Breaking News LIVE: தாம்பரம் கிளாம்பாக்கம் இடையே நாளை முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் - தமிழ்நாடு அரசு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
தாம்பரம் கிளாம்பாக்கம் இடையே நாளை முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கோயம்பேட்டில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் அவரது உருவப்படத்தை தேமுதிக பொதுச்செயலாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா கண்ணீர் மல்க திறந்து வைத்தார்.
காந்தியால் இந்தியா சுதந்திரம் பெறவில்லை என்றும் சுபாஸ் சந்திரபோஸால் தான் இந்தியா சுதந்திரம் பெற்றது என்றும் ஆளுநர் ரவி பேசியதற்கு காங்கிரஸ் கட்சியினர் வரும் 27ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்கவேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தடவிட்டிருந்த நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க அவகாசம் தேவை எனவும், எனவே கோயம்பேட்டில் இருந்துதான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இது பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கார் விபத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. மம்தா பானர்ஜியின் நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளை இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படவேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பைலட் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட சுமார் 65 பேருடன் பறந்து கொண்டு இருந்த ரஷ்ய நாட்டின் ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகியது. இதனால் 65 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் I..N.D.I.A கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. இது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதகை: தனியார் தேயிலை எஸ்டேட் நிர்வாகம் 3 மாத ஊதியம் வழங்காததை கண்டித்து தோட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதன்முறையாக அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியை மாற்றுத்திறனாளிகள் கண்டுகளிக்கும் வகையில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, 250 மாற்றுத்திறனாளிகளுக்கு ஜல்லிக்கட்டை காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கேலோ இந்தியா விளையாட்டு: டிராக் சைக்கிளிங் பிரிவில் தமிழ்நாட்டு வீராங்கனை தமிழரசிக்கு 4வது பதக்கம் வென்றுள்ளார்.
பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ஏர் இந்தியாவுக்கு ரூ. 1.10 கோடி அபராதம் விதித்தது விமான போக்குவரத்து இயக்குநரகம்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளன.
நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 5,000 உயர்சிறப்பு மருத்துவ இடங்களில் உள்ளன. இந்தநிலையில் நீட் கட் ஆப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்துள்ளது.
இந்தாண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஆம்னி பஸ்கள் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அலங்காநல்லூரில் சிறந்த காளைக்கு முதல் பரிசு பெற்ற திருச்சி மாவட்டம் மேலூர் குணாவின் மாடு கீழக்கரையிலும் வெற்றி.
சிந்து சமவெளி நாகரீகத்தில் திமில் காளைகள் இருந்ததற்கான அடையாளம் உண்டு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் முழுவதும் சீர்குலைந்து இருக்கும் சட்டம் ஒழுங்கை காக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்
நம்பியாறு அணையின் முழுகொள்ளளவான 53 அடியை எட்டியதால் அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.
குடியரடு தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான 2 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை தனித்தனி பகுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரையை அடுத்த ஏறுதழுவுதல் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 44 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, ஜல்லிக்கட்டு அரங்கை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 66 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அரங்கிற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கு என பெயர்சூட்டப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்தினை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிக்கின்றன.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நாளை இந்தியா வரும் நிலையில், பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக, திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையேயான பேச்சுவார்த்தை ஜனவரி 28ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய நாளில் மாலை 3 மணியளவில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக, திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையேயான பேச்சுவார்த்தை ஜனவரி 28ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய நாளில் மாலை 3 மணியளவில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக, திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையேயான பேச்சுவார்த்தை ஜனவரி 28ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய நாளில் மாலை 3 மணியளவில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் கருத்து கேட்பு கூட்டம் நாளை நடக்கிறது
ப்ரோ கபடி லீக்கில் இன்று தெலுங்கு டைட்டன்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் ஹைதராபாத்தில் மோதுகின்றன.
மெரினா கலங்கரை விளக்கம் அருகே இந்தியாவில் முதன்முறையாக கடற்கரையில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையம்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.17.75 கோடியில் ஏசி ஓய்வு அறை: தெற்கு ரயில்வே அறிமுகம்
குடியரசு தினம், தைப்பூசம் என தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
ரூபாய் 62.78 கோடி செலவில் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் கம்பீரத் தோற்றத்துடன் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதனை திறந்து வைக்கிறார்.
Background
சென்னையில் இன்று (ஜனவரி 24ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 613வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 88வது ஆட்டத்தில் ஜனவரி 24ம் தேதியான இன்று ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 09:00 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
கடந்த போட்டியில் இரு அணிகளும் எப்படி..?
கடந்த ஜனவரி 22 ம் தேதி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்விக்குப் பிறகு தெலுங்கு டைட்டன்ஸ் இந்தப் போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று களமிறங்குகிறது. அந்த ஆட்டத்தில் 30-37 என்ற கணக்கில் தோல்வியடைந்தது தெலுங்கு டைட்டன்ஸ் அணி. ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் 13வது தோல்வி இதுவாகும்.
மறுபுறம், ஜனவரி 21ம் தேதி தமிழ் தலைவாஸ் தனது கடைசி ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியை சந்தித்தது. இதில், தமிழ் தலைவாஸ் அணி 45-28 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.
ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு:
ரூபாய் 62.78 கோடி செலவில் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் கம்பீரத் தோற்றத்துடன் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதனை திறந்து வைக்கிறார். இதையொட்டி, அரங்கில் உள்ள வசதிகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்ச்சமுதாயத்தின் முக்கிய பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் விழா கொண்டாடப்படும் வேளையில் தமிழ்நாடு முழுவதிலும் காளையை இளைஞர்கள் அடக்கும் வீரத்தைப் புலப்படுத்தும் ஏறுதழுவுதல் விழா நடைபெறும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -