Breaking News Tamil LIVE:மஹிந்த ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேற தடை
Breaking News Tamil LIVE: இந்தியா உள்பட உலகம் முழுவதும் நடக்கும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள...
மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகிய இருவரும் வரும் 28 ஆம் தேதி வரை இலங்கையை விட்டு வெளியே செல்லக் கூடாது - உச்ச நீதிமன்றம்
சேலம் சுதா மருத்துவமனை ஸ்கேன் மையத்திற்கு சுகாதாரத்துறை சீல் வைத்தனர்.
இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலின் காவேரி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது பிரதமர் மோடி அவர்கள், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உடல் நலம் குறித்து தொலைப்பேசியில் நலம் விசாரித்தார்.
நுழைவு வரி செலுத்தவில்லை என அபராதம் விதித்ததை எதிர்த்த விஜயின் வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்.
2019 ஜனவரிக்கு முன் காருக்கு முழு நுழைவு வரி செலுத்தி இருந்தால் விஜய்க்கு அபராதம் விதிக்ககூடாது ஆனால் 2019 ஜனவரிக்கு பின்னும் வரி செல்லுத்தவில்லையென்றால் விஜய்க்கு அபராதம் விதிக்கலாம்.
பிரபல இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தன் காலமானார்..
உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தொடர்ந்த சொகுசு கார் வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 55வது நாளாக இன்றும் மாற்றமில்லாமல் தொடர்ந்து ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Background
இந்தியாவில் முதன் முதலில் கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 12ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு வந்த ஒருவருக்கு, குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளாதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் மத்திய சுகாதாரக் குழு உடனே கேரளா செல்வதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் குரங்கு அம்மை தொடர்பான
அதேநேரத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு உள்ளான நபரின் உடல் நிலை சீராக இருப்பதாக கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்டிருந்த நிலையில் அது தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதலில் ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் போன்ற நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்தது.
கொரோனா பெருந்தொற்றே இன்னும் முடிவடையாத நிலையில், தற்போது பரவி வரும் குரங்கு அம்மை இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. மேலும், மருத்துவக் கழிவுகள் மூலமும், நோய் பாதிக்கப்பட்ட விலங்குகளிலிருந்தும் மனிதர்களுக்கு பரவும் என்பதால் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தற்போது கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என, கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறையின் நிபுணர் குழு கேரளா விரைந்துள்ளது. மேலும், குரங்கு அம்மை பரவலை தடுக்க கேரள அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அனைத்து மாநிலங்களையும் மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -