Breaking News LIVE:டாணா புயல் எச்சரிக்கை! 14 மாவட்டங்களுக்கு வரும் 25ம் தேதி வரை எச்சரிக்கை
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
டாணா புயல் எச்சரிக்கை காரணமாக ஒடிசாவின் 14 மாவட்டங்களுக்கு வரும் 25ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க இயக்கப்படும் தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
தாம்பரம் - ராமநாதபுரம் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (06103) நவம்பர் 02, 04, 06, 09, 11, 13, 16, 18, 20, 23, 25, 27, 30 ஆகிய வியாழன், சனி மற்றும் திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 05.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.55 மணிக்கு ராமநாதபுரம் வந்து சேரும். மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் - தாம்பரம் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (06104) நவம்பர் 03, 05, 07, 10, 12, 14, 17, 19, 21, 24, 26, 28, டிசம்பர் 1 ஆகிய வெள்ளி, ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு இரவு 11.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர இலாபம் ஈட்டாத தலைமைச் சங்கங்கள்மற்றும் மத்திய சங்கங்கள் இருப்பின் அவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3000/-ம், தொடக்க சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2,400/-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த 5 வயது சிறுமி உமையாள் தாயின் கண் முன்னே உயிரிழந்ததார். பள்ளி முடிந்து சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்றபோது விபத்து நடந்துள்ளது. லாரி ஓட்டுநரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையே அமைதியை நிலைநாட்ட இந்தியா தயார் என்று பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கசான் நகரில் இன்று தொடங்கிய பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடி, ரஷ்யா – உக்ரைன் இடையே அமைதியை நிலைநாட்டத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயார் என்றும், ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெறும் போருக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்றும், இந்தியா – ரஷ்யா இடையே வருங்காலங்களில் அனைத்து விதமான ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
கிளாஸ்கோ நகரில் நடைபெற இருக்கும் 23-வது காமன்வெல்த் போட்டியில் ஹாக்கி, மல்யுத்தம், பேட்மிண்டன், கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், டிரையத்லான், பீச் வாலிபால் மற்றும் ரக்பி செவன்ஸ் ஆகிய போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன.
இந்திய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், தன்னுடைய சின்னத்தை (லோகோ) மாற்றி அமைத்துள்ளது. இதில் நீல வண்ணத்தில் இருந்த லோகோ, காவி நிறத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. அத்துடன், பாதுகாப்பு, மலிவு மற்றும் நம்பகத்தன்மை (security, affordability and reliability ) என்ற வாசகங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.அதேபோல BSNL சின்னத்துடன் கூடிய Connecting India என்னும் வாசகம் Connecting Bharat என்று மாற்றப்பட்டுள்ளது.
அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.499/- விலையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான 15 மளிகைப்பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் மளிகைத் தொகுப்பு விற்பனைத் திட்டத்தினை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் துவக்கி வைத்தார்.
நியாய விலை கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.அதிகபட்சமாக ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் வரை போன்ஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் இருசக்கர வாகன தொழிற்சாலையை ரூ.180 கோடியில் விரிவாக்கம் செய்கிறது யமஹா நிறுவனம். ஸ்ரீபெரும்புதூர் யமஹா இருசக்கர வாகன உற்பத்தி ஆலை விரிவாக்கம் மூலம் கூடுதலாக 431 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமித்ஷாவின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ”அமித் ஷாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள். அவர் ஒரு கடின உழைப்பாளி. பாஜகவை வலுப்படுத்த தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். அவர் ஒரு விதிவிலக்கான நிர்வாகியாக முத்திரை பதித்துள்ளார். விக்சித் பாரதத்தின் பார்வையை நனவாக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்”
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி சரவணன் திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரின் உயிரிழப்புக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை நவம்பர் 22ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு, ஹைதராபாத் நகர சிவில் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பவன் கல்யாண் கருத்து இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4 நாட்கள் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் 26 பேர் இன்று அறிவுரை கழகத்தில் ஆஜர் ஆகின்றனர். ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உட்பட 26 பேர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் ஆஜராகின்றனர். 26 பேரும் ஆஜராகவுள்ளதால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஒசூர் விமான நிலைய பணியை விரிவுபடுத்த வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஓசூர் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த தி.மு.க. அரசை வலியுறுத்தல்! pic.twitter.com/rXZJw42qtt
— O Panneerselvam (@OfficeOfOPS) October 22, 2024
Background
- சென்னை அண்ணா அற்வாலயத்தில் முரசொலி செல்வத்தின் உருவப்படம் திறப்பு - முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
- தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
- தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல 14,086 சிறப்பு பேருந்துகள் - தமிழக அரசு அறிவிப்பு
- அகரம் முத்தாலம்மன் கோயிலில் கண் திறப்பு வைபவம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
- சென்னை பட்டினப்பாக்கத்தில் போலீசாரிடம் போதையில் தகராறு செய்த கணவன் - மனைவி, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
- நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை
- மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் வெற்றி கண்ட தென்மாநிலங்களை தண்டிப்பதா என காங்கிரஸ் கேள்வி - நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தை குறைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தல்
- கொல்கத்தாவில் 16 நாட்களாக நடைபெற்ற மருத்துவர்களின் உண்ணாவிரதம் வாபஸ் - முதலமைச்சர் மம்தா பானர்ஜி உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அறிவிப்பு
- பிரியங்கா காந்தி வயநாடு இடைத்தேர்தலில் போட்டி - இன்று கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
- உத்தரபிரதேச மாநிலத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 5 பேர் உயிரிழப்பு
- வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த ஆவணம் இல்லை: அதிபர் அறிவிப்பால் பரபரப்பு
- ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகும் இஸ்ரேல் - வெளியான ரகசிய ஆவணங்கள்
- அமெரிக்காவில் வானொலி கோபுரத்தில் மோதி வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர் - பயணித்த குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு
- - - - - - - - - Advertisement - - - - - - - - -