அரசியலுக்கு வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினி, அதற்கு குழுக்குப் போட்டுவிட்டு திரைப்படத்தில் நடிப்பதை மட்டுமே தொடர்ந்து வருகிறார். அதிகமாக  ஆக்‌ஷன் பிளாக் திரைப்படங்களையே தேர்வு செய்து நடித்து வந்த ரஜினி, சமீப காலமாக ஆக்‌ஷனோடு சேர்த்து சமூக நோக்கம் கொண்ட கதைகளை தேர்வு செய்வதை தன்னுடைய பாணியாக மாற்றியிருக்கிறார். கடைசியாக அவர் நடித்து வெளிவந்த வேட்டையன் திரைப்படம் அப்படியானதுதான்.


என்கவுண்டர் வேண்டாம்


சமீபத்தில் ரஜினி நடித்து வெளிவந்த வேட்டையன் திரைப்படம் அப்படியானதுதான். ஆக்‌ஷனும் இருக்கனும், சமூக நோக்கமும் இருக்கனும் என்ற ரஜினியின் வலியுறுத்தலை ஏற்று இயக்குநர் ஞானவேல் எழுதிய கதை அது.  காவல்துறையினர் செய்யும் என்கவுண்டரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதையில் அந்த என்கவுண்டர் முறை எவ்வளவு மோசமானது என்பதை தன்னுடைய பாணியில் மக்களுக்கு உணர்த்தியிருப்பார் இயக்குநர் ஞானவேல். இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே, இதுபோன்ற சமூக நோக்கம், மக்களுக்கான மெசெஜ் சொல்லும் கதையாகவும் அதே நேரத்தில் தனக்கு ஒத்துப்போகும் ஆக்‌ஷன் பிளாக்கையும் சேர்த்து தயாரித்து வரப்படும் கதைகளுக்கு இனி முக்கியத்துவம் கொடுத்து ரஜினி கேட்க முடிவு செய்திருக்கிறார். 


“இன்னொரு கதை பண்ணுங்க” சொன்ன ரஜினி


அதே நேரத்தில், ரஜினியின் காலா, கபாலி, அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களை காட்டிலும் அவருக்கு ஜெயிலரும், வேட்டையனும் கைக்கொடுத்த நிலையில், மீண்டும் தனக்கு ஒரு கதை பண்ணுமாறு இயக்குநர் வேட்டையன் திரைப்பத்தை இயக்கிய, இயக்குநர் டி.ஜே.ஞானவேலிடம் சொல்லியிருக்கிறார் நடிகர் ரஜினி. இதனால், ரஜினிக்கு இன்னொரு கதை செய்யும் பணியில் தீவிரவமாக இயக்குநர் ஞானவேல் ஈடுபட்டிருக்கிறார்.


எம்.ஜி.ஆர் பாணியை கையெலெடுக்கும் ரஜினி


எம்.ஜி.ஆர் முழுமையாக தன்னை அரசியலுக்கு ஒப்புக்கொடுப்பதற்கு முன்னர் அவர் நடித்த மக்கள் நலன் சார்ந்த, சமூகத்திற்கு ஏற்ற திரைப்படங்கள் போல இனி ரஜினியும் நடிக்க முடிவு செய்திருக்கிறார். தன்னால் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லை என்ற ஏக்கத்தை தணித்துக்கொள்வதற்காக, எம்.ஜி.ஆர் பாணியில் பாட்டாளிகளில் ஒருவராக அவர்களுக்காக பேசும் நபராக வரும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க ரஜினி புதிய ஆர்வம் கொண்டிருக்கிறார். அந்த வகையில்தால், சோஷியல் மெஜெஜோடு எடுக்கப்பட்ட வேட்டையன் திரைப்படம் மாதிரியான இன்னொரு கதையை தயார் செய்து தன்னிடம் வந்து காட்டுமாறு இயக்குநர் ஞானவேலுக்கு இன்னொரு அசைன்மெண்டை ரஜினி கொடுத்திருக்கிறார். 


ரஜினியிடம் வலியுறுத்திய சீமான்


சமீபத்தில் நடிகர் ரஜினியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் ரஜினிக்கு இந்த ஆலோசனையை வழங்கியிருக்கிறார். உங்களுக்கு அரசியல் சரிவராது. ஆனால், மக்களை அரசியல்படுத்தும் பணிகளை திரைத்துறை மூலம் நீங்கள் செய்யுங்கள் என சீமான் ரஜினியிடம் சொல்லியிருக்கிறார். அதற்கு ரஜினியும் நானும் அதே மைன்செட்டில்தான் இருக்கிறேன். நிச்சயமாக தற்போதைய அரசியல், சமூக சூழலுக்கு ஏற்ற கதைகளை தேர்வு செய்து இனி நடிப்பேன் என்று சீமானிடம் ரஜினியும் உறுதி கொடுத்திருக்கிறார். 


ஞானவேலிடம் நேரடியாக சொன்ன ரஜினி, தன்னுடைய உதவியாளர்கள் மூலம் மற்ற இயக்குநர்களுக்கும், புது முகங்களும் இதுபோன்ற கதைகளை தயார் செய்து வந்தால் அதனை உடனடியாக கேட்க தான் தயார் என்ற மெசேஜும் சொல்லப்பட்டிருக்கிறது.