Breaking News LIVE: ” கல்வி நிதி விடுவிக்க வேண்டும்”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
கல்வி நிதி நிறுத்தி வைப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டிற்கு, சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதியை விரைந்து வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தில், விரைந்து நிதி வழங்குவது மிக அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.
"உலக சாதனை படைத்த கல்லூரிகளை குழி தோண்டி புதைத்துவிட்டு, வேதங்களை சொல்லிக் கொடுங்கள் என்று சொல்கிறார்கள்.. கல்வி நிறுவனங்களைக் குறிவைத்து RSS சித்தாந்தகளை புகுத்த முயற்சி நடந்துகொண்டிருக்கிறது.." - சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு
தாம்பரம்: கேளம்பாக்கம்-வண்டலூர் சாலை புதுப்பாக்கத்தில் செயல்படும் Softgel எனும் தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீடீர் தீ விபத்து! கேளம்பாக்கம் போலீசார் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், சுமார் 700 பணியாளர்கள் அந்நிறுவனத்தில் இருந்து வெளியேற்றம். 2 பெண் பணியாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி!
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நிதி நிறுவனத்தில் ரூ 24 கோடி மோசடி செய்யப்பட்டதாக தேவநாதன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
"நாங்கள் அண்ணாமலையை ஒரு ஆளாகவே மதிக்குறதில்லை, அவர் ஒரு அரசியல் கோமாளி. அண்ணாமலை தேர்தலில் வெற்றி பெற வைக்க அண்ணா அண்ணா என்று எங்கள் அமைச்சர்களிடம் பேசியவர் - அதிமுக IT பிரிவு தலைவர் சிங்கை இராமச்சந்திரன்
இலங்கை சிறையில் 116 இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 184 விசைப்படகுகளும் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களும் படகுகளும் விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதலீடுகளை ஈர்க்க இன்று இரவு முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா புறப்படுகிறார். இதையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர் எ.வ.வேலு, பொன்முடி, மற்றும் எம்.பி கனிமொழி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
விரக்தியில் அண்ணாமலை அதிமுகவுக்கு எதிராக பேசி வருகிறார் என ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். அண்ணாமலை ஒரு விட்டில் பூச்சி எனவும் அதிமுக ஒரு ஆலமரம் எனவும் பேசியுள்ளார்.
மூத்த குடிமகன் என்ற அடிப்படையில் நேரில் ஆஜரவாதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சில்லறை விற்பனைச் சந்தையில் ஒரு கிலோ பூண்டு விலை ரூ.60 முதல் ரூ.70 வரை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.220க்கு விற்கப்பட்ட பூண்டு தற்போது ரூ. 300க்கு விற்பனையாகிறது.
திமுக எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜரானார். சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். தொகுதி நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என இபிஎஸ் பேசியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் பெண் மென்பொறியாளருக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கரூர் ரயில் நிலையத்தில் இருந்து விரைவு ரயிலில் வந்தபோது காட்பாடி அருகே 2 பேர் பாலியல் தொந்தரவு என புகார் எழுந்துள்ளது.
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விசைப்படகுடன் மன்னார் கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றது.
நடிகர் பிஜிலி ரமேஷ் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
Background
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்க பயணம்
- அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது பல்வேறு தொழில் நிறுவன தலைவர்களை நேரில் சந்திக்கிறார் முதலமைச்சர்
- ஜம்மு – காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – தேசிய மாநாட்டு கட்சி இடையே உடன்பாடு
- ஜம்மு – காஷ்மீர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல்டு – தொண்டர்கள் எதிர்ப்பு
- அமைச்சர் துரைமுருகன் எனக்கு எப்போதும் நண்பர்; அவரது கருத்தால் வருத்தம் இல்லை – ரஜினிகாந்த்
- ரஜினிகாந்த் பற்றி நகைச்சுவையாகவே கருத்து கூறினேன் – அமைச்சர் துரைமுருகன்
- அண்ணாமலை – எடப்பாடி பழனிசாமி இடையே கடும் வார்த்தை மோதல்
- மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்
- தென்காசி அருகே மக்களை அச்சுறுத்திய காட்டு யானை – 12 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் வனத்திற்கு அனுப்பி வைப்பு
- தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு ; எடப்பாடி பழனிசாமி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
- புதுக்கோட்டையில் பள்ளி மாணவர் சந்தேக மரணம் – உறவினர்கள் போராட்டம்
- வயநாட்டில் உயிரிழந்தவர்கள் பற்றிய சந்தேகம் தீரும் வரை தேடுதல் பணி தொடரும் – கேரள அமைச்சர்
- மலையாள திரையுலகை அதிர வைக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் – அடுத்தடுத்து வரும் குற்றச்சாட்டால் பரபரப்பு
- - - - - - - - - Advertisement - - - - - - - - -