Breaking News LIVE: மாணவிகளுக்கு ரூபாய் 1000 உதவித்தொகை - ரூபாய் 698 கோடி நிதி..!
Breaking News LIVE Updates: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட 2 செயற்கை கோள்கள் பற்றிய தகவல்களை கீழே காணலாம்.
மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு ரூபாய் 698 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அறிவித்துள்ளது.
மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவை இன்றுடன் நிறைவு பெறுவதாக அறிவிப்பு.
ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் முதன்முறையாக தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்திப்பு
நீட் தேர்வு வெளியான பின்னர் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 16 முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தள்ளிபோக வாய்ப்புள்ளது. விரைவில் புதிய பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் தரப்பு வழக்கை இன்று உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிக்கிறார்.
இவ்வழக்கை 2 வாரங்களில் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று முதல் வழக்கு விசாரணை தொடங்குகிறது.
காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலப் பதக்கங்களுடன் 5ஆவது இடத்தில் உள்ளது.
குத்துச் சண்டையில் நிட்டு, அமீத், ஐரீன், டேபிள் டென்னிஸ் போட்டியில் சரத் கமல், ஸ்ரீஜா தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளனர்.
பேட் மிட்டன், ஹாக்கி, டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.
மழை காரணமாக நீலகிரியில் உதகை, பந்தலூர், குந்தா, கூடலூர் பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே காணாமல் போன பார்வதி சிலை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை கத்திப்பாரா பஸ் மோதி வழிகாட்டி பலகை விழுந்ததில் தனியார் உயிரிழந்தார்.
அரசு பஸ் மோதி விளம்பரப் பலகை விழுந்தத்கில் பைக்கில் சென்று கொண்டிருந்த சண்முகசுந்தரம் காயமைடைந்தார்.
கோமா நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சண்முகசுந்தரம் உயிரிழந்தார். உயிரிழந்த சண்முகசுந்தரம் சென்னையில் தனியார் ஐஸ் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
Background
Breaking News LIVE Updates:
விண்ணுக்கு அனுப்பப்பட்ட 2 செயற்கைக்கோள்களில் இருந்து இன்னும் சிக்னல் வரவில்லை என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
மேலும், EOS -02, ஆஸாதிசாட் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு 50 நிமிடங்களுக்குப் பிறகும் சிக்னலைப் பெற முடியவில்லை என்றும், சிக்னலைக் கொண்டு வர இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கிய 6 மணிநேர கவுண்ட் டவுன் முடிந்த நிலையில் சரியாக 9.18 மணிக்கு 2 செயற்கைக் கோள்களுடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
இஓஎஸ் 02, ஆஸாதிசார் என்ற எடை குறைந்த இரண்டு செயற்கைக் கோள்களுடன் இந்த எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் முன்னதாக விண்ணில் ஏவப்பட்டது.
பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்
ஆஸாதிசாட் செயற்கைக் கோளை 75 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் கூட்டு உழைப்பில் உருவாக்கியுள்ளது.
8 கிலோ எடை கொண்ட ஆஸாதிசாட்டில் சோலார் பேனல்களை படம்பிடிக்கும் செல்ஃபி கேமரா உள்ளது. 142 கிலோ எடை கொண்ட EOS - 02 செயற்கைக்கோள் புவி கண்காணிப்புக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
பிஎஸ் எல்வி, ஜிஎஸ் எல்வி போன்று முதன்முறையாக இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளது. இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்று 25 மணிநேரம் இல்லாமல் குறைந்த கவுன்ட்டவுன் நேரத்தில் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
சிறிய ரக ராக்கெட் ஜிஎஸ்எல்வி
நாட்டின் தகவல்தொடா்பு, தொலையுணா்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள்கள் குறித்த திட்டங்களை செயல்படுத்து வரும் இஸ்ரோ நிறுவனம், இதற்காக பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.
இதில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரை செயற்கைக்கோள்களையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்த முடியும்.
இந்த நிலையில், 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைக்கோள்களை புவியின் தாழ்வட்ட சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்ல சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -