Breaking News LIVE, JULY 14: வேலூர்: காட்பாடியில் லாரி மோதி தம்பதி உயிரிழப்பு - மகளை பார்க்க சென்ற இடைத்தில் சோகம்

Breaking News LIVE, July 14, 2024: நாடு முழுவதும் நடைபெற உள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 14 Jul 2024 09:41 PM
விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த கார்லோஸ் அல்கராஸ்!

விம்பிள்டன் டென்னிஸ் இறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளார் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கார்லோஸ் அல்கராஸ். 6-2, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் அவர் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

வேலூர்: காட்பாடியில் லாரி மோதி தம்பதி உயிரிழப்பு - மகளை பார்க்க சென்ற இடைத்தில் சோகம்

 


வேலூர் மாவட்டம் காட்பாடியில் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கணவர், மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். செவிலியர் கல்லூரியில் படிக்கும் மகளை பார்க்க செல்லும் வழியில் நடந்த விபத்தில் தந்தை தாய் உயிரிழந்தது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Breaking News LIVE, JULY 14: பொறுமையாக ஆடி வரும் ஜிம்பாப்வே அணி!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்துள்ளது. இரண்டாவதாக பேட்டிங் செய்து வரும் ஜிம்பாப்வே அணி, 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 70 ரன்களை எடுத்து ஆடி வருகிறது.

Breaking News LIVE: தமிழ்நாட்டில் குறையும் வெயிலின் உக்கிரம் - நிலவரம் என்ன?

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் உக்கிரம் அதிகரித்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. 


தமிழ்நாட்டில் அதிகபட்சமாக இன்று மதுரை விமான நிலையத்தில் 98 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. 

Breaking News LIVE: தமிழகத்திற்கு 8000 கன அடி நீர் திறக்க கர்நாடக முடிவு 

கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பின் முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழகத்திற்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடகா முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். 


காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைப்படி விநாடிக்கு 11,500 கன அடி நீர் திறக்க கர்நாடகா மறுப்பு தெரிவித்துள்ளது. தினமும் ஒரு டிம்.எம்.சி தண்ணீர் திறந்துவிட முடியாது எனவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 


கபினியில் 20 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில் 8,000 கன அடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: காவிரி நீர்: அனைத்துக்கட்சி கூட்டம் - கர்நாடக முதல்வர் சித்தராமையா பங்கேற்பு

கர்நாடகா: காவிரி நீர் முறைப்படுத்தும் குழு தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்று வருகிறது.


முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார், பாஜக தலைவர் சிடி ரவி உள்ளிட்ட தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.





 நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கிய விக்கிரவாண்டி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாடு மக்கள் திமுக மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதையே இடைத்தேர்தல் வெற்றி காட்டுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “3 ஆண்டு கால நல்லாட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்தான் இந்த மகத்தான வெற்றி. இந்த வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி வாக்காளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. திமுக தலைவர் என்ற முறையிலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையிலும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மக்கள் மீது நாமும் நம் மீது மக்களும் நம்பிக்கை வைத்திருப்பதால் இந்த வெற்றி எதிர்பார்த்ததுதான். இடைத்தேர்தல் களத்தில் போட்டியிடாமல் அதிமுக ஒதுங்கி நின்று தனது கள்ளக்கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. 


திமுக வெளிப்படையான ஜனநாயக நெறிமுறைப்படி களம் கண்டது. திட்டங்களின் பயன்கள் எல்லாருக்கும் கிடைப்பதை உறுதி செய்து பாகுபாடின்றி அதனை செயல்படுத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார். 

பொதுமருத்துவ கல்வியை கட்டமைப்பதில் தமிழ்நாடு முன்னோடி - ராகுல்காந்தி

பொது மருத்துவ கல்வியை கட்டமைப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது என்று ராகுல்காந்தி பாராட்டியுள்ளார்.

Breaking News LIVE: நீட் எதிர்ப்பு! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி நன்றி! 

 


தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி என எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் பேசுகையில், “விரைவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. தமிழ்நாட்டுக்கு விலக்கு கோருவது பற்றி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசதியான சிலருக்கு மட்டும் வாய்ப்பு கிடைப்பதை தடுக்கும் கூட்டுக் கடமை நமக்கு உள்ளது. 


பொது மருத்துவக் கல்வி முறையை கட்டமைப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது. இதன் விளைவாக வலுவான பொது சுகாதார அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது.  பொது சுகாதார கட்டமைப்பை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் கட்டாயம் கண்டிக்கப்பட வேண்டும். நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசு, என்.டி.ஏவின் பெருந்தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களை சந்தித்தேன். 


24 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும்” என ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். 

46 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட பூரி ஜெகன்னாதர் கோயிலின் ரத்ன பந்தர் அறை

பூரி ஜெகன்னாதர் கோயிலின் ரத்ன பந்தர் அறை 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. 

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கூடுதல் சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கூடுதல் சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து தாக்கும் காட்சி மற்றும் அவரைக் கொல்ல நோட்டமிட்ட சிசிடிவி காட்சிகளில் கைதானவர்கள் இடம்பெற்றுள்ளனர் இதில் தொடர்புடைய திருவேங்கடம் இன்று காலை புழல் அருகே என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்

ஆம்ஸ்ட்ராங்க் கொலையில் கைதான ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை - போலீசார் கூறிய பரபரப்பு தகவல்கள்

கொலையாளிகளில் ஒருவரான திருவேங்கடத்தை, விசாரணைக்காக போலீசார் இன்று காலை புழல் நோக்கி அழைத்துச் சென்றுள்ளனர்


மாதவரம் ஆட்டுத்தொட்டி அருகே செல்லும் போது திருவேங்கடம் தப்பி ஓடியுள்ளார்


கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அவரை தேடும்போது, புழல் வெஜிடேரியன் நகரில் உள்ள தகர கொட்டாயில் திருவேங்கடம் பதுங்கி இருந்துள்ளார்


போலீசார் சுற்றி வளைக்கும்போது, ஏற்கனவே அங்கு பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து திருவேங்கடம் சுட்டுள்ளார்


இதனை அடுத்து காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், வயிறு மற்றும் மார்பில் குண்டு பாய்ந்துள்ளது


மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்


 திருவேங்கடம் பதுங்கியிருந்த தகர கொட்டாயில்தான் ஆம்ஸ்ட்ராங் கொலைச் சதி திட்டமிடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தகவல்

யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. - ஈ.பி.எஸ்

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்களுள் திருவேங்கடம் என்ற ரவுடி காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது? கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டு தான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா? யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாரும் அவரது கட்சியினரும் சந்தேகிக்கும் நிலையில், காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் அச்சந்தேகத்தை மேலும் வலுப்பெற செய்கிறது. இந்த வழக்கு தொடர்பாக திருவேங்கடம் அளித்த வாக்குமூலம் முழுவதுமாக சீலிடப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்! இவ்வழக்கின் விசாரணை மீது நம்பிக்கை இழந்து கொண்டே போவதால், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தார் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கோரிக்கைக்கிணங்க இதனை CBI-க்கு மாற்றவேண்டும்.

அன்னியூர் சிவா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வென்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

காவிரியில் இருந்து வினாடிக்கு 21 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது - இபிஎஸ்

காவிரியில் இருந்து வினாடிக்கு 21 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து, நீர் வெளியேற்றம் 21,000 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து காவிரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு நேற்று விநாடிக்கு 6000 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நீர் வெளியேற்றம் 21,000 கன அடியாக அதிகரிப்பு. வரும் நாட்களில் இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடையும்

ட்ரம்ப் மீதான கொலை முயற்சி கவலையளிக்கிறது.. குணமடைய விழைகிறேன் - ராகுல் காந்தி

ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு

அரசியலிலும், ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை.. ட்ரம்ப் குணமடைய விழைகிறேன் - பிரதமர் மோடி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை காவலில் எடுக்கப்பட்ட இவரை விசாரணைக்காக அழைத்துச் செல்லும் போது தப்பிக்க முயன்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தகவல் என்கவுண்டர் நடந்த இடத்தில் சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர் (வடக்கு) நரேந்திரன் நாயர் விசாரணை

சென்னை மாதவரத்தில் ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

சென்னை மாதவரத்தில் ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக தகவல்


ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் தொடர்புடையவர் தப்பிக்க முயன்ற போது போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல்

WCOL தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!

IND Vs Pak Legends Champions:  லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்திய அணி பட்டம் வென்று அசத்தியுள்ளது. முன்னாள் வீரர்களுக்கான இந்த போட்டி இங்கிலாந்து நடைபெற்றது.  இறுதிப்போடிட்யில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 19.1 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Background


  • விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி - டெபாசிட்டை இழந்த நாம் தமிழர் கட்சி

  • விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நேர்மையாக நடந்திருந்தால் திமுக டெபாசிட் இழந்து இருக்கும் - பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு

  • மதுவிலக்குத் திருத்த மசோதா அமலுக்கு வந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு - கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம்

  • பத்திரப்பதிவு மூலம் தமிழ்நாடு அரசுக்கு ஒரே நாளில் ரூ.224 கோடி வருவாய் - முன்னெப்போதும் இல்லாத வருவாய் என தகவல்

  • ஊடகங்கள் அரசின் கொள்கைகளை நாட்டின் பேசுபொருளாக்கியுள்ளன - பிரதமர் மோடி பேச்சு

  • நாட்டின் 7 மாநிலங்களில் நடந்த 13 சட்டமன்ற இடைத்தேர்தல் - 10 இடங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி - பாஜக 2 இடங்களில் மட்டுமே வெற்றி

  • அசாம் மாநில வெள்ள பாதிப்பில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்வு - நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ள 2.95 லட்சம் பேர்

  • ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்தத்தில் திருத்தம் - துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்

  • அமெரிக்காவில் தேர்தல் பரப்புரையின் போது முன்னாள் அதிபர் டிரம்பின் மீது துப்பாக்கிச்சூடு - காதில் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்

  • டிரம் மீதான தாக்குதலுக்கு அதிபர் பைடன், முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் கண்டனம் - தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்

  • ஹமாஸ் ஆயுதக்குழு தளபதியை குறிவைத்து இஸ்ரேல் தகவல் - 90 பேர் உயிரிழப்பு

  • லக்னோவில் விருந்தில் அசைவ உணவு இல்லாததால் அடிதடி - திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தினர்

  •  ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடர் - 3-1 என கைப்பற்றியது இளம் இந்திய அணி

  • ஐரோப்பா கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி - இறுதிப்போட்டியில்  ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

  • டி.என்.பி.எல்: நெல்லை அணியை வீழ்த்தி கோவை வெற்றி

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.