Breaking News LIVE, JULY 12: விவசாயியிடம் டம்ளரில் லஞ்சம் : கூட்டுறவுச் சங்க செயலாளர் கைது!
Breaking News LIVE, July 12, 2024: நாடு முழுவதும் நடைபெற உள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.
விவசாயியிடம் டம்ளரில் லஞ்சம் பெற்ற கூட்டுறவுச் சங்க செயலாளர் கைது!
சென்னை அம்பத்தூரில் கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயியிடம், ரூ.40,000 லஞ்சம் பெற்ற கூட்டுறவுச் சங்க செயலாளர் ஆறுமுகத்தைக் கைது செய்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
Breaking News LIVE, JULY 12: தமிழ்நாடு மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்க சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கரூர், திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!
நேபாளம் நிலச்சரிவு - 7 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததாகத் தகவல்
புதுச்சேரி: 'இந்தியன் 2' திரைப்பட ரிலீஸை கொண்டாடும் வகையில் திரையரங்கிற்கு வெளியே 5 கிலோ எடை கொண்ட கற்பூரத்தை கொளுத்திய கமல் ரசிகர்கள்..! கொழுந்துவிட்டு எரிந்த தீ அருகில் இருந்த பேனரில் பற்றும் நிலை ஏற்பட்டதால், கற்பூரம் வைக்கப்பட்டிருந்த இரும்பு ஸ்டாண்டை கீழே தள்ளி தீயை அணைத்த போலீசார்
கலைஞர் கருணாநிதி குறித்த சீமானின் பேச்சுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்! சாதி மதத்தின் பெயரால் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கைச் சீர்குலைக்க முயற்சி செய்கிறார் சீமான் என அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார்
Breaking News LIVE, JULY 12: ஆம்ஸ்ட்ராங் கொலை - கடும் நடவடிக்கை தேவை. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடன் சில கருத்துக்களைத் தெரிவித்தேன். தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கைக் குலைக்க சில கட்சிகள் முயற்சி செய்கின்றன. அதில் பாஜகவும் ஒரு கட்சியாக செயல்படுகிறது - திருமாவளவன்
புல்டோசரில் ஊர்வலம் சென்ற மணமக்கள்!
உத்தர பிரதேசம் : கோரக்பூரில் திருமணம் முடிந்த கையோடு புல்டோசரில் ஊர்வலம் சென்ற மணமக்கள். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
"ஐபிஎல் போட்டிகள் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் வீரர்கள் பணக்காரர்கள் ஆனது தவிர வேறு எந்த பயனும் இங்கிலாந்துக்கு ஏற்படவில்லை" - இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெஃப்ரி பாய்காட் விமர்சனம்
சட்டப்படிப்பில் இருந்து மனுஸ்மிருதி நீக்கப்படும் என டெல்லி சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் சிங் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பழைய பனியன் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் ₹1 கோடி மதிப்பிலான பனியன் ரோல்கள் எரிந்து சேதம்!
எரிந்து சேதமடைந்த பனியன் துணிகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. குடோனுக்கு அருகே இயங்கி வந்த நூல் தயாரிக்கும் ஆலையில் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததே தீ விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது!
“பூமிக்குப் பாதுகாப்பாக திரும்புவோம்” - விண்வெளியில் இருந்து நம்பிக்கை தெரிவித்த சுனிதா வில்லியம்ஸ், வில்மோர்
சென்னை: பானிபூரி, தெருவோர கடைகளுக்கு மருத்துவ சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அறிவிப்பு!
சென்னை திருவான்மியூரில் உள்ள அருள்மிகு பாம்பன் குமரகுருதாசர் கோயில் கும்பாபிஷேகம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது! இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு!
கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 302 மில்லியன் கனஅடியாக உள்ளது.
சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 130 மில்லியன் கனஅடியாக உள்ளது.
புழல் ஏரிக்கு நீர்வரத்து 193 கனஅடியாக சரிவு. நீர்இருப்பு 2709 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றம்.
இந்திய உச்ச நீதிமன்ற கொலீஜியம், மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பரிந்துரைத்தது.
Background
- தமிழ்நாட்டில் தொடர் தோல்வி கண்ட பிறகும் ஒன்றிய அரசு பாடம் கற்கவில்லை - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
- மத்திய அரசின் பட்ஜெட் - பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
- சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள மகாதேவனை, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜீயம் பரிந்துரை
- அண்ணா பல்கலக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட் உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
- அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் விடுவிப்பு
- வளர்ப்பு மகன், மருமகன் கூட்டு பலாத்காரம் - ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் இரண்டாவது மனைவி பகீர் குற்றச்சாட்டு
- காவிரியில் இருந்து 20 டி.எம்.சி., நீர் திறக்க வேண்டும் - காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
- நீட் முறைகேடு தொடர்பான வழக்கு - 18ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
- பீகாரில் மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழப்பு - 18 மாணவர்கள் படுகாயம்
- மத்தியபிரதேசத்தில் காதலியுடன் பேசிய ஆத்திரத்தில் நண்பனை குத்தி கொன்ற சிறுவன்
- குஜராத்தில் 10 காலி பணியிடங்களுக்கு ஆயிரம் பேர் போட்டி - தள்ளு,முள்ளு ஏற்பட்டு சிலர் காயம்
- ஜெய்பூரில் விமான நிலையத்தில் அத்துமீறி பேசிய காவலர் - கன்னத்தில் அறைந்த ஸ்பைஸ்ஜெட் பெண் ஊழியர்
- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்குமா? - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது
- சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் செல்ல இந்திய அணிக்கு விருப்பமில்லை என தகவல்
- பாகிஸ்தானில் கிடைக்கும் வரவேற்பை பார்த்தால் இந்திய வீரர்கள் தங்கள் நாட்டையே மறந்துவிடுவார்கள் - ஷாகித் அஃப்ரிடி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -