Breaking News LIVE: கொஞ்சம் அழுத்தம் கொடுத்ததும், யு டர்ன் போட்டுவிட்டார் நிதீஷ்குமார் - ராகுல் காந்தி பேச்சு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
சண்டிகர் மேயர் தேர்தலில் மோசடி செய்து ஜனநாயகத்தை பாஜக படுகொலை செய்துள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்சு யாதவிடம் 8 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அரசு வேலைக்கு லஞ்சமாக குறைந்த விலையில் நிலங்களை பெற்றதாக பதிவான வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது.
இலங்கையில் இருந்து, விமானத்தில் கடத்தி வரப்பட்ட, ரூ.3.3 கோடி மதிப்புடைய, 5.5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற தமிழ்நாடு.
டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் தமிழ்நாட்டின் ரேவதி, லட்சுமி 6-2, 6-1 என்ற நேர் செட்களில் கர்நாடக இணையை வீழ்த்தி தங்கம் வென்றனர்.
பழனி முருகன் கோயிலில் வழிபாட்டிற்கு சென்ற பக்தரின் மண்டை உடைக்கப்பட்டதால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் பர்மிட் பெற்று இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான எல்லையை சி.எம்.டி.ஏ வரை நீட்டித்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பர்மிட் நீட்டிப்பு மூலம் செங்கல்பட்டு, அரக்கோணம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை வரை ஆட்டோகளை இயக்கலாம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு வருகின்ற பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என கோரினோம் - டி.ஆர். பாலு
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி, எம்.பி., ராஜாத்திஅம்மாள் ஆகியோர் இன்று (30.01.2024) நேரில் சாலிக்கிராமத்தில் உள்ள கேப்டன் அவர்களது வீட்டிற்கு சென்று திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்கள்.
தமிழ்நாட்டுக்கும் ஸ்பெயினுக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை இருக்கிறது. காளை அடக்குதல் விளையாட்டு ஸ்பெயினில் தேசிய விளையாட்டாகவும், பாரம்பரிய விளையாட்டாகவும் உள்ளது. தமிழ்நாட்டிலும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு எமது கலாச்சாரத்தின் சின்னமாக உலகக் புகழ் பெற்று விளங்குகிறது என ஸ்பெயினில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு நடத்தினார்.
பருத்திவீரன் பட பிரச்சனையில் பல பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்து அதற்கு விளக்கம் அளித்த நிலையில், நடிகனாக சரியாக செயல்படுவேன் என்றும், வாடிவாசல் படத்தில் சூர்யாவுடன் நடிப்பதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்றும் அமீர் தெரிவித்திருக்கிறார்.
அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு (Imran Khan) பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நாளை மறுநாள் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது.
மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், அமைச்சர்கள் உதயநிதி, கே.என். நேரு உள்ளிட்டோருடன் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.
வடசென்னை மக்கள் வசதிக்காக மாதவரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. இந்த நிகழ்வை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். இன்று முதல் தென்மாவட்ட பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையில் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க பிப்ரவரி 18 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஜனவரி மாதத்தில் 2 முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.
ஜாமீன் கோரி 2வது முறையாக உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது - முன்னதாக நேற்றைய தினம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்படி, இன்று முதல் தென்மாவட்ட பேருந்துகள் அனைத்தும் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது. அரசு விரைவு மற்றும் அதிவிரைவு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படுகிறது.
Background
கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 30ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 620வது நாளாக தொடர்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -