Breaking News LIVE 12th Nov : வீட்டிற்கு செல்ல அவசரப்படாதீங்க; காத்திருந்து போங்க - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

Breaking News LIVE 12th Nov 2024: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

சுகுமாறன் Last Updated: 12 Nov 2024 06:27 PM
Breaking News LIVE: மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - ஆடுகளுக்கு இலை வெட்டும்போது நேரந்த சோகம்

 


ராமநாதபுரம் கமுதி அருகே இடையன்குளத்தில் மின்சாரம் தாக்கி செல்வகுமார் என்பவர் உயிரிழந்தார். மரத்தில் ஏறி ஆடுகளுக்கு இலை வெட்டும்போது மின்கம்பி மீது அரிவாள் உரசி மின்சாரம் பாய்ந்து செல்வகுமார் உயிரிழந்தார். 

Breaking News LIVE: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

 


மழை காலத்தில் ஒக்கியம் மடுவில் தடை ஏதுமின்றி, பக்கிங்காம் கால்வாய் வழியாக மழை நீர் கடலில் கலப்பதை உறுதி செய்ய, மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான கழக அரசு சீரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.


தனியார் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை சட்டப்பூர்வமாக கையகப்படுத்தி, பள்ளிக்கரணையிலிருந்து வருகிற நீர்வழிப்பாதை அகலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மற்றொரு புறம், வேறு ஒரு கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் தேங்கியுள்ள மணல் திட்டுகளை ரூ.30 லட்சம் செலவில் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கான மிக முக்கியமான இப்பணிகளை இன்று மாலை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தோம். இதனை விரைந்து முடித்திட ஆலோசனைகளை வழங்கினோம்.



வீட்டிற்கு செல்ல அவசரப்படாதீங்க; காத்திருந்து போங்க - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

 


சென்னையில் மழை 5 - 10 நிமிடங்கள் இருக்கும். வீட்டிற்கு செல்ல அவசரப்பட வேண்டாம். காத்திருந்து செல்லலாம். இரவு போக போக மேகங்கள் உருவாகி மழை இருக்கும். அதிகாலை முதல் அலுவலக நேரம் வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 



Breaking News LIVE : ஆசிரியர் நியமனம் - உயர்நீதிமன்றம் கேள்வி

 


ஆசிரியர் நியமனம் செய்யும்போது அவர்களின் குற்றப்பின்னணியை ஏன் காவல்துறை மூலம் விசாரிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நவம்பர் 26ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு முடிவு எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் தேர்வுக்கு தகுதித் தேர்வுடன் போட்டித் தேர்வும் நடத்தப்படும் என 2018ல் பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது. அதற்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கலிடம் அவர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள் கேட்கப்படுதவதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

Breaking News LIVE: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

 


தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீ பெரும்புதூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோதண்டம் காலமானார்

ஸ்ரீ பெரும்புதூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. உடல்நல குறைவால் காலமானார். 



குன்றத்தூரை சேர்ந்தவர் கோதண்டம்(99). திமுகவைச் சேர்ந்த இவர் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் 1989 ம் ஆண்டு முதல், 1991 ஆம் ஆண்டு வரையும்,1996 ஆம் ஆண்டு முதல் 2001 வரை என இரண்டு முறை திமுக எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார். உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது அவர் காலமானார். 


இவரது மகன் தற்போது குன்றத்தூர் நகர மன்ற தலைவராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. திமுகவின் முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்த வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

டிச.31, ஜன.1 ஆகிய இரு நாட்களில் வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வள்ளுவர் சிலை வெள்ளி விழா..! டிச.31, ஜன.1 ஆகிய இரு நாட்களில் வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்ந்து நீடித்தால் கல்வியில் வடமாநிலங்களை விட நாம் பின்தங்கும் நிலை நிச்சயம் உருவாகும்! - ஜெயக்குமார்

CM Stalin : மக்களின் மகிழ்ச்சியால் சிலர் வயிறு எரிகிறார்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்

CM Stalin : மக்களின் மகிழ்ச்சியால் சிலர் வயிறு எரிகிறார்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் 


திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து சிலர் வயிறு எரிகிறார்கள். அநாகரீகமாக பேசுவதையே பண்பாடாக கொண்டு பேசுபவர் போல எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார் - முதல்வர் ஸ்டாலின் அறிக்கை.

ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் : மீனவர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு..!

ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் : மீனவர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு..!


இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், கைதை கண்டித்து மீனவர்கள் இன்று பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசிய, திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (30) என்பவர் கைது!

சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள தனியார் பார் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசிய, திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (30) என்பவர் கைது!

தமிழ்நாட்டில் 18ம் தேதி வரை மழை தொடர வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் வரும் 18ம் தேதி வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

Gold Price Fall :தங்கம் விலை சவரனுக்கு ₹1,080 சரிவு!

தங்கம் விலை சவரனுக்கு ₹1,080 சரிவு! ஒரு கிராம் தங்கம் ரூ.7085-க்கு விற்பனையாகிறது

இன்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அடையாறு, அண்ணா சாலை, எழும்பூர் புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Manipur Gunshoot : மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு - குக்கி சமூக ஆயுதக் குழுவினர் 10 பேர் சுட்டுக்கொலை!

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு - குக்கி சமூக ஆயுதக் குழுவினர் 10 பேர் சுட்டுக்கொலை!

Chennai Rain : சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மடிப்பாக்கத்தில் 6.6 செ.மீட்டர் மழைப் பதிவு!

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மடிப்பாக்கத்தில் 6.6 செ.மீட்டர் மழைப் பதிவு!

Breaking News LIVE 12th Nov : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..

Breaking News LIVE 12th Nov : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..  நவம்பர் பதினெட்டாம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது

சென்னையில் காலையிலும் விடாமல் பெய்யும் மழை! மக்கள் பெரும் அவதி!

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் காலையில் பணிக்குச் செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

Today News in Tamil: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைபிடிப்பு

Live News Tamil: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 13 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதனால், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Today School News: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்

Today School News: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Chennai School Holiday Today: சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

School Holiday Today: சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Background


  • சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை- வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

  • தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இன்று தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு

  • திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பல வீடுகள் இடியும் அபாயத்தில் உள்ளதால் மக்கள் பீதி

  • விஸ்தாரா நிறுவனத்தின் கடைசி விமானம் நேற்று இந்தியாவில் இருந்து லண்டன் புறப்பட்டது – இன்று முதல் ஏர் இந்தியா பெயரில் இயங்கும்

  • இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தொடர் தாக்குதல்; உயிர் பீதியில் மக்கள்

  • ஹிஸ்புல்லா தாக்குதல் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை

  • தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கிணற்றில் விழுந்த சிறுத்தை தப்பியோட்டம்

  • கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை வழக்கில் முன்னாள் காவல் ஆணையர் வினித் கோயல் சதி – விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சஞ்சய் ராய் பரபரப்பு குற்றச்சாட்டு

  • கேரளாவில் மதரீதியாக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப் குரூப் உருவாக்கிய விவகாரம் – 2 ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

  • அசாம் மாநிலத்தில் ரூபாய் 7 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

  • ஜார்க்கண்டில் நாளை வாக்குப்பதிவு; நேற்று மாலையுடன் ஓய்ந்தது தேர்தல் பரப்புரை

  • தெலுங்கு பேசும் மக்கள் மீது சர்ச்சை பேச்சு; நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

  • கனடாவில் கோயில்கள், இந்திய தூதரகங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் – காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்சிங் பன்னுன் மிரட்டலால் பரபரப்பு

  • பிரதமரின் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய வரும் 15ம் தேதியே கடைசி நாள் – வேளாண் துறை அறிவுறுத்தல்

  • கலைமாமணி விருது பெற்ற விகேடி பாலன் நேற்று இரவு காலமானார்

  • குஜராத்தில் இந்தியன் ஆயில் ஆலையில் சுத்திகரிப்பு பிரிவில் வெடிவிபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஊழியர்கள்


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.