Breaking News LIVE, 20 Sep : லட்டு விவகாரம் : 'ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும்' : ராகுல் காந்தி கவலை
Breaking News LIVE, 20 Sep : தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
"தேர்தலில் தோற்றுவிடுவோம் என பயந்து சிலிண்டர் விலையை ₹200 குறைத்தார் பிரதமர் மோடி" பிரதமர் மோடி மீது அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சனம்
"இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும்" திருப்பதி கோயில் பிரசாத லட்டில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம் - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கவலை
"வேட்டையன் திரைப்படத்தில் நானும் இணைந்து நடித்ததில் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். எனது முதல் படத்திலிருந்து இப்படி ஒரு வாய்ப்புக்காகதான் காத்திருந்தேன்" ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ பட இசை வெளியீட்டு விழா சிவப்ப கம்பள வரவேற்பில் நடிகை ரித்திகா சிங் பேச்சு.
சர்ச்சைப் பேச்சு வழக்கில் கைதான மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு...
சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, அக்டோபர் 3ம் தேதி வரை காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
Breaking News LIVE, 20 Sep : சென்னையில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேச அணி. இந்தியாவை விட 217 ரன்கள் பின் தங்கியுள்ளது வங்க தேச அணி . இந்நிலையில், தற்போது இந்திய அணி பேட்டிங் ஆடி வருகிறது.
Breaking News LIVE, 20 Sep : சென்னையில் 100° F வெயில் சுட்டெரிக்கும்!
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 4 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருக்கக்கூடும். சென்னையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக, ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி செய்தியாளர்களைச் சந்திக்கிறார். இன்று பிற்பகல் 3 மணிக்கு சந்தித்து, தம் மீதும் தம் அரசு மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி தர உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்ல, இது தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிடுமாறு நீதிமன்றத்தையும் அக் கட்சி அணுகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி லட்டில் விலங்கு கொடுப்பு சேர்த்து மகா பாவம் செய்துவிட்டனர் என கோயிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,” லட்டு தரம்,சுவை குறித்து புகார் அளித்தும் தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்கவில்லை. 5 ஆண்டுகளாக விலங்கு கொழுப்பு மீன் எண்ணெய் கலந்து பாவம் செய்துவிட்டார்கள். ஆகம் சாஸ்திரத்தில் இருப்பது போல திருப்பதியில் வழிபாடு நடத்தப்படுவதில்லை. குற்றம் செய்வதர்கள் மீது அரசு கடும் நடவடிககி எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு மீது உயர்நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் தலைமையிலான ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மனு வரும் புதன்கிழமை அவசா வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஆந்திர உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை நதிகள் சீரமைப்பு தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். சென்னை கூவம், அடையாறு, கொசஸ்தலையாறு சீரமைப்பு தொடர்பாக ஆலோசனை. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்ரமணியன், தாமோ அன்பரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உச்சமாய் மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர் ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள்மீது வக்கிர வார்த்தைகளை உக்கிரமாய் வீசுவர்; தொடர்பற்ற மொழிகள் பேசுவர் பைத்தியம்போல் சிலநேரமும் பைத்தியம் தெளிந்தவர்போல் சிலநேரமும் காட்சியளிப்பர் தம்மைக் கடவுள் என்று கருதிக்கொள்வர் இந்த நோய்க்கு ‘Messianic Delusional Disorder’ என்று பெயர் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்; இரக்கத்திற்குரியவர்கள்; அனுதாபத்தால் குணப்படுத்தக் கூடியவர்கள் உளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும் உண்டு உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்
திருப்பதி பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் ட்வீட் செய்துள்ளார்
அதில், “திருப்பதி பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு (மீன் எண்ணெய், பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி கொழுப்பு) கலந்திருப்பது கண்டு நாம் அனைவரும் மிகவும் கவலையடைந்துள்ளோம். பல கேள்விகளுக்கு YCP அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட TTD வாரியம் பதிலளிக்க வேண்டும். எங்கள் அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுக்க உறுதிபூண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நாளை நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
Background
- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமற்றது என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் - வறட்டு கவுரவத்திற்காக பாஜக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்
- தமிழ்நாட்டில் 100 டிகிரி ஃபாரன்ஹிட்டை தாண்டி கொளுத்திய வெயில் - மேலும் 4 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டும் என எச்சரிக்கை
- குரூப் 4 பணியிடம் உயர்வு.. அடுத்த மாதம் அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி தகவல்
- தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க, அக்டோபர் 4ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
- கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு - மாணவிகளுக்கு கருணைத் தொகை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
- வேங்கைவயல் வழக்கு - சி.பி.சி.ஐ.டி.,க்கு மேலும் ஒரு மாதம் அவகாசம்
- சசிகுமாரின் நந்தன், ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து, சினு ராமசாமியின் கோழிப்பண்னை செல்லதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் இன்று திரையரங்களில் வெளியாகின்றன
- திருப்பதி லட்டு பிரசாதத்தில் மீன் எண்ணெய் மற்றும் மாட்டு கொழுப்பு - தேசிய கால்நடை மற்றும் உணவு மையம் உறுதி செய்ததால் பக்தர்கள் அதிர்ச்சி
- முடிவுக்கு வருகிறது கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் - நாளை முதல் அத்தியாவசிய சிகிச்சைகளை வழங்கும் பணி தொடரும் என அறிவிப்பு
- கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு 12 நாட்களில் ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்
- டெல்லி முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் அதிஷி - புது முகத்திற்கு அமைச்சர் வாய்ப்பு
- மணிப்பூரில் ராணுவம் மற்றும் போலீசார் நடத்திய கூட்டு நடவடிக்கையில், 28 கிலோ சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்
- காலிஸ்தான் தீவிரவாதியை கொல்ல சதி இந்திய அரசுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்: மத்திய அரசு கடும் கண்டனம்
- இந்தியா நோட்டீஸ் எதிரொலி சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டாம்: பாகிஸ்தான் அறிவிப்பு
- அடுத்தடுத்து தாக்குதல் எதிரொலி விமானத்தில் பேஜர், வாக்கி டாக்கிக்கு தடை: லெபனான் அரசு திடீர் அறிவிப்பு
- இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் - வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்
- வங்கதேச அணிக்கு எதிரான சென்னை டெஸ்டில் சதம் அடித்து அசத்திய அஸ்வின் - முதல் நாள் நேர முடிவில் இந்திய அணி 339/6 ரன்கள் குவிப்பு
- - - - - - - - - Advertisement - - - - - - - - -