Breaking News LIVE, JULY 15:தமிழ்நாட்டில் படிப்படியாக எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்
Breaking News LIVE, July 15, 2024: நாடு முழுவதும் நடைபெற உள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 44, 228 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3,789 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.
டி20 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு தனது சொந்த ஊரான குஜராத்தின் வதோதராவுக்கு திரும்பிய இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள்..
தமிழ்நாட்டில் படிப்படியாக எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டதற்கு விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்பு!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ சரியாக விசாரிக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி. தொழிலதிபர் ஒருவரின் விருப்பப்படியே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் காட்டம்.
"ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்த தானம் செய்ய உள்ளேன்" என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியின் பெயரில், இன்று ரத்த தானம் செய்தார் நடிகர் சூர்யா.
“குறிப்பிட்ட சமுதாயம் இந்தியாவை யார் ஆள வேண்டும் என யோசித்து, மோடிக்கு வாக்களித்தனர். மற்றொருபக்கம் சிறுபான்மையினர் ராகுல் காந்திக்கு வாக்களித்தனர். இதில், அதிமுகவினர் நாங்கள் அடிபட்டுவிட்டோம்” - செல்லூர் ராஜூ
ராஜஸ்தான்: ரயில் பாலத்தில் நின்று ட்ரோன் மூலமாக ஃபோட்டோஷூட் செய்தபோது நடந்த சோகம். திடீரென அந்த தடத்தில் ரயில் வந்ததால், செய்வதறியாது 90 அடி பள்ளத்தில் குதித்த புதுமண தம்பதி.. படுகாயங்களுடன் இருவரும் மருத்துவமனையில் அனுமதி
"தினமும் 2 ரவுடிகளை, காவல்துறையினர் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும் -காவல் ஆணையர் அருண்
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற அர்ஜெண்டினா - தலைநகரில் விடிய விடிய கொண்டாடிய மக்கள்
கர்நாடகா அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளிக்க முடியாது என கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நாளை அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி, காவிரி நீரைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில், மேல்முறையீடு செய்து தகுதி பெற்ற 1.48 லட்சம் பயனாளிகளுக்கு ₹1000 வரவு வைக்கப்பட்டது!
சென்னையில் திங்கள்கிழமை (15.07.2024) 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமின் விலை ரூ. 5,558. இதேபோல் 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து ரூ. 5558-க்கும், சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.44,464க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.99.70க்கும் ஒரு கிலோ 99,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Tamannah On Reels and Social Media : சமூகவலைதள ரீல்ஸ் குறித்து மனம் திறந்த நடிகை தமன்னா!
“ஒரு காலகட்டத்தில் தியேட்டர்களில் மட்டுமே படம் பார்த்தனர். ஆனால் இப்போது ஓடிடியிலும் படங்கள் வருகின்றன. சோஷியல் மீடியாக்களில் ரீல்ஸ் பார்க்கும் ரசிகர்களை ஈர்ப்பது நடிகை, நடிகர்களுக்கு சவாலான காரியமாக உள்ளது” - தமன்னா
மக்களவை தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கு. பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.
இவ்வழக்கில் அவர் விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனுக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருந்தது
காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூற எந்த தகுதியும் இல்லை என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சாடினார்.
காமராஜர் ஆட்சிக்கு நிகரான ஆட்சியை பிரதமர் மோடி வழங்கி வருவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் காமராஜர் 122வது பிறந்த நாளையொட்டி, சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை காமராஜர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், காமராஜர் ஒரு அரசியல் இலக்கணம்.
இந்தியாவின் கிங் மேக்கர் என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் கொடுத்த தலைவர் அவர்.
காமராஜர் ஆட்சிகாலத்தில் ஒன்பது அணைகள் கட்டப்பட்டதாகவும், செயல்படாமல் இருந்த ஆராயிரம் பள்ளிகள் உள்பட 9 ஆண்டுகளில் 18 ஆயிரம் பள்ளிகள் திறக்கப்பட்டதையும் நினைவு கூற வேண்டியது அவசியம் என்றும் அண்ணாமலை கூறினார்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது நடைபெற்றது குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் தமிழ்நாடு முழுக்க எத்தனைக் குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என்பதை #CMDashBoard வழியாகக் கண்காணித்து, மாணவச் செல்வங்களின் பசிப் போக்கிய மனநிறைவு அடைந்தேன்!
காவிரியில் வினாடிக்கு 8000 கன அடி தண்ணீர் திறப்பதை தமிழ்நாடு ஏற்கக் கூடாது: கூடுதல் நீர் கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும்!
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
தமிழ்நாட்டில் அனைத்திலும், அனைவராலும் முன்னுதாரணமாகக் கொள்ளப்படும் ஒற்றைத் தலைவர் கர்மவீரர் காமராசர் தான். அந்தப் பெருந்தலைவருக்கு இன்று 122-ஆம் பிறந்தநாள். கல்வி, விவசாயம், பாசனத் திட்டங்கள், தொழில்துறை என அனைத்திலும் தமிழகம் வளர அடித்தளம் அமைத்தவர் அந்த கர்மவீரர் தான். வளர்ச்சி அரசியலின் பிதாமகனும் அவர் தான்.
ஆனால், காமராசருக்குப் பிறகு வந்தவர்கள் அவர் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தின் மீது கட்டிடம் கட்டி எழுப்புவதற்கு பதிலாக, அடித்தளத்தை சிதைக்கும் முயற்சியில் தான் ஈடுபடுகின்றனர். குறிப்பாக காமராசர் காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 5 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட பாசனத் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பாசனப் பரப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பாசனப் பரப்பு குறைந்து வருகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். உலகில் உழவில் சிறந்த நாடு என்றால் அது தமிழ்நாடு தான் என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக காவிரி - கோதாவரி இணைப்பு உள்ளிட்ட பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு இந்த நாளில் உறுதி ஏற்றுக் கொள்வோம்.
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின், இறுதி போட்டியில் அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது
மகனுக்கு பவன் என பெயர் சூட்டினர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதி.
"அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, குழந்தைகள் பள்ளிக்குப் பசியுடன் வரக் கூடாது.." - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 4047 கன அடியாக சற்று அதிகரிப்பு.
கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வரும் நாட்களில் மேட்டூரை வந்தடையும் என எதிர்பார்ப்பு
விருத்தாச்சலம் அருகே பரவலூர் - கோமங்கலம் இடையே லாரி மோதியதில் பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் உயிரிழப்பு.
விபத்தை வேடிக்கை பார்க்க குவிந்த கூட்டத்தின் மீது கார் மோதியதில் 17 பேர் காயம்
மிதமான மழை.. குளுகுளு சூழல்.. ஆனால் குளிக்க தடையால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் அதிக தண்ணீர் வரத்தால் பாதுகாப்பு கருதி குளிக்க தடை
நீலகிரி மலைப்பகுதிகளில் பெய்துவரும் மழையால், பவானி சாகர் அணைக்கு வரும் நீர் வரத்து விநாடிக்கு 3623 கன அடியாக அதிகரித்துள்ளது நீர் வரத்து அதிகரிப்பால் அணையின் நீர் மட்டமும் 70 அடியை எட்டியுள்ளது
சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2730 மில்லியன் கன அடியாக உள்ளது
1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 136 மில்லியன் கன அடியாக உள்ளது
500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 313 மில்லியன் கன அடியாக உள்ளது!
ஐரோப்பிய கால்பந்து கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் கோப்பையை வென்றது ஸ்பெயின். ஸ்பெயினின் நிகோ வில்லியம்ஸ், மைகேல் யார்ஸபால் இருவரும் தலா 1 கோல் அடித்தனர் இங்கிலாந்தின் கோலே பால்மர் ஒரு கோல் அடித்துள்ளார்
Background
- அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் - இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
- நீட் தேர்விற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, ராகுல் காந்தி கடிதம்
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் சுட்டுக்கொலை - தப்பிச் செல்ல முயன்றதால் போலீசார் அதிரடி
- தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தினமும் 8000 கன அடி தண்ணீர் திறக்க முடிவு
- 122வது பிறந்த நாள் - காமராஜர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று மரியாதை
- மாட்டு வியாபாரி மகன் முதல் போலீஸ் அதிகாரி வரை - 5 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது
- 10ம் வகுப்பு மாணவியை கடத்திய 17 வயது சிறுவன் - இன்ஸ்டாகிராம் பழக்கத்தில் விபரீதம்
- கார்ப்ரேட் நிறுவனங்களை விட தனிநபரிடம் அதிகளவு வருமான வரி வசூல் - காங்கிரஸ் குற்றச்சாட்டு
- எக்ஸ் சமூக ஊடகத்தில் உலக தலைவர்களில் அதிக ஃபாலோவர்கள் - பிரதமர் மோடி சாதனை
- காஷ்மீருக்குள் உடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி
- இடுக்கியில் ஜீப்களில் சாகச பயணம் - மலை உச்சியில் சிக்கி தவித்த 40 சுற்றுலா பயணிகள் மீட்பு
- அமெரிக்க தேர்தல் கருத்தையே மாற்றப்போகும் சம்பவம் - டிரம்ப் மீதான தாக்குதல் தொடர்பாக வல்லுநர்கள் கருத்து
- இஸ்ரேல் தாக்குதலில் 141 பேர் உயிரிழப்பு - 400 பேர் காயம்
- நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி. சர்மா ஒலி தேர்வு
- விம்பிள்டன் டென்னிஸ் - ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த அல்காரஸ்
- யூரோ கால்பந்து போட்டி - இங்கிலாந்து அணியை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின்
- டி.என்.பி.எல்: திண்டுக்கல் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -