ஜனவரி 15 -ம் தேதி நடைபெற இருந்த யு.ஜி.சி. நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நெட் தேர்வுகள்:

மத்திய, மாநில அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்ற ’GC-National Eligibility Test (NET)' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) இந்தத் தேர்வின் அடிப்படையில் வழங்கப்படும். நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது.  குறிப்பாக ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களில் கணினி வழியில் நடத்தப்படும். 

இந்நிலையில், டிசம்பர் மாத தேர்வுகள் ஜனவரியில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் நடத்த என்.டி. எ. திட்டமிட்டுருந்தது.  தமிழ்நாடு மற்றும்‌ பிற மாநிலங்களில்‌ உள்ள மாணவர்கள்‌ மற்றும்‌ கல்வியாளர்கள்‌ பாதிக்கப்படுவதை தவிர்த்திடும்‌ வகையில்‌ பொங்கல்‌ திருநாள்‌ விடுமுறை நாட்களில்‌ நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி - நெட்‌ தேர்வு மற்றும்‌ பிற தேர்வுகளை வேறு தேதிகளில்‌ நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. 

பொங்கல் விழா‌ ஜனவரி 13 முதல்‌ ஜனவரி 16 வரை நான்கு நாட்கள்‌ கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 2025, 13 ஆம்‌ தேதி போகி பண்டிகையும்‌, 14 ஆம்‌ தேதி பொங்கல்‌ (தமிழ்ப்‌ புத்தாண்டு) பண்டிகையும்‌, ஜனவரி 15 ஆம்‌ தேதி திருவள்ளுவர்‌ தினமாகவும்‌ (மாட்டுப்‌ பொங்கல்‌) ஜனவரி 16 ஆம்‌ தேதி உழவர்‌ திருநாள்‌ / காணும்‌ பொங்கலாகவும்‌ கொண்டாடப்படுகிறது. இந்த தேதிகள் தேர்வுகள் எழுவது மாணவர்களுக்கு சிக்கலானது என்று பலரும் தெரிவித்த்னர். தேர்வு நடைபெறும் தேதியை மாற்றியமைக்க கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்குக் கடிதம் எழுதினார். 

நெட் தேர்வு ஒத்திவைப்பு:

தேர்வு தேதி மாற்றம் குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, ஜனவரி 15, 2025 அன்று நடைபெற ஒருந்த யு.ஜி.சி. நெட் தேர்வு (டிசம்பர் 2024) தேதியை வேறு ஒரு நாளில் நடத்துமாறு கோரிக்கை எழுந்தது. விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு,  தேசிய தேர்வு முகமை ஜனவரி 15, 2025 அன்று மட்டும் திட்டமிடப்பட்டிருந்த தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறும் தேர்வு ஏற்கனவே அறிக்கப்பட்ட அட்டவணையின்படி நடைபெறும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.