Breaking News LIVE: அம்பத்தூர் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து - பரபரப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
ஜார்கண்ட் எம்.எல்.ஏக்களில் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் ஐதராபாத்திற்கு அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அம்பத்தூர் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதில் தமிழ்நாட்டினை புறக்கணிக்கும் பட்ஜெட் எனவும், தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஒருநாள் நீதிமன்ற காவல் நீதிமன்றம் விதித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக பொறுப்பு வகித்த வந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ராஞ்சியில் உள்ள பிர்சாமுண்டா மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாப் சாஹூ தெரிவித்துள்ளார்.
மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாப் சாஹூ தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கத்தில் அடுத்த 6 மாதங்களுக்குள் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கத்தில் அடுத்த 6 மாதங்களுக்குள் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை கேட்ட அனைத்து ஆவணங்களையும் வழங்கியுள்ளோம் என்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் பாஜகவை அழிக்கும் வரை ஓயமாட்டோம். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி உரிய நேரத்தில் அறிவிப்பார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாமக தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பப்படி, தனித்து போட்டியிட இப்போது தயாராக இல்லை. மக்களவை தேர்தலில் குறைந்தது 7 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கேலோ இந்தியா போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்ததை தொடர்ந்து, இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டுள்ளார்.
அதிமுக ஆட்சியில் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு ரூ.50 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னை பெரம்பூர் பின்னி மில்லுக்கு சொந்தமான இடங்களை வாங்கி அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவது தொடர்பாக லஞ்சம் பெறப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 2015 முதல் 2017 இடையிலான காலக்கட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்று தெரிய வந்துள்ளது.
ராமநாதபுரத்தில் வீட்டுமனை பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் உள்ளிட்ட 3 பேரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். இளநிலை உதவியாளர் பாலாமணியை (65) பிடித்து கைது செய்தனர். மேலும் லஞ்சம் வாங்கச் சொன்ன செயற்பொறியாளர் பாண்டியராஜன் பதிவறை எழுத்தர் ரவிச்சந்திரன் ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று முதல் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை செய்யப்படுகிறது. மாநகர பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள ரூ. 1000 சலுகை பயணச்சீட்டு மாதந்தோறும் வழங்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை இந்த பயணச்சீட்டு வழங்கப்படும் என போக்குவரத்து மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.24 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 17 க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று உயர்ந்துள்ளது. இதனை தவிர முருங்கைக்காய், பூண்டு, பீட்ரூ, கேரட் ஆகிய காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
சென்னையில் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாதம் இந்திய சந்தையில் கேஸ் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுகிரது. அந்த வகையில் பிப்ரவரி 1ம் தேதியான இன்று வணிக சிலிண்டரின் விலை 12 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சென்னையில் நேற்று வரை 1925 ரூபாய் 50 காசுகள் என விற்பனையாகி வந்த கேஸ் சிலிண்டர், இன்று முதல் 1937 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் காவல்நிலைய எல்லையில் பிரவீன் குமார் வசித்து வருகிறார். அவரது அக்கா மகாலட்சுமியும், சதீஷ்குமார் என்ற நபரும் பழகி வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் மகாலட்சுமி அதனை தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தம்பி பிரவீன்குமார், நேற்று முன்தினம் சதிஷ்குமார் தனியாக நடந்து சென்ற போது தலையை துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார். உடனடியாக தனது வீட்டிற்கு சென்று அக்காளையும் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Background
Petrol Diesel Price Today, February 1: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 1ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 621வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -