள்ளது. 120 நாட்களில் பெய்ய வேண்டிய பருவமழை முதல் 120 நாட்களிலேயே பெய்துள்ளது - ப்ரதீப் ஜான் தகவல்
மக்களவை தேர்தல் காலத்தில், நெல்லை ரயிலில் ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் முதல்முறையாக சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜராக உள்ளார்! ஏற்கனவே பாஜக நிர்வாகிகள் கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர் மற்றும் நயினார் நாகேந்திரனின் டிரைவர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்திய நிலையில் இன்று நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜர்!
காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்!
மத்திய மேற்கு, அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 19ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. கேரளாவில் இன்று ஓரிரு இடங்களில் 12 முதல் 20 செமீ வரை மிக கனமழக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
சென்னையில் 1 சவரன் ஆபரணத் தங்கம் ₹54,640க்கு விற்பனை! சென்னையில் 1 சவரன் ஆபரணத் தங்கம், ரூ.360-க்கு விலை உயர்ந்து ₹54,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாதக நிர்வாகி கொலை - மதுரை மாநகர காவல் ஆணையர் நேரடி விசாரணை
“படிப்பதற்கு பதில் பஞ்சர் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்” - விமர்சனத்திற்குள்ளான மத்தியபிரதேச எம்.எல்.ஏவின் பேச்சு!
கோவை: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோலையாறில் 14 செ.மீ. மழைப் பதிவு!
கோவை : கனமழை காரணமாக பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில், 23-24 இடையிலான கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு! சுமார் 3 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு - பயணிகள் தவிப்பு!
கோவை: வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் கனமழை காரணமாக மண் சரிந்து விழுந்ததில் 3 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது சாலையை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்
கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று! பெற்றோர்களும் பொதுமக்களுக்கும் குவிந்து இறந்த பிஞ்சு குழந்தைகளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2713 மில்லியன் கன அடியாக உள்ளது!
1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 136 மில்லியன் கன அடியாக உள்ளது!
500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 314 மில்லியன் கன அடியாக உள்ளது!
ரவுடிகளுக்கு எதிராக Drive Against Rowdy Elements (DARE) மூலம் சிறப்பு சோதனைகள் - சென்னை காவல்துறை அதிரடி. 77 குற்றவாளிகள் கைது
தருமபுரி: காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 19,000 கன அடியாக அதிகரிப்பு - பரிசல் இயக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு! காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மாலை தமிழக எல்லையை வந்தடைந்தது.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், தருமபுரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! -சென்னை வானிலை ஆய்வு அமையம் தகவல்
Background
- கர்நாடக அரசு காவிரி நீர் மறுத்த விவகாரம் - இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்
- தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை 4.46 சதவிகிதம் அளவிற்கு உயர்த்துவதாக தமிழக அரசு அறிவிப்பு - எதிர்க்கட்சிகள் கண்டனம்
- அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
- ரவுடிகளை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை - அமைச்சர் ரகுபதி
- குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதள மேடை அமைக்க இஸ்ரோ சார்பில் டெண்டர் கோரப்பட்டது
- சென்னையில் பரபரப்பு சம்பவம் - ஆச வார்த்தை கூறி 15 வயது சிறுவனை காதல் வலையில் வீழ்த்திய 30 வயது பெண் கைது
- மயிலாடுதுறையில் 16 வயது சிறுமியை அத்துமீறி நடந்துகொண்ட காவலர் போக்சோ வழக்கில் கைது
- இந்தியாவில் வணிக பொருட்கள் ஏற்றுமதி 2.56 சதவிகிதம் உயர்வு
- நாடாளுமன்றத்தில் புகுந்து புகைக்குண்டு வீசிய வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
- கர்நாடக துணைமுதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு
- யூடியூபர் டிடிஎஃப் வாசனின் திருப்பதி கோயில் பிராங்க் வீடியோ - வழக்குப்பதிவு செய்து ஆந்திரா போலீசார்
- போதைப்பொருள் வைத்திருந்ததாகவும், பயன்படுத்தியதாகவும் நடிகை ரகுல் பிரீத்திசிங்கின் தம்பி கைது
- அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக ஜேம்ஸ் டெவிட் வென்சியை தேர்வு செய்தார் டொனால்ட் டிரம்ப்
- இம்ரான்கானின் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு
- பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் - சி பிரிவில் சாத்விக் சிராக்
- கபடி, டென்னிஸ் விளையாட வர முடியும் என்றால் கிரிக்கெட் விளையாடவும் பாகிஸ்தான் வரலாம் - முன்னாள் வீரர் சல்மான் பட்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -