Breaking News Live | காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை - வானிலை ஆய்வுமையம்
Breaking News LIVE Tamil: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்..
சேலம் கருங்கல்பட்டியில் சமையல் சிலிண்டர் வெடித்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழப்பு
கட்டட இடிபாடுகளில் சிக்கிய ராஜலட்சுமி ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தீயணைப்பு வீரர் பத்மநாபனும் சடலமாக மீட்பு
தமிழ்நாடு 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவது வெகு தொலைவில் இல்லை
இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது
கோவை முதலீட்டாளர்கள் மாநட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாடு 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவது வெகு தொலைவில் இல்லை
இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது
கோவை முதலீட்டாளர்கள் மாநட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
வங்கக்கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.
நவ.26, 27ல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு
மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
- வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவையில் தொடங்கியது
முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.34,723 கோடிக்கு 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவ தாக்குதலில் உயிரிழந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது
பழனி சார்பில் அவரது மனைவி வானதிதேவி குடியரசுத் தலைவரிடம் பெற்றுக் கொண்டார்
கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவ தாக்குதலில் உயிரிழந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது
பழனி சார்பில் அவரது மனைவி வானதிதேவி குடியரசுத் தலைவரிடம் பெற்றுக் கொண்டார்
ஜெய்பீம் விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினர் மீது நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார் வன்னியர் சங்கத் தலைவர்
சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் 22 காரட் ரூபாய் 4 ஆயிரத்து 613க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 36 ஆயிரத்து 904க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூபாய் 79 குறைந்து ரூபாய் 4 ஆயிரத்து 534 குறைந்தது. இதனால், சவரன் தங்கம் ரூபாய் 632 குறைந்து ரூபாய் 36 ஆயிரத்து 272க்கு விற்கப்படுகிறது.
சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் குருநானக் கல்லூரிக்கு அருகில் சைக்களில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது எதிர் திசையில் வந்த பர்வீன் டிராவல்ஸ் பேருந்து மோதியது. இதில் பேருந்தின் சக்கரத்தில் ஏறியதில் நசுங்கி பெண் பலியானார்
சென்னை வேளச்சேரியில் சைக்கிளில் சென்ற பெண் மீது தனியார் பேருந்து மோதி விபத்து - சம்பவ இடத்திலேயே பெண் பலி
SyedMushtaqAliTrophy - ல் தொடர்ந்து 2வது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துகள் - முதலமைச்சர் ஸ்டாலின்
Background
Breaking News LIVE Tamil:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 3.1 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி தமிழக கடலோரப்பகுதி வரை நீடிப்பதன் காரணமாக இன்று ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.
தென்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யயும். மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. அதேசமயத்தில், வங்கக்கடல் பகுதியில் அடுத்த 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -