Breaking News LIVE: தடைகளுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் - பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
ராமர் கோயில் சிறப்பு பூஜைகளுக்கு தமிழ்நாடு அரசு விதிக்கும் தடைகளுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம். கோயில்களில் நடக்கும் சிறப்பு பூஜைகளை யார் தடுக்கிறார்கள் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
பொய் செய்தி பரப்புவதாக அமைச்சர் சேகர்பாபு சொன்ன கருத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
ஆப்கானில் இந்திய விமானம் விபத்துக்குள்ளானதாக வெளியான தகவலுக்கு இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் அல்ல, மொராக்கோ நாட்டை சேர்ந்த விமானம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கேலோ இந்தியா போட்டியில் மேலும் ஒரு தங்க பதக்கத்தை வென்றது தமிழ்நாடு அணி.
ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட traditional யோகா பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை நவியா வெற்றி.
தமிழ்நாடு 64.75 புள்ளிகளுடன் முதலிடத்தையும், மேற்கு வங்கம் 63.42 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், மத்திய பிரதேசம் 63 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”ஜனவர் 22ம் தேதியன்று நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது . தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்திய சமயம் அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கோயில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை/பஜனை/பிரசாதம்/அன்னதானம் அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோயில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம்” என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாளை அறிவிக்கப்பட்ட விடுமுறையை திரும்பப் பெற்றது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை
நாளை பிற்பகல் 2.30 மணி வரை ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு செயல்படாது என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யுமாறு கட்சி தலைமை அண்ணாமலைக்கு உத்தரவிட்டுள்ளது.
அயோத்தி கோயில் திறப்பை முன்னிட்டு நாளை அறிவித்த அரைநாள் விடுப்பை திரும்ப பெற்றது எய்ம்ஸ்.
ஜிப்மரில் நாளை வழக்கம்போல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மருத்துவமனை தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.
ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள உத்தரப் பிரதேசம், அயோத்திக்கு ரஜினிகாந்த் இன்று புறப்பட்டுள்ளார். மேலும் ராமர் கோயில் நிகழ்வில் கலந்து கொள்வது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தனுஷ்கோடி அரிச்சல் முனையில் பூக்களைத் தூவி வழிபாடு செய்தார் பிரதமர் மோடி
ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து சாலை மார்க்கமாக தனுஷ்கோடிக்கு புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி.
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 40 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் , நேற்று 40 பேரையும் விடுவித்து இலங்கை அரசு உத்தரவிட்டது.
ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் (இலங்கை) அந்நாட்டு வசமே உள்ளது. எனவே, படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மீனவர்களை மட்டும் விடுவதை செய்வதால் எந்த பலனும் இல்லை, படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அடுத்த சில மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் விமான சேவை இன்று பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறுகிறது.
ராமேஸ்வரத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு செல்கிறார்.
75வது குடியரசு தின விழாவை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் தொழிலதிபர் பீட்டர் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது.
மேற்கு பிரேசிலில் இந்திய நேரப்படி அதிகாலை 3.39 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 614 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.
Background
PM ModI Rameshwaram: ராமேஸ்வரத்தில் இருந்து தீர்த்த கலசங்களை எடுத்துக் கொண்டு, பிரதமர் மோடி இன்று டெல்லி திரும்புகிறார்.
பிரதமர் மோடி தமிழகம் வருகை:
தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி கடந்த வெள்ளியன்று மாலை சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்து ஓய்வு எடுத்தார். பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று திருச்சிக்கு சென்ற பிரதமர் மோடி, ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரபல ரங்கநாதசுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். இதையடுத்து தனது பயணத்தின் இறுதி அங்கமாக ராமேஸ்வரம் புறப்பட்டு சென்ற அவர், புன்னிய தீர்த்தங்களில் குளித்து அங்குள்ள ரங்கநாத சுவாமி ஆலயத்தில் இறைவழிபாடு நடத்தினார். தொடர்ந்து இன்றும் அவர் கோயிலில் வழிபாடு நடத்த உள்ளார்.
பிரதமர் மோடியின் ராமேஸ்வர பயண திட்டம்:
- நேற்றைய வழிபாட்டை தொடர்ந்து நேற்று இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தங்கியுள்ளார்
- இதையடுத்து இன்று காலை மீண்டும் ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்று புனித நீராடுகிறார்
- அந்த வழியில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்கிறார்.
- இறுதியாக கலசத்தில் சேகரித்த 22 புனித தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வரும் மோடி, அங்கிருந்து விமானத்தில் டில்லி செல்கிறார்.
டெல்லி சென்றடையும் பிரதமர் மோடி நாளை அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு, ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தீர்த்த கலசங்களை கொண்டு சேர்க்கிறார். தொடர்ந்து, குழந்தை ராமர் சிலையை கோயில் கருவறையில் பிரதிர்ஷ்டை செய்து, ஆரத்தி வழங்க உள்ளார். இதற்காக 11 நாட்களுக்கான சிறப்பு விரதத்தை பிரதமர் மோடி கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது,
கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்:
பிரதமரின் வருகையினை முன்னிட்டு ராமேஸ்வரம் தீவு மற்றும் ராமநாதசுவாமி கோயில், பிரதமர் தங்க உள்ள ராமகிருஷ்ண மடம் ஆகியவை சிறப்பு பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதோடு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
- இன்று நண்பகல் 12 மணி வரை தனுஷ்கோடிக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
- ராமேஸ்வரத்திற்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி செல்லும் இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
- 3400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்
- ராமேஸ்வரம் மற்றும் தீவு பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது
- ட்ரோன் போன்றவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -