Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா குமார திசாநாயக்க வெற்றி!

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

சுகுமாறன் Last Updated: 22 Sep 2024 08:07 PM
கொடைக்கானல் அருகே உள்ள வனப்பகுதியில் நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக அதிகாரிகள் நாளை ஆய்வு

கொடைக்கானல் அருகே உள்ள வனப்பகுதியில் நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக அதிகாரிகள் நாளை ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பக வந்தரேவு வனச்சரகர், புவியியல் தொழில்நுட்ப உதவி இயக்குநர், தீயணைப்புத் துறை, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

சென்னை காவல்துறை ஆணையர் அருணின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சைபர் க்ரைம் மோசடி முயற்சி

சென்னை காவல்துறை ஆணையர் அருணின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சைபர் க்ரைம் மோசடி முயற்சி.


+92 எனத் தொடங்கும் செல்போன் எண்ணின் வாட்ஸ் அப் DP-ல் சென்னை காவல்துறை ஆணையர் அருண் புகைப்படத்தை வைத்து ஏமாற்றுவதாக புகைப்பட ஆதாரத்துடன் ஒருவர் X தளத்தில் புகார் அளித்துள்ளார்.


புகாரின் மீது விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை காவல்துறையின் X பக்கத்தில் இருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது.

ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா

செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல்முறையாக தங்கம் வென்று இந்திய அணி சாதனை! கடந்த முறை சென்னையில் நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலம் வென்றிருந்த நிலையில், தற்போது 45வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று அசத்தல்.

அனுரா குமார திசாநாயக்க வெற்றி

இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. ஜனதா விமுக்தி பெரமுன கட்சி தலைவர் அனுரா குமார திசாநாயக்க வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தல்.. அனுரா குமார திசாநாயக்க தொடர்ந்து முன்னிலை!

1 மணி நிலவரப்படி, இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட அனுரா குமார திசாநாயக்க முன்னிலை வகித்து வருகிறார். 39.52 சதவிகித வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இவருக்கு அடுத்தபடியாக, சமகி ஜன பலவேகயா சார்பாக போட்டியிட்ட சஜித் பிரேமதாச இரண்டாம் இடத்தில் உள்ளார். இவர், 34.28 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளார். 

அம்பாசமுத்திரத்தில் நில அதிர்வா? பொதுமக்கள் அதிர்ச்சி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில்  காலை 11.55 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது. தற்போது வரை அரசின் Seismo இணையதளத்தில் பதிவுகள் ஏதும் வரபெறவில்லை. இதுவரை யாருக்கும் காயமோ பிற சேதங்களோ ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.  களஅலுவலர்கள் அப்பகுதிகளை பார்வையிட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

ஆந்திராவில் 2 சாலை விபத்துகளில் 7 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் இருவேறு சாலை விபத்துகளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலை நிலவரம் 

 


தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார் திசநாயகே தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஆகியொர் பின்னடைவை சந்தித்துள்ளனர். 


ரணில் விக்கிரமசிங்கே - சுயேட்சை - 2,62,057 வாக்குகள்
அனுரா குமார திசநாயகே - தே.ம.ச - 7,96, 941 வாக்குகள்
நமல் ராஜபக்சே - இ.போ.பா -46,757 வாக்குகள்
சஜித் பிரேமதாசா - ஜ.ம.ச - 4,12,845 வாக்குகள்
திலகர் - தமிழ் வேட்பாளர் -218 வாக்குகள் 

ஆந்திராவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூபாய் 1 கோடி கொள்ளை

ஆந்திராவின் கடப்பாவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூபாய் 1 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

விக்கிரவாண்டி மாநாடு: 30 குழுக்கள் வரை அமைக்க விஜய் முடிவு

விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள முதல் அரசியல் மாநாட்டைச் சிறப்பாக நடத்த த.வெ.க. சார்பில் 23 முதல் 30 குழுக்கள் வரை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Background


  • இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அனில்குமார் திசநாயகே முன்னிலை

  • இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவிற்கு பெரும் பின்னடைவு

  • குவாட் மாநாட்டிற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்

  • இந்தியா – அமெரிக்க உறவு வலுவாக உள்ளது; அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதிவு

  • அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு – ஆடி, பாடி வரவேற்பு அளித்தனர்

  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மேம்பால பணியின்போது விபத்து – 3 பேர் படுகாயம்

  • பெங்களூரில் இளம்பெண்ணின் உடலை 30 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த கொடூரம்

  • அ.தி.மு.க.வில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை – எடப்பாடி பழனிசாமி பேச்சு

  • மத்திய அரசு இந்தியை திணிப்பதாக சில கட்சிகள் பொய் பிரச்சாரம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

  • நாட்டைப் பிரிக்க சில சாதிய, மதவாதிகள் அரசியல் செய்கின்றனர் – கனிமொழி குற்றச்சாட்டு

  • மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை நிறைவு

  • மாஞ்சோலைத் தோட்ட தொழிலாளிகள் மனித உரிமைகள் மீறப்படுவதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

  • புகையிலை பயன்பாட்டை குறைப்பதற்கான வழிகாட்டுதலை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

  • காஷ்மீரில் அமைதி நிலவுவதாக பிரதமர் மோடி பொய் பிரச்சாரம் செய்கிறார் – காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

  • தமிழக அரசின் உண்மை சரிபார்க்கும் குழுவை கலைக்க வேண்டும்- பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

  • சென்னையில் இருந்து புதுச்சேரி சென்ற ரயிலில் அட்டகாசம் செய்த இளைஞர்கள் – வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார்

  • மதுரை, திருச்சி, கோவை மாவட்டங்களிலும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அமைக்க திட்டம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

  • குஜராத்தில் ரூபாய் 5 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு – 4 பேர் கைது

  • மக்கள் நீதிமய்யத்தின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட கமல்ஹாசன் – தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

  • மோசடி நபரிடம் 2 லட்சம் கொடுத்து 18 வயதிலே ஐபிஎஸ் அதிகாரியான இளைஞர் – ஏமாந்ததே தெரியாமல் ஐபிஎஸ் உடையில் உலா வந்தது பரிதாபம்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.