Breaking News LIVE: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - அதிகாரிகள் எச்சரிக்கை
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் விலை வைத்து டிக்கெட் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பின செயலர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை தோற்கடித்த இத்தாலி வீரர் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் 9வது முறையாக பதவியேற்றார்.
மக்களவைத் தேர்தல் பங்கீடு குறித்து தி.மு.க.வுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா அணியுடனான பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
பீகாரில் நிதிஷ்குமாருக்கு பாஜக ஆதரவு தெரிவித்த கடித்ததை ஏற்றார் ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் - இன்னும் சிறிது நேரத்தில் பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
பீகார் பாஜக எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் தொடங்கி நநடைபெற்று வருகிறது. முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு நிபந்தனைகள் உடன் ஆதரவு வழங்குவது பற்றி, கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 600 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியை காண ஏராளமான சுற்றுவட்டார மக்கள் வருகை தந்துள்ளனர்
வேதாரண்யத்தில் உள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் 2வது நாளாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதில் வனத்துறையினர், தன்னார்வலர்கள், மாணவ-மாணவியர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
சென்னையில் ஆயிரம் விளக்கில் மெட்ரோ பணி காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒயிட்ஸ் சாலை - பட்டுலாஸ் சாலை சந்திப்பில் இருந்து திருவிக சந்திப்பு - ஒயிட்ஸ் சாலை வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணாசாலையில் இருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலையில் வலதுபுறம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை எம்.கே.புரத்தைச் சேர்ந்த திமுக வட்டச் செயலாளர் திருமுருகன் என்பவர் வெட்டிக்கொலை - அடையாளம் தெரியாத நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவுடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் இன்று மாலை 3 மணிக்கு ஆலோசனை - தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.
புதுச்சேரிக்கு துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர் வருகை தருகிறார் - அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதால் அம்மாநிலத்தில் ட்ரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
Background
கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 28ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 618வது நாளாக தொடர்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -