கேரளாவில் மூளைக் காய்ச்சல் எனப்படும் அமீபா நோய் தொற்று அதி வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் தொற்றால் இதுவரை 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 30 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர் என்று மாநில சுகாதார  அமைச்சகம் தெரிவித்துள்ளது. மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும் நெய்க்லீரியா ஃபோலேரி என்ற கிருமியால் ஏற்படும் இந்த அரிதான மற்றும் ஆபத்தான மூளைத் தொற்று நோயை கேரளா தற்போது எதிர்கொண்டு வருகிறது. கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Continues below advertisement

கேரளாவில் கடந்த 5 நாட்களில் மட்டும் 4 பேர் மூளையை தின்னும் அமீபா தொற்றில் உயரிழந்துள்ளது , பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை , கேரளாவில் 160 பேர் பாதிக்கப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 37 பேர் உயிரிழந்தனர். திருவனந்தபுரம் புறநகர்ப் பகுதியான கொடுமானைச் சேர்ந்த விஜயன் 57, என்பவர் சமீபத்தில் உயிரிழந்தார். அவருக்கு சமீபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சையின் போது அவருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

Continues below advertisement

இது பெரும்பாலனோரின் உயிரை பறிக்கும். இது அரிய வகை நோயாகும், மேலும் இது ஆரோக்கியமான குழந்தைகள், சிறார்கள், வயதில் முதிர்ந்தவர்களிடம் ஏற்படுகிறது" என ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூளையை தின்னும் அமீபா சூடான, தேங்கிய நன்நீரில்தான் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அசுத்தமான தண்ணீரை வாய்வழியாக உட்கொள்வதற்கும் இந்நோய்க்கும் தொடர்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சுத்தமான நீர்நிலைகளில் நீச்சல் அடிப்பது, குளிப்பது போன்றவற்றால் இந்த நோய் ஏற்படும் அபாயம் எனலாம். அதாவது, மூளையை தின்னும் அமீபா அந்த தண்ணீரில் இருக்கும்பட்சத்தில் ஆபத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்று பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. மூளையை தின்னும் அமீபா நோயால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் உயிரிழக்கின்றனர். அவர்கள் அவர்களுக்கு தலைவலி, காய்ச்சால், குமட்டல், வாந்தி போன்றவையே அறிகுறியாக உள்ளது.

ஆனால், பாக்டீரியா மூளைக்காய்ச்சலுக்கும் இதுவே அறிகுறி. எனவே சில நாள்களுக்கு பிறகே பொதுவான மூளைக்காய்ச்சலா அல்லது மூளையை தின்னும் அமீபா நோயா என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், இது பெரும்பாலும் தாமதமாகிவிடுகிறது. அதற்குள் நோயின் தீவிரம் அதிகமாகி, நோயாளிகள் உயிரிழந்துவிடுகின்றனர். கடந்த 2016ஆம் ஆண்டு முதல்முறையாக கேரளாவில் இந்த நோய் கண்டறியப்பட்டது.

இந்த நோய் பரவலின் எதிரொலி  கேரள சட்டசபையில் புயலைக் கிளப்பியது. ஆளும் LDF அரசாங்கம் சுகாதார அமைப்பை சரிவர கவனிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. காங்கிரஸ் தலைமையிலான UDF, இந்த ஆண்டு இதுவரை 19 பேர் இந்த அரிய நோயால் இறந்துள்ளனர் என்று கூறி, ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தது நடந்துள்ளது. அரசு விழிப்புணர்வு பிரச்சாரங்களை சரியாக செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினர். அதிக உயிரிழப்பு ஆபத்துகளை கொண்ட மூளையை தின்னும் அமீபாவின் (Primary Amoebic Meningoencephalitis) பரவல் அதிகமாகி வருவதை அடுத்து கேரள அரசு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.