Breaking LIVE : இந்திய சுதந்திரம் ஜனநாயகத்தின் வெற்றி - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
Breaking News LIVE Updates: இன்றைய நாளின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...
இந்திய சுதந்திரம் ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.
தருமபுரி அருகே, பாரதமாதா ஆலயத்தில், பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்த புகாரில் தமிழ்நாடு பாஜக மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஏற்கனவே பாஜக பிரமுகவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று தூக்கி எறியப்பட்ட காலணியை வேண்டுமென்றால் வந்து வாங்கிக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு நிதியமைச்சர் பி..டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சென்ற மீது காலணி தாக்குதலை பா.ஜ.க. ஒருபோது நியாயப்படுத்தாது என்றும் வன்முறையில் நம்பிக்கை இல்லை என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர் கடும் பாதுகாப்புடன் விமானம் மூலம் சென்னை கிளம்பினார்.
கரும்பு நிலுவை தொகை ரூ. 252 கோடியை விவசாயிகளுக்கு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 17 ம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் முக ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பில் தமிழக நலன் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வங்கி கொள்ளை தொடர்பாக துப்பு கொடுக்கும் பொது மக்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு என டிஜிபி அறிவித்துள்ளார்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு 5 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் உள்பட 15 பேருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட பாஜக தலைவராக இருந்த டாக்டர் சரணவன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாளை சுதந்திர தின விழாவை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று நாட்டு மக்களுடன் உரையாற்ற இருக்கிறார்.
மதுரை மாவட்ட பாஜக தலைவராக இருந்த டாக்டர் சரவணன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக முதலமைச்சர் விருதுக்கு சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு மாதத்திற்குள் புத்தகப் பைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
Background
சென்னையில் 85வது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
அதன்பின் 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். விலையைக் குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார்.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.
தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -