அடர்ந்த காட்டின் நடுவே ஒரு நூலகம் இருந்தால் எப்படி இருக்கும்? ஒரு புதிய உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் புத்தகங்களை வாசிக்கவும் ஒரு இயற்கையான சூழல் அமைந்தால் எப்படி இருக்கும்? வாசிப்பு காதலர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரக்கூடியதுதான்.
ஒரு காட்டில் புத்தங்கள் நிறைந்த படகு ஒன்று இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது. நாட்டின் இரண்டாவது பெரிய சதுப்புநிலமான bhitarkanika-வில் ‘Wetland Mitra’ or ‘Friends of Wetlands’ என்ற அமைப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு அங்கிருந்த பழைய படகு ஒன்றை மீள் உருவாக்கம் செய்துள்ளது. பயன்பாடற்ற படகை குழந்தைகளின் நூலகமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
பிதர்கனிகாவின் படகு நூலகம்:
படகு நூலகம் Dangamal-உல் உள்ள அம்மாநிலத்தின் சுற்றுச்சூழல் சுற்றுலா தளத்தில் பயன்படுத்த முடியாத படகை மறுசீரமைக்கப்பட்டு நூலகமாகியுள்ளது. இதில் புத்தகங்கள் வைப்பதற்காக தனியே அலமாரிகல் உருவாக்கப்பட்டு அந்த வனப்பகுதிக்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படகு நூலகத்தில் படிகளுடன் கூடிய மாடி கூட இருக்கிறது. அங்கும் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நூலகத்தில் 1500 புத்தகங்கள் உள்ளன, அவை அரசாங்கத்தால் நடத்தப்படும் பிடர்கனிகா சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்கத்தால் நிதியில் வாங்கப்பட்டதாகும்
குழந்தைகள் நூலகத்திற்கு வருவதை ஊக்குவிக்கவும், அவர்களைக் கவரும் வகையில் படகுக்கு பிரகாசமான வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. புத்தகங்களை வைப்பதற்காக படகின் 32 அடுக்குகள் உடன் ஒற்றை அறை உருவாக்கப்பட்டுள்ளது. அவை குழந்தைகள் பயன்படுத்த எளிதான வகையில் அலமாரிகளும் வைக்கப்பட்டுள்ளன.
ஒடியா, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் படப் புத்தகங்கள் உள்ளன. மிகக் குறைந்த அலமாரிகளில் மூன்று முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அதன் மேலே உள்ள அலமாரிகளில் ஐந்து முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கான நாட்டுப்புறக் கதைகள், சிறுகதைகள் மற்றும் சுயசரிதைகள் ஆகியவை உள்ளன. 10 முதல் 15 வயது வரை உள்ளவர்களுக்கான புத்தகங்கள் உயர் அடுக்குகளில் வைக்கப்பட்டுள்ளன, மேலும் கலைக்களஞ்சியங்கள், இயற்கை, பாதுகாப்பு, அட்லஸ், அறிவியல் திட்டங்கள் மற்றும் சுயசரிதைகள் பற்றிய புத்தகங்கள் உள்ளன.
மேல் அடுக்குகளில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான புத்தகங்கள் உள்ளன.
பள்ளிகளில் கோடை விடுமுறையின் போது அனைத்து நாட்களிலும் படகு நூலகம் திறந்திருக்கும் என்றும், ஆகஸ்ட் 1 ஆம் தேதி சுற்றுலா சீசன் தொடங்கும் போது பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் என்றும் வன அதிகாரி கூறினார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், இரண்டு முதல் மூன்று பள்ளிகளின் மாணவர்கள் படகு நூலகத்தைப் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நூலகத்தின் நோக்கம் குழந்தைகளை இயற்க்கையுடன் இணைப்பதே என்கின்றர் இந்தப் படகை வடிவமைத்தவர்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்