Breaking News LIVE: தொல்லியல் அருங்காட்சியகத்துக்கு மாணவர்களை பேருந்தில் அழைத்துச் சென்ற கனிமொழி
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட இன்று நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
திண்டுக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை அவனியாபுரம் அய்வைத்தனேந்தல் கிராமத்தில் உள்ள ஆண்டவர் நல்லூருடைய அய்யனார் கோயிலில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சாமி தரிசனம் செய்தார். அப்போது, அய்வேத்தனேந்தல் பகுதியில் சாலை அமைத்துத் தர வேண்டும் என மாணிக்கம் தாகூரிடம் பொதுமக்கள். கோரிக்கை வைத்தனர்.
அரசுப் பள்ளிகளில் சிறப்பாக செயல்பட்ட 20 மாணவர்களை ஹாங்காங் நாட்டில் உள்ள Disneyland-க்கு அழைத்துச் சென்றுள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.
நல்லாசிரியர் விருது பெற்ற ஒருவர் மற்றும் கல்வி அலுவலர் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 130க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று ஆதிச்சநல்லூர் தொல்லியல் அருங்காட்சியகத்தைப் பார்வையிட பேருந்தில் இன்று அழைத்துசென்றேன்.
அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமுடன் இருந்த மாணவ, மாணவிகளுக்கு விளக்கமளித்தேன்.
“போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் கார் பந்தயம் நடத்தப்படும்... சனிக்கிழமை காலை நடைபெறும் பந்தயத்தை மக்கள் இலவசமாக பார்க்கலாம்” : சென்னையில் வரும் 31ம் தேதி, செப் 1ம் தேதி நடைபெறவுள்ள F4 கார் பந்தயம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைக்க காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீர்காழி சிவசிதம்பரம் முருகன் பாடலை பாடுவதை கேட்டதும், பாடல் முடியும் வரை எழுந்து நின்றார்
கன்னியாகுமரி: குமரிக் கடல் சீரான நிலையில் காணப்படுவதால், ஒரு வாரத்திற்கு பிறகு இன்று வழக்கம் போல் காலை 7.45 மணிக்கு கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை தொடங்கியது.
சுற்றுலா படகில் சவாரி செய்வதற்காக படகு குழாம் வாயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள்!
"நான் பொது சொத்து அல்ல" - பிரபலங்களை புகைப்படங்கள் எடுக்கும் Paparazzi குறித்து கண்டனத்தைப் பதிவு செய்து பேசிய நடிகை டாப்ஸி.
பிரபலங்கள் எங்கு சென்றாலும் அவர்களை துரத்திச் சென்று போட்டோ, வீடியோ எடுப்பவர்கள் Paparazzi எனக் கூறப்படுகிறார்கள்.
திருச்செந்தூரில் இன்று ஆவணித் திருவிழா தொடங்கியது. இதையடுத்து, காலை முதலே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
RHUMI 1
தமிழ்நாட்டைச் சேர்த்த ஸ்டார்ப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் இந்தியா 4 குழுமத்துடன் இணைந்து மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் 'மிஷன் ரூமி 2024' திட்டத்தின் கீழ் RHUMI 1 என்ற ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ரீயுசபிள் ஹைப்ரிட் ராக்கெட்டான RHUMI 1, 3 சோதனை செயற்கைக்கோள்களுடன் மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கடற்கரையில் இருந்து வானில் ஏவப்பட்டது.
3.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் வானில், 80 கி.மீ. உயரத்தில் பறக்கக்கூடிய திறன் கொண்டது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டால், ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி, பல முறை செயற்கைக்கோளை ஏவலாம். இதனால் செலவு மிச்சமாகும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
விழுப்புரம் அருகே ஜானகிபுரம் என்ற இடத்தில் பழைய கார்களை வாங்கி உடைத்து உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் நிலையத்தில் தீ விபத்து.
பல லட்சம் மதிப்பிலான உதிரிப் பாகங்கள் மற்றும் கார் பேட்டரி உள்ளிட்டவை எரிந்து சேதம். தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீ யை அணைத்தனர்!
பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகல ஏற்பாடு!
மாநாட்டு நுழைவாயிலில் மழை வடிவிலான பிரம்மாண்டமான செட்-ல் சிவன்,பார்வதி, முருகன் விநாயகர், அருணகிரிநாதர், வீரபாகு போன்ற உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முகப்பில் ஆறுபடை வீடு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவருக்கும் முருகனின் ராஜ அலங்கார படம், திருநீறு, குங்குமம், 200 கிராம் பஞ்சாமிர்தம், கந்த சஷ்டி புத்தகம், லட்டு, முறுக்கு ஆகியவை அடங்கிய பிரசாத பைகள் வழங்கப்பட உள்ளன!
சென்னையில் நடைபெற்று வரும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில், பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 11-4 என்ற புள்ளி கணக்கில் சென்னை அணி தோல்வி!
பழனியில் இன்று தொடங்குகிறது முருகன் முத்தமிழ் மாநாடு. இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
Background
- உக்ரைனுக்குச் சென்ற இந்திய பிரதமர்; அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நேரில் சந்திப்பு
- பழனியில் இன்று தொடங்குகிறது முத்தமிழ் முருகன் மாநாடு – கோலாகலமாக காட்சி தரும் பழனி
- காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம்
- நாகை மீனவர்கள் 11 பேரை கைது செய்த இலங்கை கடற்படை – விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை
- தொடர் விடுமுறை! சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்
- நேபாளத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 27 இந்தியர்கள் உயிரிழப்பு
- கலை மூலமாக மக்களை மாற்ற முடியும் என்பதற்காக இதுபோன்ற படங்களை எடுக்கிறேன் – மாரி செல்வராஜ்
- ஆல் டைம் பேவரைட் இந்திய அணியில் தோனியைச் சேர்க்காதது மிகப்பெரிய தவறு – தினேஷ் கார்த்திக்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -