Breaking News LIVE: பிகார் முன்னாள் முதலமைச்சர் கர்புரி தாக்கூருக்கு பாரத ரத்னா
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
பிகார் முன்னாள் முதலமைச்சர் கர்புரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தங்கம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த விஷ்னு 13.77 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்றுள்ளார். மகாராஷ்டிரா மற்றும் கேரளா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன.
அயோத்தி ராமர் கோயில் திறப்பை நான் ஆன்மீகமாகவே பார்க்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
தைப்பூசம் மற்றும் குடியரசு தினம் வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறையால் தமிழ்நாடு முழுவதும் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய மண்டலங்கள் மற்றும் பெங்களூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 580 சிறப்பு பேருந்துள் இயக்கப்படவுள்ளது. மேலும் திருவண்ணாமலை கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்கிருந்து சென்னைக்கு 10 குளிர்சாதனப் பேருந்து இயக்கவுள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,053.10 அல்லது 1.47 % புள்ளிகள் சரிந்து 70,370.55 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 333 அல்லது 1.54% சரிந்து 21,238.80 ஆக வர்த்தகமாகியது.
ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் குடியிருப்பு வளாகத்தில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுப்பட்ட சுரேஷ் என்ற தொழிலாளர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளார்.
GIM2024 முடிந்தும் தொடரும் முதலீடுகள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ நம் கைகளில் எப்போதும் இருக்கும் செல்போன்களைப் பாதுகாக்கும் Gorilla Glass-களை உற்பத்தி செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த Corning International Corporation மற்றும் இந்தியாவைச் சேர்ந்த Optiemus Infracom Limited ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான Bharat Innovative Glass Technologies Private Limited – BIG TECH மற்றும் இடையே காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட்- பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில், 1003 கோடி ரூபாய் முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இலக்கை நோக்கி விரைவோம்! இளைஞர்கள் துணையோடு உயர்வோம்!” என தெரிவித்துள்ளார்.
கேலோ இந்தியாவில் தமிழகத்திற்கு 7வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஸ்குவாஷ் விளையாட்டில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கத்தை தட்டிப்பறித்தார்.
அயோத்தியில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலரும் காயம் அடைந்துள்ளனர். சில இடங்களில் பக்தர்கள் மயக்கம் அடைந்துள்ளனர்.
நடிகர் சங்க முன்னாள் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மரணம் திரைத்துறை, அரசியல் தளம் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இவரது உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது. மறைந்த விஜயகாந்தின் உடல் அவரது கட்சி அலுவலகத்தில் புதைக்கப்பட்டது. இந்நிலையில், தேமுதிக தரப்பில் இன்று அதாவது ஜனவரி 23ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், வரும் 24ஆம் தேதி அதாவது நாளை விஜயகாந்த்தின் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தேமுதிக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், புரட்சிக்கலைஞர் கேப்டன் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24.01.2024 புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள்,உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் சிறப்பு பணியில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. இந்த ஊக்கத்தொகை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மதுரை மேலூரில் நடைபெற்ற விபத்தில் கார் சாலையோரம் இருந்த பாறையில் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உ உயிரிழந்தனர்.
பெண்ணையாறு நீர் பகிர்வு பிரச்னையைத் தீர்க்க, மத்திய ஜல்சக்தி அமைச்சகம் இரண்டு வாரத்தில் புதிய குழு அமைக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்திரையில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்ற சம்பவம் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரி 29ஆம் தேதி திமுக மாணவரணி மாவட்ட, மாநில, துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் தலைமையில் கோவையில் கூட்டம் நடைபெற உள்ளது.
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை முன்னிறுத்தி மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் மாவட்ட அமைப்பாளர் தேவராஜ் தலைமையில் நடைபெற்றது.
”திமுக தேர்தல் அறிக்கைக் குழு மாநிலம் முழுவதும் பயணித்து பல்வேறு தரப்பினரைச் சந்தித்து, அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து அவற்றின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக யார் யார் மாநிலத்தின் எந்த பகுதிக்கு, எப்போது பயணிக்கலாம் என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக” திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவரான கனிமொழி தெரிவித்துள்ளார்.
”திமுக தேர்தல் அறிக்கைக் குழு மாநிலம் முழுவதும் பயணித்து பல்வேறு தரப்பினரைச் சந்தித்து, அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து அவற்றின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக யார் யார் மாநிலத்தின் எந்த பகுதிக்கு, எப்போது பயணிக்கலாம் என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக” திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவரான கனிமொழி தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களின் இரு படகுகளையும் சிங்களப் படையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர். தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களப் படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி தலைமையில் தி.மு.க தேர்தல் அறிக்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
மாநில மகளிர் கொள்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் அமைச்சர் பொன்முடி அளவிற்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு 28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட செம்மண் குவாரி வழக்கில் தன்னை ஒரு வாதியாக சேர்க்கும்படி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா தள்ளு படி செய்து உத்தரவிட்டுள்ளார்.
25,26 ஆகிய தேதிகளில் திருச்சி மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகை தர உள்ளார். பாதுகாப்பு நலனை கருதி ஆகிய இரண்டு நாட்களுக்கு திருச்சி மாவட்டத்தில் ட்ரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடையை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களை ஒருங்கிணைக்கவே இந்த யாத்திரை என்றும், பாஜகவின் யாத்திரை வரும் மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்தநாளில் அவருக்கு எங்கள் மனமார்ந்த அஞ்சலிகள். காந்தி, நேரு, ஆசாத், சுபாஸ் மற்றும் ஜான்சி ராணி ஆகிய படைப்பிரிவுகளுடன் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டிருந்தது. பன்மைத்துவம், சமூக மற்றும் பொருளாதார நீதி, சகிப்புத்தன்மை மற்றும் பாலின உள்ளடக்கம் ஆகியவற்றின் இந்திய மதிப்புகளுக்கு அவர் ஒரு முன்னணி எடுத்துக்காட்டு. ஜெய் ஹிந்த்!” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, அவர் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், இன்று அல்லது நாளை வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயங்க வேண்டும். அரசு பேருந்துகள் அங்கிருந்து இயங்கும்போது ஆம்னி பேருந்துகள் வேறு இடத்தில் இயங்கினால் போட்டி ஏற்படும் சூழல் நிலவும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளின் நீர் இருப்பு 86.74 % ஆக உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சியில் 10.198 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. அதன்படி செம்பரம்பாக்கம் - 84.22%, புழல் - 84.24%, பூண்டி - 94.86%, சோழவரம் - 72.8%, கண்ணக்கோட்டை ஏரி - 99.2% நீர் இருப்பு உள்ளது.
Background
Tamil Nadu Cabinet Meeting: தமிழ்நாடு அரசின் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்:
தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தபடி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் காலை 11 மணியளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் எனவும், அதைதொடர்ந்து அரசு சார்பில் முக்கிய முடிவுக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?
கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் மேற்கொள்ளப்பட பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த முதலீடுகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி, வரும் 28ம் தேதி முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தொடங்க உள்ள சூழலில், இன்றைய அம்மைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் தமிழ்நாட்டில் இல்லாத சூழலில் சட்ட-ஒழுங்கை பாதுகாப்பது, பிரச்னைகளை கையாள்வது போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. அதோடு, மக்கள் நலதிட்டங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும்போது சில தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு சார்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அந்த நிறுவனங்கள் குறித்தும், அவர்களுக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க அனுமதி அளிப்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர்:
ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் ஜனவரி மாதம் தமிழக சட்டப்பேரவை கூட்டம், ஆளுநர் உரையுடன் தொடங்கும். ஆனால் நடப்பாண்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, பிரதமர் மோடி தமிழகம் வருகை மற்றும் முதலமைச்சரின் வெளிநாடு பயணம் ஆகிய காரணங்களால் சட்டப்பேரவை கூடுவது தாமதமாகி வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் மற்றும் ஆளுநர் உரை குறித்து முக்கிய விவாதம் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம்:
வரும் 28ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்கிறார். அந்த பயணத்தை முடித்துக் கொண்டு பிப்ரவரி முதல் வாரம் தான் அவர் சென்னை திரும்புகிறார். இந்த பயணத்தின் போது அவர் மருத்துவ சிகிச்சை பெற உள்ளதாகவும், சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், முதலமைச்சர் ஸ்டாலின் வருகைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற பிப்ரவரி மாதம் 2வது வாரம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -