Breaking News LIVE 1st Nov : ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் - தொடங்கி வைத்தார் ஆந்திர முதல்வர்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள பயனாளியின் வீட்டிற்கே சென்று கியாஸ்-ஐ இணைத்து அவரே தேநீர் செய்து அருந்தினார்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு தமிழ்நாடு - ஆந்திரா நோக்கி நகரும். இதனால் நவம்பர் 2வது வாரத்தில் தமிழ்நாடு, ஆந்திராவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். அடுத்த 2 வாரத்துக்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நவம்பரில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மொஹபத்ரா கூறுகையில் நவம்பரில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் நவம்பரில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நவம்பர் 2வது வாரத்தில் இயல்பை விட மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.
மதுரை அண்ணா நகரில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையில் தேவர் தங்கக் கவசத்தை அ.தி.மு.க., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர்கள், வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர். தேவர் குரு பூஜை முன்னிட்டு கடந்த 25-ம் தேதி தேவரின் தங்கக் கவசத்தை அதிமுகவினர் வங்கியில் இருந்து பெற்று, பசும்பொன் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் இந்நிலையில் ஒப்படைக்கப்பட்டது. குரு பூஜை முடிந்த நிலையில் மீண்டும் பசும்பொன்னில் இருந்து தங்கக் கவசத்தை வங்கியில் ஒப்படைக்க உள்ளனர். தொடர்ந்து செய்தியாளர் சந்திக்க வாய்ப்புள்ளது.
தேவர் தங்கக்கவசத்தை வங்கியில் அதிமுகவினர் ஒப்படைக்க உள்ளனர்
மதுரை அண்ணா நகரில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையில் தேவர் தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள், வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.
தேவர் குரு பூஜை முன்னிட்டு கடந்த 25-ம் தேதி தேவரின் தங்கக் கவசத்தை அதிமுகவினர் வங்கியில் இருந்து பெற்று, பசும்பொன் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் இந்நிலையில் ஒப்படைக்கப்பட்டது.
குரு பூஜை முடிந்த நிலையில் மீண்டும் பசும்பொன்னில் இருந்து தங்கக் கவசத்தை வங்கியில் ஒப்படைக்க உள்ளனர்.
புதுச்சேரியில் கோலாகலமாக நடைபெற்ற விடுதலை நாள் கொண்டாட்டம்.
முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
பிரெஞ்சுக்காரர்கள் ஆதிக்கத்தில் 300 ஆண்டுகள் இருந்த புதுச்சேரிக்கு 1954ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி விடுதலை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
மதுரை: நெல்பேட்டை வைகை ஆற்றை ஒட்டிய பகுதிகளில் இறைச்சிக் கடைகளின் கழிவுகள் சாலையோரம் வீசப்பட்ட சம்பவம்.
அப்பகுதியை கடக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம்.
அப்பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்து உத்தரவிட்டதை அடுத்து கழிவுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளது.
கழிவுகளை கொட்டிய கடைகள் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை
Chembarambakkam Lake Renovation : சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் கரையை ₹22 கோடி செலவில் சீரமைக்க நீர்வளத்துறை நடவடிக்கை.
முக்கிய குடிநீர் ஆதாரமான இந்த ஏரியின் கரையில் மிக்ஜாம் புயலால் சேதம் ஏற்பட்டது. 6300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 3645 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 6ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு!
சென்னை மந்தைவெளியில் சாலைகளில் குவிந்த பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்!
தொடர் விடுமுறையை ஒட்டி, தீபாவளி பண்டிகையை கொண்டாடிய கையோடு கன்னியாகுமரிக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள். அதிகாலை முதல் காத்திருந்து சூரிய உதயத்தைக் கண்டு ரசித்தனர்!
கோவை வால்பாறை காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. கிருஷ்ணவேணி, சாலை விபத்தில் உயிரிழப்பு - இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ₹25 லட்சம் நிவாரண நிதியாக வழங்க உத்தரவு
தீபாவளி கொண்டாட்டம் காரணமாக பட்டாசு வெடித்ததில் சென்னையில் காற்றின் தரம் மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.
Background
- தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகல கொண்டாட்டம் – மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகம்
- தீபாவளி பண்டிகை காரணமாக எல்லையில் ராணுவ வீரர்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி
- இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம் காரணமாக காற்று மாசு நேற்று ஒருநாள் மட்டும் வழக்கத்தை விட அதிகரிப்பு
- தீபாவளி பண்டிகை காரணமாக சென்னையில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியது
- தீபாவளி பண்டிகை காரணமாக சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்ததால் போக்குவரத்து வெறிச்சோடியது
- வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 5 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு
- குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவருக்கு பிரதமர் மோடி நேரில் தீபாவளி வாழ்த்து
- வட மாநிலங்களில் வீடுகளில் விளக்குகள் ஏற்றியும், பட்டாசு வெடித்தும் தீபாவளி கொண்டாட்டம்
- சென்னை எண்ணூரில் பட்டாசு வெடித்ததில் பெரும் தீ விபத்து – உயிர்சேதம் தவிர்ப்பு
- தீபாவளி பண்டிகை காரணமாக உள்ளூர் விமானங்களின் கட்டணம் கிடுகிடு உயர்வு
- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பட்டாசுகள் வெடித்தபோது நெருப்பு பொறி பற்றியதில் இரும்புக் கடையில் பயங்கர தீ விபத்து
- ஒரே நாடு ஒரே தேர்தல் முறை சாத்தியமற்றது – காங்கிரஸ் தலைவர் கார்கே பரபரப்பு பேட்டி
- மூத்த குடிமக்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான வயது அதிகமாக உள்ளது, வயதை குறைக்க வேண்டும் – திருமாவளவன் பிரதமர் மோடிக்கு வலியுறுத்தல்
- லண்டனில் சிம்பொனி இசையை தொடங்கினார் இளையராஜா
- மேற்கு வங்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெரு நாய்களுக்கு மரியாதை
- அசாமில் தானியங்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து – 7 ரயில்கள் ரத்து
- விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து அதிகரிப்பால் இன்டர்போல் உதவியை நாடும் இந்தியா
- ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் – முதலமைச்சர் உமர் அப்துல்லா இடையே மோதல்
- இந்தியா – நியூசிலாந்து இடையே இன்று கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் தொடக்கம் – ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -