Breaking News LIVE: ஜனவரியில் 1.72 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூல் - மத்திய அரசு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
ஜனவரி மாதம் 1.72 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திருப்பத்தூர் - புதுப்பேட்டை கூட்டுச்சாலையில், பாஜக தலைவர் அண்ணாமலையை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பம் விழுந்து கலீல் என்பவருக்கு படுகாயம்.
ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில், பூசாரி நியமித்து இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது வாரணாசி நீதிமன்றம்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 18 பாம்பன் மீனவர்கள் விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி இன்று ஆஜரானார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய்ஷா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக இருந்து வரும் ஜெய்ஷா, ஆசிய கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதோடு ஜெய்ஷா 3வது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மால்டாவில் பாதயாத்திரை மேற்கொண்டார். மேலும் அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மம்தா பானர்ஜி டிரம்ஸ் வாசித்தார். மேலும் பல்வேறு அரசு சேவைகள் மற்றும் அரசின் முன்முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார்.
அம்மாவின் தொண்டர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைவார்கள், நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள் அது குறித்து முடிவை அறிவிப்பேன். தமிழக ஆளுநர் அவரது பதவியின் மாண்புக்கு இழுக்கு ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல்லாவரம் எம்.எல்.ஏ மகன், மருமகள் ஜாமீன் கோரிய வழக்கில் போலீஸ், பணிப்பெண் பதில் அளிக்க சென்னை மாவட்ட மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற பழனி கோயில் வழிபாடு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்க என்று தமிழ்நாடு அரசுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா.ராஜஸ்தான் கர்நாடகா பீகார் போன்ற மாநிலங்களில் பாஜக ஆகிய மாநிலங்களில் வீழ்ச்சி அடையும் என்றும் இதனால் 200 க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெல்ல முடியும் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் அடையாள அட்டையை காணவில்லை என போலீஸில் புகார் அளித்துள்ளார்.
பிப்ரவரி 4ல் இடம்பெறவுள்ள இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஒத்திகை நிகழ்வுகள் கொழும்பில் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் பராசூட் வீரர்கள் விபத்துக்குள்ளாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி, 4 பராசூட் வீரர்கள் வெவ்வேறு பகுதிகளில் விபத்துக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
அமர் பிரசாத் ரெட்டியை பிடிக்க மும்பை, டெல்லி, குஜராத்துக்கு 3 தனிப்படைகள் விரைந்துள்ளன.
மக்களவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை இன்னும் தொடங்கவில்லை என பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ. நீளத்தில் ஆகாய நடைபாதை.
”பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து திமுக அரசு ஆட்சி நடத்தி வருகிறது. தரம் வாய்ந்த மத்திய அரசு பள்ளிகளை தமிழகத்தில் திமுக அரசு அனுமதிப்பதில்லை. இதனால் கற்றல் திறனை அரசு பள்ளி மாணவர்களிடையே திமுக அரசு குறைத்து வருகிறது. நான்காவது வாரிசும் தமிழகத்துக்கு வந்துவிட்டது. இதுதான் தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சி” என திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக மற்றும் தேமுதிகவுடன், அதிமுக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள சூழலில், தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட நான்கு நகரங்களில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிறைவு விழாவில், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தமிழக வீரர், வீராங்கனைகள் இதுவரை 35 தங்கம் உட்பட 91 பதக்கங்களை வென்று, பதக்கப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளனர்.
தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வாக்காளர்களை கவரும் விதமான பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள், இந்த இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா? வருமான வரி செலுத்தும் முறையில் மற்றம் கொண்டு வரப்படுமா? மற்றும் தொழில்முனைவோர்களுக்கு மானியம் மற்றும் நிதியுதவி தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நடைபெற உள்ள ஆண்டில் சமர்பிக்கப்படும் பட்ஜெட் பொதுவாக இடைக்கால பட்ஜெட் என குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள இந்த, இடைக்கால பட்ஜெட்டில், கணிசமான கொள்கை மாற்றங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது. அதேநேரம், நடப்பு அரசாங்கத்திற்கான செலவு, வருவாய், நிதிப் பற்றாக்குறை, நிதி செயல்திறன் மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கு அரசின் நிலை சார்ந்த திட்டங்கள் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் மட்டும் வெளியாகும்.
ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் இன்று தொடங்குகிறது. அதைதொடர்ந்து, நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய, பிப்ரவரி 9ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
Background
Budget 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான், 2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார்.
இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர்:
ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்த நிதியாண்டிற்கான வரவு செலவுகளை தீர்மானிக்கும் இடைக்கால பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் இன்று தொடங்குகிறது. அதைதொடர்ந்து, நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய, பிப்ரவரி 9ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. மக்களவை பொதுத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு அமையும் புதிய அரசு விரிவான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக, நேற்று நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட்டில் என்ன இருக்கும்?
தேர்தல் நடைபெற உள்ள ஆண்டில் சமர்பிக்கப்படும் பட்ஜெட் பொதுவாக இடைக்கால பட்ஜெட் என குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள இந்த, இடைக்கால பட்ஜெட்டில், கணிசமான கொள்கை மாற்றங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது. அதேநேரம், நடப்பு அரசாங்கத்திற்கான செலவு, வருவாய், நிதிப் பற்றாக்குறை, நிதி செயல்திறன் மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கு அரசின் நிலை சார்ந்த திட்டங்கள் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் மட்டும் வெளியாகும்.
பட்ஜெட்டின் மீதான எதிர்பார்ப்புகள்:
தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வாக்காளர்களை கவரும் விதமான பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள், இந்த இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா? வருமான வரி செலுத்தும் முறையில் மற்றம் கொண்டு வரப்படுமா? மற்றும் தொழில்முனைவோர்களுக்கு மானியம் மற்றும் நிதியுதவி தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்கான உட்கட்டமைப்பில் பட்ஜெட்டில் அதிக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. துறைசார் நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குவது, மக்கள் வரி செலுத்துவதை எளிதாக்குவது போன்ற நடவடிக்கைகளும் எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி அரசின் கடைசி பட்ஜெட்டா?
பிரதமர் மோடி தலைமையிலான அரசின் இரண்டாவது இடைக்கால பட்ஜெட் இதுவாகும். இதையடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் வெற்றி பெறும் அணி தான், 2024-25 நிதியாண்டிற்கான விரிவான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமா? அல்லது எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். நாட்டிலேயே அதிகமுறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையை, நிர்மலா சீதாராமன் நாளை பெறுவார். மொரார்ஜி தேசாய்க்கு பிறகு தொடர்ந்து ஆறு முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமயையும் பெற உள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -