Breaking News LIVE: திமுக இளைஞரணி மாநாடு; இருசக்கர வாகனப் பேரணியை தொடங்கி வைத்த முதலமைச்சர்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
இளைஞரணி மாநாட்டினையொட்டி நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டு ரசித்து வருகின்றார்.
திமுக மாநாட்டு நிகழ்வுகளை முதலமைச்சர் ஸ்டாலின் தனி மேடையில் அமர்ந்தபடி பார்வையிட்டு வருகிறார். அவருடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் இளைஞர் அணி செயலாளருமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவருடைய மகன் இன்பன் உதயநிதி மற்றும் திமுக மூத்த அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் அமர்ந்துள்ளனர்.
ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் முடிந்து பிரதமர் மோடி ராமகிருஷ்ண மடத்திற்கு புறப்பட்டார்.
கருப்பு சிவப்பு உடைய அணிந்து இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து வரும் இளைஞர் அணி நிர்வாகிகளை கைகளை அசைத்து உற்சாகப்படுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின்.
திமுக இளைஞரணி மாநாடு சுடர் மாநாட்டு திடலை அடைந்தது . திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் இடம் மாநாட்டு சுடர் ஒப்படைப்பு. அவர் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுச் சுடரை ஏற்றி வைத்தார்.
நாளை திமுக இளைஞரணி மாநாடு நடைபெறவுள்ள நிலையில் சேலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் 1,500 பேர் பங்கேற்கும் இருசக்கர வாகனப் பேரணியை தொடங்கிவைத்தார்.
நாளை சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெறவுள்ளதால் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சேலத்திற்கு சென்றடைந்தார்.
ராமநாத சுவாமி கோவிலின் பஜனை பாடல்களை பிரதமர் மோடி ஆர்வமுடன் கேட்டார்.
சேலத்தில் நாளை திமுக இளைஞரணி மாநாடு நடைபெறவுள்ள நிலையில் மாநாட்டு திடலுக்கு அமைச்சர் உதயநிதி வருகை தந்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் உள்ள 22 புனித தீர்த்த கிணறுகளில் பிரதமர் மோடி புனித நீராடினார்.
ராமேஸ்வரத்தில் கோயில் அருகில் உள்ள அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினார் பிரதமர் மோடி.
அக்னி தீர்த்தக் கடலில் இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி புனித நீராடவுள்ளார்.
ராமநாதசுவாமி கோவிலில் இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி தரிசனம் செய்யவுள்ளார்.
பிரதமர் மோடிக்கு ராமநாத சுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்படவுள்ளது.
ராமகிருஷ்ண மண்டபத்தை சென்றடைந்த பிரதமர் மோடி, அடுத்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவுள்ளார்.
ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள ராமகிருஷ்ண மடத்தினை சென்றடைந்தார்.
ராமேஸ்வரத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் புனித நீராடும் பிரதமர் மோடி அங்குள்ள ராமர் பாதத்தை தரிசிக்கவுள்ளார்.
ராமேஸ்வரத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பிரதமர் மோடி நீராடவுள்ளார்.
ராமேஸ்வரத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருவதால் பிரதமர் காரின் கதவுகளைத் திறந்து நின்று கொண்டு மக்களின் வரவேற்பை ஏற்கின்றார்.
ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு பாஜகவினரால் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமரை வரவேற்பவர்கள் அவருக்கு மலர் தூவி வரவேற்கின்றனர்.
ராமேஸ்வரம் சென்ற மோடி, அங்கிருந்து கார் மூலம் ராமகிருஷ்ண மடத்திற்கு செல்கின்றார்.
ராமேஸ்வரத்திற்கு பிரதமர் மோடி வந்துள்ளதால் அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி இன்று தங்கவுள்ளார்.
ஸ்ரீரங்கத்தில் இருந்து பஞ்சக்கரை சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்ட்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்தார்.
ராமேஸ்வரம் சென்றடைந்தார் பிரதமர் மோடி. ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் இன்று தங்கவுள்ளார் பிரதமர் மோடி
பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏவின் மருமகள் தனது வீட்டில் வேலை செய்த சிறுமியை துன்புறுத்தியதாக கூறப்படும் விவகாரத்தை, காவல்துறை விரைந்து விசாரிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை தொடர்பாக 2 நாட்களில் அறிக்கை சமர்பிக்கவும், சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்ப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பான கடிதத்தில், இந்த நடைமுறை எம்.பி., மற்றும் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க வழிவகுக்கும் என ஆம் ஆத்மி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வருகயை ஒட்டி ஸ்ரீரங்கத்தில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால், கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தவிப்பு. பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் கோயிலுக்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் நடந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா வாகனங்களும் கோயில் வரை செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கம்பராமாயணம் பாடல்களை பாராயணம் செய்ததை, பிரதமர் மோடி கேட்டு மகிழ்ந்தார்.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த பிரதமர் மோடி வேட்டி, சட்டை அணிந்தவாறு பிரகாரத்தை சுற்றி வந்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து அர்ச்சகர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, கோயில் யானைக்கு உணவுப் பொருட்களை வழங்கி பிரதமர் மோடி ஆசி பெற்றார்.
சாமி தரிசனம் செய்வதற்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் சென்றார் பிரதமர் மோடி. அங்கு கோயில் மண்டபத்தில் தமிழ் அறிஞர்கள் பாடும் கம்பராயணம் பாடலை அவர் கேட்கிறார். முன்னதாக ராஜகோபுரம் முன்பு அளிக்கப்பட்ட பூரண கும்பம் மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
சென்னயிலிருந்து தனி விமானம் மூலம் திருச்ச் சென்றடைந்த பிரதமர் மோடி, சாலை மார்க்கமாக ஸ்ரீரங்கம் சென்றடைந்தார். இதையடுத்து, ரங்கநாத சுவாமி கோயில் பலத்த பாதுகாப்புகளுடன் இறைவழிபாடு நடத்த உள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம் செய்கிறார். பிரதமர் வருகையையொட்டி திருச்சியில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சபரிமலையில் நாளையுடன் மகரவிளக்கு பூஜை நிறைவடைய உள்ள நிலையில் இன்று 6 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தகவல்
கடந்த ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கிய சென்னை புத்தக கண்காட்சி நாளையுடன் நிறைவடைகிறது. 1000 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில் இதுவரை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்
அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று காலை 7.05 மணிக்கு இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவான நிலையில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி - ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் அவர் பின் விமானம் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி திருச்சியில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது மதிமுக - தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் குழு அமைக்கப்பட்டது
வரும் 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் 22 ஆம் தேதி பங்குசந்தைகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் பங்குச்சந்தைகள் காலை 9 மணிக்கு பதிலாக மதியம் 2.30 மணிக்கு தொடங்கி 5 மணிக்கு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தை தொடர்ந்து ஆந்த்ராவிலும் சாதி வாரிக் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள அம்மாநில அமைச்சர் சீனிவாச வேணுகோபால கிருஷ்ணா, “சுதந்திரம் பெற்ற பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான், அரசின் நலத்திட்ட உதவிகளை பெறாத சாதிகளுக்கும் உதவ முடியும். இது, அவர்களின் வாழ்க்கை தரத்தை மாற்றி அமைக்கும். முதலில், 139 பிற்படுத்தப்பட்ட சாதிகளை மட்டும் கணக்கெடுக்க திட்டமிட்டு இருந்தோம். இப்போது எல்லா சாதிகளையும் கணக்கெடுக்க உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
காலை 11.05 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை சென்றடையும் பிரதமர் மோடிக்கு, பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து ரங்கநாதரை தரிசிக்கும் பிரதமர்,கோயிலில் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு செய்கிறார். இதையடுத்து மண்டபத்தில் தமிழறிஞர்கள் கம்பராமாயணத்தை பாட, மோடி அதை கேட்கிறார். தொடர்ந்து அங்கு நடைபெறும் கம்பராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
காலை 11.05 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை சென்றடையும் பிரதமர் மோடிக்கு, பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து ரங்கநாதரை தரிசிக்கும் பிரதமர்,கோயிலில் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு செய்கிறார். இதையடுத்து மண்டபத்தில் தமிழறிஞர்கள் கம்பராமாயணத்தை பாட, மோடி அதை கேட்கிறார். தொடர்ந்து அங்கு நடைபெறும் கம்பராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.20 மணிக்கு பிரதமர் மோடி திருச்சி விமான நிலையம் சென்றடகிறார். அங்கிருந்து 10.45 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைவார். அங்கிருந்து சாலை மார்க்கமாக கோயிலுக்கு புறப்படுகிறார்.
Background
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் வருகையையொட்டி, ஸ்ரீரங்கத்தில் பலத்த பாதுககாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி தமிழகம் வருகை:
தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்து ஓய்வு எடுத்தார். இந்நிலையில், பயணத்தின் இரண்டாவது நாளான இன்று பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் சென்று, அங்குள்ள பிரபல ரங்கநாதசுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்த உள்ளார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் பயணம்:
- சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.20 மணிக்கு பிரதமர் மோடி திருச்சி விமான நிலையம் சென்றடகிறார்
- அங்கிருந்து 10.45 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைவார்
- பின்னர் கார் மூலம் காலை 11.05 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு செல்கிறார்
- அங்கு பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது.
- தொடர்ந்து ரங்கநாதரை தரிசிக்கும் பிரதமர்,கோயிலில் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு செய்கிறார்
- இதையடுத்து மண்டபத்தில் தமிழறிஞர்கள் கம்பராமாயணத்தை பாட, மோடி அதை கேட்கிறார்
- தொடர்ந்து அங்கு நடைபெறும் கம்பராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
- பின்னர் பகல் 12.50 மணிக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பஞ்சக்கரை பகுதியை அடைவார்
- அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று, பின்னர் தனி விமானம் மூலம் பிரதமர் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார்
4000 போலீசார் குவிப்பு:
பிரதமர் மோடியின் திருச்சி வருகையை ஒட்டி அங்கு பாதுகாப்பு பணிகளுக்காக 4000-க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி சாலை மார்க்கமாக பயணிக்கும் வழிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பயணிக்கும் மார்கத்தில் தார் சாலைகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன. டிரோன் உள்ளிட்டவை பறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் 2 நாட்களுக்கு முன்பே திருச்சிக்கு வந்து, பிரதமரின் வருகையின்போது, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில், நேற்று பாதுகாப்பு ஒத்திகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் மோடி வரும் நேரத்தில் மற்ற பக்தர்களுக்கு கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக ஸ்ரீரங்கம் பகுதியில் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்ட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -